சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Dec 2014

ஓட்ஸ் என்னும் அரக்கன். அதிர்சிக்குரிய தகவல்

இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது.
ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் , ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் விளையும் ஒரு பயிர் . அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது . சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது . அதையும் கூட நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்து கொள்ள முடியாது . சில கிராம் மட்டுமே ( ஸ்பூன் அளவு ) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம் . அதிலும் சத்து எதுவும் கிடையாது . பசியை கட்டுபடுத்தும் குணம் மட்டுமே இதற்கு உண்டு .
அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ் - விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது . சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் சாப்பிடுவதற்கு சமம் . ஒரு கிலோ ராகி மாவு வெறும் 35 ரூபாய் தான் . 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய் . எவ்வளவு மடங்கு விலையில் வித்தியாசம் பாருங்கள் .

எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் (அவர்கள் அதிகம் சாப்பிடுவது கிடையாது ) ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை அதிக அளவில் உள்ளது . சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் , மருத்துவர்கள் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கி விட்டன . [குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட் . குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்தது போல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது. அந்தந்த நாடுகளிருந்து இங்கு நம் இந்தியாவுக்கு வர ஆகும் எரிபொருள் செலவு , MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை அநியாய விலைக்கு நம் தலையில் கட்டுகின்றன.
அதைவிட ராகி , கம்பு , சோளம் , திணை , வரகு , சாமை போன்ற நம் நாட்டு தானியங்கள் எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை . விலையும் குறைவு !!!
சத்துநிறைந்த நம் பாரம்பரிய உணவு இருக்க சக்கையை உண்டு நம் பணத்திற்கும் உடல்நலத்திற்கும் வேட்டு வைக்கலாமா !!! ?

இதை என்றென்றும் சிந்தையில் இருத்துங்கள் !!!

அந்நிய பொருட்களை அநியாய விலைக்கு வாங்குவதை அறவே நிறுத்துங்கள் !!!


No comments:

Post a Comment