சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

10 Dec 2014

60 வயதுக்கு மேல் டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை: ரஜினி பேச்சு

அறுபது வயதை கடந்த பின்னர் டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை என்று லிங்கா பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'லிங்கா' படம் ரஜினியின் பிறந்த நாளான வரும் 12 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய  மொழிகளில் வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழா ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்றிரவு  நடந்தது.

இந்த விழவில் ரஜினிகாந்த் பேசுகையில், "நான் நான்கு வருடங்களுக்கு  மேல் படங்களில் நடிக்கவில்லை. இடையில் கோச்சடையான் வந்தது. அது அனிமேஷன் படம். நேரடி படம் ஒன்றில் நடிக்க ஆர்வம் இருந்தது. அப்போதுதான் கே.எஸ்.ரவிக்குமார் என்னை அணுகினார். லிங்கா  படத்தின் கதை பற்றி சொன்னார். 6 மாதத்தில் படத்தை முடிப்பதாக இருந்தால் நடிக்கிறேன் என்றேன். அத்தனை நாளுக்குள் படத்தை முடிக்க முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. காரணம் கதை அப்படி இருந்தது. இரண்டு கால கட்டத்தை உள்ளடக்கிய படமாக இருந்தது. ஒரு கதை 1940க்கு முன்பு நடப்பது போன்றும் இன்னொரு கதை இன்றைய கால கட்டத்தில் நடிப்பது போன்றும் இருந்தது.

இந்த கதைக்கு அணைக் கட்டு வேண்டும், யானைகள், குதிரைகள்பிரமாண்ட அரங்குகள் வேண்டும். ஆயிரக்கணக்கான நடிகர்களும் பணியாற்ற வேண்டி இருந்தது. இவ்வளவையும் வைத்து 6 மாதத்தில் படத்தை முடிப்பது சவாலான காரியம். கே.எஸ்.ரவிக்குமார் அந்த சவாலை ஏற்றுக் கொண்டார்ஆறு மாதத்திலேயே படத்தை முடிந்து விட்டார். என்னையும் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா போன்ற பிசியான நடிகைகளையும் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு உள்ளிட்ட பெரிய தொழில் நுட்ப கலைஞர்களையும் ஒன்று சேர்ந்து படத்தை திட்டமிட்டபடி முடிந்தது பெரிய சாதனை. 


எனக்கும் இது சவாலான படம். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சோனாக்ஷி சின்ஹாவை சிறு வயதிலேயே தெரியும். என் மகள்களுடன் வளர்ந்தவர். அவரோடு காதல் டூயட் பாட வேண்டும் என்றதும் வெட வெடத்து போனேன். நான் அறிமுகமான முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தில் கூட இப்படி ஆனது இல்லை. அவரோடு சேர்ந்து ஆட ரொம்ப சிரமப்பட்டேன். அவருக்கு இணையாக என் தோற்றத்தை மாற்ற மேக்கப் மேன் காஸ்ட்யூம் நிபுணர்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப குழுவினர் மிகவும் சிரமப்பட்டனர்.

அறுபது வயதை கடந்த என்னை இப்படி டூயட் பாட வைத்தது கடவுள் எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை. ஓடும் ரயிலில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையெல்லாம் விட  சோனாக்சியுடன் டூயட் பாடுவது  சிரமமாக இருந்தது. இவ்வளவுக்கும் நடுவில் திட்டமிட்டபடி படத்தை முடித்த கே.எஸ்.ரவிக்குமாரை பாராட்டுகிறேன். ஹாலிவுட்டிலும் இது போன்ற பிரமாண்ட படங்கள்  நிறைய வருகின்றன. அவற்றை முடிக்க நிறைய  காலம் எடுக்கிறார்கள். தெலுங்கில் தயாராகும் படத்தை அவற்றோடு ஒப்பிடக் கூடாது. அது வேறு மாதிரி கதை. அப்படத்தை இயக்கும் ராஜாமவுலி சிறந்த டைரக்டர். அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்றார்.



No comments:

Post a Comment