சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Dec 2014

இவர் எத்தனையாவது புலிகேசி சொல்லுங்கள்?

கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அதிரடிக்குப் பேர் போனவர். திடீரென ஒருநாள் தென் கொரியா எல்லையில், பீரங்கி மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு, குறி பார்த்து அந்நாட்டை அலற வைத்தார். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத ஏவுகணை பரிசோதனை செய்தார். ஆனால் அது சரிப்பட்டு வரவில்லை.


அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. ஆனால் கிம் கண்டு கொள்ளவில்லை. திடீரென மூன்று மாதங்கள் காணமால் போய் விட்டார். இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை. 

எங்கே இருக்கிறார் என மீடியாவுக்குக் கூட சொல்ல வில்லை. ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார் என்று அவரது சித்தப்பாவிற்கு மரணத் தண்டனை விதித்தார். 

மரணத் தண்டனை என்றால் தூக்கோ, சுட்டுக் கொல்வதோ இல்லை. பத்து நாட்கள் பட்டினி கிடந்த நாய்களின் மத்தியில் ஆளை இறக்கி விடுவது. சொல்லும்போதே நாக்கு வறள்கிறதா.........?

இப்படி கிம் பண்ணுவதெல்லாம் பரபர ரகம்தான். இப்போது அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறார் கிம்.

புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமது பெயரான கிம் ஜான் உன் என்று பெயரிடக்கூடாது என்றும், ஏற்கனவே அந்தப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் தமது பிறப்புச் சான்றிதழ் உட்பட அனைத்து ஆவணங்களிலும் அதை மாற்ற வேண்டும் என்பதுதான் அந்த அதிரடி உத்தரவு. 


நம் ஊரில் ஆசைப்பட்டு அரசியல் தலைவர்களின் பெயர்களை குழந்தை களுக்கு வைப்பார்களே அதே போல, கிம்மின் தந்தை கிம் ஜான் இல் பெயரை (இதற்கு முன் வடகொரிய தலைவர் அவர்தான்!) தங்கள் குழந்தைகளுக்கு சூட்டியிருந்தார்கள் வட கொரிய மக்கள்.

என் தாத்தா பேர், அப்பா பேர், என் பேர் எதையும் வைக்கக் கூடாது என்பது கிம் மின் கறார் உத்தரவுஇதில் கூத்து என்னவென்றால் வட கொரியாவில் கிம் என்பது நம்ம ஊர் முருகன் மாதிரி பரவலாக பயன்படுத்தும் பெயர். 

கிம்மின் இந்த உத்தரவால் நாட்டில் இருக்கும் 20 சதவிகித கொரியக் குடும்பங்கள் தங்கள் பெயரை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறது. 

அதே போல ஜாங் உன் எனும் பெயரும் அங்கு நிறையப் பேருக்கு இருக்கிறது.

கிம் என்று இருந்தாலே மாற்ற வேண்டுமா? இல்லை தலைவரின் முழுப் பெயர் இருந்தால் மாற்ற வேண்டுமா? எத்தனை நாட்களுக்குள் மாற்றுவது? மாற்றா விட்டால் என்ன கிடைக்கும்? என எந்தத் தகவலையும் அரசாங்கம் தெரிவிக்காததால் படு குழப்பத்தில் இருக்கிறார்கள் வட கொரிய மக்கள்.



No comments:

Post a Comment