சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Dec 2014

'கத்தி' பட பாணியில் ஒரு கிடு கிடு போராட்டம்!


த்தி திரைப்படத்தில், எம் என் சி நிறுவனங்கள் குளிர்பான தயாரிப்பிற்காக நிலத்தடி நீரை உறிஞ்சுவதை எதிர்த்து, தன்னூத்து எனும் கிராம மக்கள்போராடுவதாக காட்டப்பட்டிருக்கும். 

ஆனால்  நிஜத்தில் திருச்சி அருகே சூரியூர் என்ற கிராம மக்கள், திருச்சி எல். பாட்டிலர்ஸ் எனும் பெப்சி தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக  பல வருடங்களாக போராடி வருகின்றனர் என்பது பலரும் அறியாதது 

திரைப்படம் என்பதால்  தன்னூத்து கிராம மக்களுக்கு 3 மணி நேரத்திற்குள் ஒரு தீர்வு கிடைத்தது. ஆனால் வருடங்கள் பல கடந்தும்  சூரியூர் மக்களின் போராட்டங்களுக்கு இன்னமும் ஒரு விடிவு பிறக்கவில்லை என்பது செவிட்டில் அறையும் வேதனை. 


திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தின் பின்புறம், சூரியூர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2010 ல் துவக்கப்பட்டது எல். பாட்டிலர்ஸ் என்ற இந்த பெப்சி தயாரிப்பு நிறுவனம். முன்னாள் காங்கிரஸ் எம்.பி அடைக்கலராஜுக்கு சொந்தமான இந்த நிறுவனம், தற்போது அவரது மகன்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தால் சூரியூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரத்தில் உள்ள சின்ன சூரியூர், கும்பகுடி. வீரம்பட்டி, காந்தலூர், எலந்தப்பட்டி, பட்டவெளி உள்ளிட்ட பல கிராமங்களும் பாதிக்கப்படைந்துள்ளன.   விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட இப்பகுதிகளில், அதற்கு ஆதாரமாக விளங்குவது கிணற்று பாசனம்.

ஆனால் இதெல்லாம்  எல். பாட்டிலர்ஸ் வருவதற்கு முந்தைய நிலவரம். எல். பாட்டிலர்ஸ் வருகைக்குப்பின் எல்லாமே தலைகீழானது. தங்கள் கிராமங்களை மீட்டெடுக்க பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து இந்த நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர் இப்பகுதி மக்கள்.

சூரியூர் பஞ்சாயத்து தலைவரான  சாரதாதேவி ராமையா, “எங்க ஊர் எல்லைக்குள் இருக்கும் கம்பெனி வளாகத்திற்குள் 6 போர்வெல், அதே வளாகத்தில் கும்பக்குடி எல்லையில் 5 போர்வெல்கள் என ராட்சத போர்களை அமைத்து 24 மணிநேரமும் கணக்கின்றி நீரை உறிஞ்சி எடுக்கின்றனர் அந்த நிறுவனத்தினர். இதனால இப்பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றாக பாழாகிடிச்சி. சகல சவுகர்யங்களுடன் நிறுவனம் இயங்கிக்கிட்டு இருக்க, அதே நேரம் இந்த மண்ணில் பிறந்த நாங்க தினந்தோறும் தண்ணீருக்காக தவியா தவிக்கிறோம்என்றார் வேதனையான குரலில். 

இதே ஊரைச்சேர்ந்த விவசாயி பிச்சை எனபவர் “ 63 வயசாகுது எனக்கு, இத்தனை வருஷத்தில கடந்த 4 வருசமா கிணத்துல தண்ணி இல்லாம, விவசாயம் பண்ண முடியாம நாங்க படுற பாட்ட வார்த்தையால சொல்ல முடியாது. விவசாயம் பண்ணமுடியலேன்னு பாதி நிலத்தை ஒத்திக்கு விட்டேன். ஒத்திக்கு வாங்குனவங்க. தண்ணியிருந்தாதான விவசாயம் பண்ணமுடியும். தண்ணியில்ல பணத்தை திருப்பிக்கொடுன்னு கேட்குறாங்க. இப்படி விவசாயத்தை நம்பி இருக்க எங்களைப்போல உள்ளவங்களுக்கு இப்ப எந்த வழியும் இல்ல. அந்த ஒரு குடும்பம் பிழைக்க நாங்க ஓராயிரம் குடும்பம் சாவதாஎன்றார் விரக்தியாக. 

அடுத்து பேசிய கணபதி, “இந்த கம்பெனி வர்றதுக்கு முன்னாடிவரை எங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்திலும் விவசாயம் பண்ணினோம், அந்தளவுக்கு தண்ணி வசதியிருந்தது. வருஷத்துக்கு 150 மூட்டைக்கு மேல நெல் விளையும். ஆனால் இந்த பெப்சி கம்பெனி வந்தபிறகு எல்லாம் நாசமா போச்சி. 30குழி நிலத்துல, நெல்லு நடுவதற்கும் கூட தண்ணி பத்தமாட்டேங்குது. கம்பெனியை மூட வலியுறுத்தி எத்தனையோ போராட்டங்களை நடத்திட்டோம், முதலமைச்சர் வரைக்கும் மனு கொடுத்து பார்த்தாச்சு. ஒரு விடிவும் பிறக்கல. இத்தனைக்கும் அந்த கம்பெனி அனுமதியில்லாம இயங்கிட்டு இருக்கறதா  அதிகாரிகளே சொல்லுறாங்க. ஆனால் நடவடிக்கை எடுக்க தயங்குறாங்கஎன அலுத்துக்கொண்டார் ஆதங்கமான குரலில்.

