சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Dec 2014

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2014 - 2017 மிதுனம்

மாதானத்தை விரும்பும் மிதுன ராசிக்காரர்களே... 16.12.14 முதல் 17.12.17 வரை, 6ல் அமர்ந்து பல இன்ப அதிர்ச்சிகளை அள்ளித் தரவுள்ளார், சனிபகவான்.
சிந்தனை சிறப்புறும். முக மலர்ச் சியுடன் திகழ்வீர்கள். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்றுசேர்வர்.அழகு, ஆரோக்கியம் கூடும்.மாறுபட்ட  அணுகுமுறைகளால் பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இதுவரை ஏமாற்றி வந்த உறவுகளும், நட்பு வட்டாரமும் வலியவந்து மன்னிப்பு வேண்டுவர்.

பூர்வ புண்ய ஸ்தானமான 5ம் வீட்டைவிட்டு சனி விலகுவதால், குழந்தை பாக்கியம் ஸித்திக்கும்.பூர்வீகச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவீர்கள். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகளுக்கு அழகான மணமகன் அமைவார். மகனுக்கு நல்ல வேலை அமையும். அதிகவட்டிக் கடனை பைசல் செய்ய வழி வகை பிறக்கும்.  
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்களின் சப்தம ஜீவனாதிபதியான குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதம், 6ம் வீட்டில் சனி செல்வதால் திடீர் இழப்புகள், இனம்புரியாத பயம், பண விரயம், மனைவிக்கு முதுகு, மூட்டு வலி, சிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும்.
14.6.15 முதல் 5.9.15 வரை சனி உங்கள் ராசிக்கு 5ம் வீடான துலாம் ராசியில், விசாகம் 3ம் பாதத்தில் செல்வதால், முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும். கர்ப்பிணிகள் உணவில் கட்டுப்பாடைக் கடைப்பிடிக்குவும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தடைப்பட்ட காரியங்களெல்லாம் நிறைவேறும். உங்களின் அஷ்டமபாக்யாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு கட்ட, தொழில் தொடங்க வங்கிக் கடன் கிடைக்கும்.  
15.3.15 முதல் 29.04.15 வரை; 19.5.16 முதல் 12.08.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால், திட்டமிடாத பணிகளில் ஈடுபடாதீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் ராசியாதிபதியும், சுகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வ தால் எதிர்ப்புகள் குறையும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலை அமையும். ஷேர் மூலம் பணம் வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். தாய்வழிச் சொத்துக்களைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும்.    
8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் வேலைச் சுமை, உறவினர் பகை, சிறு விபத்துகள் வந்து நீங்கும். சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்க சான்றிதழ்களை சரி பார்க்கவும்.  
சனி 3ம் வீட்டைப் பார்ப்பதால், தைரியம் கூடும். புதுப் பதவி தேடி வரும். எனினும் ஒருவித மன இறுக்கம் ஏற்படும். சனி 8ம் வீட்டைப் பார்ப்பதால் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் சட்ட நிபுணர் களை ஆலோசிப்பது நல்லது. சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் சுப நிகழ்ச்சிகளை எடுத்து நடத்துவீர்கள்.

வியாபாரத்தில், புதிய சரக்குகளை் கொள்முதல் செய்வீர்கள். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும். முக்கிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டு, விரும்பிய இடமாற்றம், சம்பளம்பதவி உயர்வு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.    
கன்னிப்பெண்களுக்கு வேற்று மாநிலம் அல்லது அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பு, போட்டிகளில் வெற்றி உண்டு!
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி சவாலான காரியங்களையும் எளிதாக முடிக்கவைப்பதுடன், அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயிலுக்குச் சென்று ஸ்ரீபெருமாளை வழிபட்டு வாருங்கள். ஏழை மாணவியின் கல்விக்கு உதவுங்கள்.



No comments:

Post a Comment