சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Dec 2014

நீரில் மிதக்கலாம்...நீந்திக் களிக்கலாம்: இயற்கையின் அதிசயங்கள்!

றிவியல் வளர்ச்சியில் எத்தனை புதுப்புது விஷயங்களை நாம் அறிந்துகொண்டாலும் இயற்கை நமக்கு தரும் விஷயங்கள் அலாதியானவை. எக்காலத்திலும் அதன் பிரமிப்பு நம்மை விட்டு அகலாது. அப்படி சில இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும்போது நமக்கே ஆச்சர்யம் ஏற்படும்.
அவற்றில் சில கீழே..

லேக் ரெட்பா

ஆப்ரிக்க கண்டத்தில் இருக்கும் செனகல் நாட்டில் பிரபலமானது இந்த பிங்க் ஏரி. பொதுவாக தண்ணீருக்கு நிறமே கிடையாது ஆனால் இந்த ஏரியின் இந்த இளஞ்சிவப்பு நிறத்திற்கான காரணம்? கடலின் நீல நிறந்திற்கு வானத்தின் நீல நிறம் காரணமாக இருப்பது போல இதற்கும் ஒரு காரணம் உள்ளது

ஏரியில் 'துனாலியல்லா சாலிணா' என்ற நுண்ணுயிரிகள் அதிகம் அவை சூரிய ஒளியினாலும் நீரின் உப்புத்தன்மையை சமாளிப்பதற்காகவும் ஒரு திரவத்தை சுரப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏரியன் உப்புத்தன்மை அதிகம் உள்ள காரணத்தால் இதில் நம் உடல் மூழ்காமல் மிதக்குமாம். அட... ஆச்சர்யம்தான்!

க்ரேட் ப்ளூ ஹோல்

பெலிசு நாட்டின் கடல் பரப்பில் உள்ளது இந்த நீர்மூழ்கி புதைகுழி. சாதாரணமாக தரையில் இருக்கும் புதைக் குழியைக் கவனித்துவிட்டால் சுதாரித்துக் கொள்ளலாம். கடலில் உற்சாகமாக நீந்திக் கொண்டிருக்கும் போது திடீர் என 300 அடி சுற்றளவிற்கு கடலின் ஆழம் அதிகரித்திருந்தால். அதுதான் இந்த 'க்ரேட் ப்ளூ ஹோல்'.

407 அடி ஆழம்அதாவது ஐந்து பனைமர உயரத்திற்கு இருக்கும் ஒரு குழி. இந்த ஆபத்தில் விளையாடவும் சில சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது இதில் வியப்பான விஷயம். பல பயணிகள் வந்து இந்தக் குழியில் ஸ்கூபா டைவிங் செய்து சாகச சாம்பியன்களாக திகழ்கின்றனர்.

தர்வாசா

தர்வாசா என்றால் துருக்மெனிய மொழியில் கதவு என்று பொருள். இது துருக்மெனிஸ்தான் நாட்டின் காராக்கும் பாலைவனத்தின் நடுவே அமையப் பெற்றுள்ள ஒரு கிராமம். இங்கு இயற்கை எரிவாயு அதிகமாக இருப்பதை அறிந்த புவியியல் நிபுணர்கள் 1971-ம் ஆண்டு துளைக்கத் துவங்கினார்கள். அப்போது திடீரென நிலப்பகுதி தகர்ந்து விழ, 230 அடி விட்டத்திற்கு துவாரம் உருவானது. நச்சுப்புகை பரவாமல் இருக்க வேண்டும் என்று அதில் தீயைப் பற்ற வைத்தார்கள் நிபுணர்கள், சில மணிநேரத்தில் அணைந்துவிடும் என நினைத்த அந்தத் தீ இன்னும் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கிறதாம்.


அந்த கிராமத்து வாசிகள் இந்த துவாரத்தை 'Door to Hell' (மரணத்தின் வாசல்) என்று அழைக்கின்றனர். 

சாந்த் பௌரி

ஜெய்பூரிலிருந்து 95 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அபாநேரி கிராமம். அங்கு இருக்கும் ஷர்ஷத் மாதா கோவிலைச் சேர்ந்த கிணறுதான் இந்த சாந்த் பௌரி. சரியாக 3,500 படிகட்டுகள் கொண்ட கிணறு இது. 20 அடிக்கு தண்ணீர் சேமித்துவைக்கும் அளவு நேர்த்தியுடன் கட்டப்பட்ட இந்தக் கிணறு 1,000 வருடம் பழமையானது.

சாதாரணமாக நிலவும் வெப்பநிலையைவிட 5 முதல் 6 டிகிரி வரை குறைவான வெப்பநிலையில் இருக்கும் இந்த கிணற்றங்கறையில், அதிக வெப்பமான நாட்களில் உள்ளூர்வாசிகள் கூடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.




No comments:

Post a Comment