சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

9 Dec 2014

டைட்டிலுக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லீங்க!


ருணாநிதி குடும்பத்தில் இருந்து சினிமாவில் என்ட்ரி ஆகும் இன்னொரு குடும்ப வாரிசு       ரக்ஷன்.மு..ஸ்டாலினின் மனைவி துர்காவின் தம்பி மகனான இவர் விரைவில் வெளிவரவிருக்கும் 'திருட்டு ரயில்படத்தின் நாயகன். ''ஏற்கெனவே கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தவர்னு .தி.மு..காரங்க கலாய்ப்பாங்க. நீங்க வேற 'திருட்டு ரயில்படத்தில் நடிக்கிறீங்களே?'' என்ற முதல் கேள்விக்கே அதிர்கிறார் ரக்ஷன்.


''பாஸ்... படத்துக்கு முதல்ல 'நெல்லையப்பா நண்பர்கள் குழுனுதான் பெயர் வெச்சிருந்தோம். படத்தோட கதைக்கும் திருட்டு ரயிலுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்ததினால 'அதையே தலைப்பா வெச்சா என்னனு டைரக்டர்தான் முடிவெடுத்தார். இதுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. செய்யாத தவறுக்காக நாலு நண்பர்களை போலீஸ் துரத்த, சூழ்நிலையால அவங்க திருட்டுத்தனமா ரயில் ஏறி சென்னை வர்றாங்க. அங்கே அதைவிட பெரிய பிரச்னை அவங்களுக்குக் காத்துக்கிட்டு இருக்கு. எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நாலுபேரும் எப்படி தப்பிக்கிறாங்கங்கிறதுதான் படத்தோட கதை. இப்போ சொல்லுங்க, 'திருட்டு ரயில்தானே கதைக்கு பொருத்தமா இருக்கு?'' ஒவ்வொரு வார்த்தைக்கும் கிலோமீட்டர் கணக்கில் இடைவெளிவிட்டுப் பேசுகிறார் ரக்ஷன்.

''சினிமாவில் நடிக்கிறது சின்ன வயசு கனவு. அதனால, இன்ஜினீயரிங் படிப்பை பாதியில விட்டுட்டு கூத்துப்பட்டறைக்குப் போயிட்டேன். நான் 'கருணாநிதியின் உறவினர்னு தெரிஞ்சா, சின்சியரா சொல்லித்தராம விட்டுருவாங்களோனு, கூத்துப்பட்டறையில் இருக்கிற யார்கிட்டவும் என் பின்னணி பத்திச் சொல்லலை. இந்த 'திருட்டு ரயில்கதையைக் கேட்டதும் அறிமுகமாகிறதுக்கு சரியான கதைனு தோணுச்சு. என்னோட ஒரிஜினல் பெயர் சஞ்சய். டைரக்டர் திருப்பதியும் அப்பாவும் சேர்ந்து ரக்ஷன்னு மாத்திட்டாங்க'' என்றவரிடம், ''கலைஞர் குடும்பத்துக்கும் உங்களுக்குமான நெருக்கம் எப்படி?'' எனக் கேட்டேன்.

''கலைஞர் ஐயா வசனம் எழுதியிருக்கிற எல்லாப் படத்தையும் பல தடவை பார்த்திருக்கேன். அவருடைய பேச்சு, தமிழ் ஆர்வம் எல்லாமே பிடிக்கும். ஒருதடவை என்னைப் பார்த்து, 'வாய்யா... ராஜமூர்த்தி மகனா நீ... அப்படியே உங்க அப்பா மாதிரியே இருக்கியேனு சிரிச்சார். நான் நடிக்க வந்தது அவருக்குத் தெரியாது. படத்தை முடிச்சுட்டு அவர்கிட்ட காட்டி ஆசீர்வாதம் வாங்கணும்னு காத்துட்டு இருக்கேன். ஹீரோவா நடிக்கிறது துர்கா அத்தைக்குத் தெரியும். 'எந்த விஷயம் பண்ணாலும் அதுல தீவிரமா இருக்கணும்னு அட்வைஸ் பண்ணாங்க. கலைஞர் ஐயா, துர்கா அத்தை, உதயநிதி எல்லோருடைய ஆசீர்வாதத்தோட அடுத்தடுத்து நல்ல நல்ல படங்கள் பண்ணி, பெரிய நடிகர் ஆகணும்ங்கிறதுதான் ஒரே ஆசை. மத்தபடி, அரசியல் குடும்பத்து வாரிசுங்கிறதால 'அரசியல்கேள்விகளைக் கேட்டுடாதீங்க. அந்த ஏரியா நமக்கு செட் ஆகாது'' என்கிறார்.



வெவரம்தான்!


No comments:

Post a Comment