இந்த பிரச்னை குறித்து கலெக்டர், நகர்புற ஊரமைப்பு ஆணையர், மாசுகட்டுப்பாட்டு வாரியம் எல்லாத்துக்கும் மனுக்கொடுத்துக்கிட்டு வர்றோம். அமைச்சர் எம்.சி சம்பத்தையும், எங்க எம்.பி குமார் உள்ளிட்டோரை சந்தித்தி நியாயம் கேட்டோம். அவங்க நடவடிக்கைக்கு உத்தரவிட்டாலும் கீழுள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். அதுக்கூட பரவாயில்லை. எங்க நடவடிக்கைகளை கம்பெனிகாரங்க கிட்ட போட்டுக்கொடுக்குறாங்க. கம்பெனியில் வேலை செய்யிற இதே ஊர்க்காரங்களைகம்பெனியை இழுத்து மூடிட்டா உங்களுக்கு வேலை போயிடும்னு சொல்லி அவர்களை எங்களுக்கு எதிராக கிளப்பி விட்டிருக்காங்க. 


பல கட்ட போராட்டங்களுக்குப்பின் கம்பெனியில் ஆய்வு நடத்திய திருவெறும்பூர் பி.டி. ரெங்கநாதன், அனுமதியின்றி நடத்துவதா கம்பெனி நிர்வாகிகள் மீது 3.9.2014 அன்று நாவல்பட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் ஒரு நடவடிக்கையுமில்லைஇந்த கம்பெனியால் எங்க கிராமத்தில் ஒட்டுமொத்த மக்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தமிழக அரசு இந்த பிரச்னையை தீர்க்க உடனடியா உத்தரவிடனும்என்றார் திருவெறும்பூர் அதிமுக அம்மா பேரவை ஒன்றிய துணை தலைவர் அழகர் 

இந்த பிரச்னைக்காக மக்களை திரட்டி போராடிவரும் தண்ணீர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் வினோத்ராஜ் சேஷன், "இந்தபிரச்னைக்காக அந்த பகுதி மக்களோடு தண்ணீர் இயக்கமும் போராடிவருகின்றது. 2 ஆயிரம் சதுர அடி கட்டிடம் கட்டினாலே நகர் ஊரமைப்பு துறையிடம்,அனுமதி வாங்கவேண்டும் என்பது அரசு விதி. ஆனால் 1லட்சம் ஆயிரம் சதுர அடியில் செயல்படும் இந்த நிறுவனம், அப்படி எந்த அனுமதியையும் வாங்கவில்லை. அதோடு இயந்திரங்களை பயன்படுத்திட யூனியன் அலுவலகத்தில் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அதையும் அவர்கள் பெறவில்லை. அந்த கம்பெனிக்கு தமிழ்நாடு மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி மார்ச் 31 ஆம் தேதியே காலாவதி ஆகிவிட்டது. அதை புதுப்பிக்கவும் இல்லை. தொடர் போராட்டங்களுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், விசாரணை நடத்த உத்தரவிட்டார்

மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு பொறியாளர், நிலத்தடி நீர் செயற்பொறியாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகள் கொண்ட இக்குழு, 24 ஏக்கரிலான இந்த இடத்தில் பெப்சி கம்பெனி அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து அறிக்கை வழங்கியது. ஆனாலும் அதிகாரிகள் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. விரைவில் எங்கள் போராட்டம் தீவிரமடையும், கூடவே இந்த பிரச்னையோடு தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை பாதுக்காக்க மாநிலம் தழுவிய போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். இனி இவர்களை நம்பி பலனில்லை என்றுதான் சமூக வலைதளங்களில் மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றோம்என்றார் காட்டமாக..

இந்நிலையில் வினோத் சேஷன் தனது ஃபேஸ்புக்கில், எல். பாட்டலர்ஸுன் 20 மில்லி திருச்சி சூரியூர் மக்களின் ரத்தம், ரூபாய் 12 என்றும், நிபந்தனைக்கு உட்படாதது என்றும் குறிப்பிட்டு நிலைத்தகவலை ( ஸ்டேட்டஸ்) வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்கடந்த 9 ஆம் தேதி ஞாயிறன்று சூரியூர் கிராம பொதுமக்கள், பெப்சி நிறுவனத்திற்கு எதிராக 'கத்தி' பட பாணியில் களமிறங்கினர்.

திருச்சி சூரியூர்  சமுதாயக்கூடத்தில் கூடிய பொதுமக்கள், தண்ணீர் இயக்கம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வந்திருந்த சமூக ஆர்வலர்களுடன் கலந்துபேசி, பெப்சி கம்பெனிக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்துவதென ஆலோசனை நடத்தினர். 


தூக்கு போடும் போராட்டம், பெப்சி கம்பெனிக்கு செல்லும் சாலைகளை சேதமாக்குவது, பெப்சி கம்பெனியை இழுத்து மூடும்வரை தொடர் போராட்டங்கள் நடத்துவது, சமூக வலைதளங்கள் மூலம் பெப்சியின் கம்பெனியின் குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு என முடிவெடிக்கப்பட்டது. திட்டமிட்டப்படி களம் இறங்கிய 82 க்கும் மேற்பட்ட பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் போராட்டங்களால் பெப்சி கம்பெனி பிரச்னை, மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.



No comments:

Post a Comment