இனிய சொல்லும் செயலும் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலும் சனிபகவான் 10ம் வீட்டில் அமர்கிறார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனப் போராட்டங்கள் ஓயும்.
குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும். கணவன்மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்னை விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தந்தையாரின் உடல் நலம் சீராகும். பிதுர்வழிச் சொத்தில் தடைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவார்கள்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்
16.12.14 முதல் 24.1.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை, உங்கள் தனாதிபதி குருவின் சாரத்தில், விசாகம் 4ம் பாதம் 10ம் வீட்டில் சனி செல்வதால், சமயோசிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். 14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 9ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.
30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாக நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்துச் செல்வதால் புது முதலீடுகளைத் தவிர்க்கவும். பிரிவுகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். திருமணம் கூடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும்.
உங்கள் ராசியாதிபதியும் விரயாதிபதியுமான சனி சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை மற்றும் 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவீர்கள். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் அஷ்டமபூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால், மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி வக்ரமாகி செல்வதால், தயக்கம், தடுமாற்றம், சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
சனி 4ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத் தைக் காப்பாற்ற வேண்டி வரும். சனி 7ம் வீட்டைப் பார்ப்பதால் தம்பதிக்குள் அனுசரித்துப் போகவும்.சனி 12ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகமாகும்.
வியாபாரத்தில், விளம்பர யுக்தி களால் லாபத்தை உயர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
10ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. என்றாலும் திடீர் இடமாற்றம் உண்டு. சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும்.
கன்னிப் பெண்களுக்கு, தள்ளிப் போன திருமணம் கூடி வரும்.சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
மொத்தத்தில் இந்த சனிப் பெயர்ச்சி, பண வரவையும், புதிய சகாப்தத்தைப் படைக்கும் வல்லமையையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: ஆரணிபடவேடு வழியில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் யந்திர சனீஸ்வரபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். ஆதரவு இல்லாத மூதாட்டிகளின் பசியாற்ற இயன்றளவு உதவி செய்யுங்கள்.
No comments:
Post a Comment