சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

29 Dec 2014

2015 வேலைவாய்ப்பு பிரகாசிக்குமா ?

2015-ல் இந்தியாவில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வியுடன், எம்சிஸ் டெக்னாலஜி நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவின் மேலாளர் .பத்மலட்சுமியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

.டி துறையில் அதிக வேலைகள்!
சமீபத்தில் மனிதவள மேலாண்மை சேவை நிறுவனமான PeopleStrong வெளியிட்ட ஆய்வறிக்கையில் சாஃப்ட்வேர், ஹார்டுவேர் மற்றும் .டி துறை சார்ந்த அலுவலகங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவித்துள்ளது. இது நடப்பு ஆண்டைவிட வரும்    2015-ல் 18% அதிகரிக்கும் என்றும், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் சாஃப்ட்வேர் மற்றும் .டி துறை சார்ந்த வேலைகள் வெகுவாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



கிளவுட் கம்ப்யூட்டிங்!
கடந்த மூன்று ஆண்டுகளாகவே கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud computing) சார்ந்துதான் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தத் தொழில்நுட்பமானது ஒரு நிறுவனத்தின் செலவை வெகுவாகக் குறைத்துவிடும். அதனாலேயே பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இந்த சிஸ்டத்தைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நிறுவனத்தின் வேலைகளைச் செய்ய முடியும். இந்த சிஸ்டத்தின் மூலம் மட்டுமே உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக சர்வதேச தகவல் நிறுவனம் (International Data Corporation) தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டில் ஐந்து மில்லியன் வேலைகள், 2012-ல் 6.7 மில்லியன் வேலைகள், 2013ல் 8.8 மில்லியன் வேலைகள் மற்றும் 2014-ல் 11.3 மில்லியன் வேலைகள் கிளவுட் கம்ப்யூட்டிங் மூலம் உருவாகி இருப்பதாகவும், வருகிற 2015-ல் 13.8 மில்லியன் வேலைகள் உருவாகும் என்றும் IDC தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வரும் ஆண்டில், செய்யும் வேலைக்குத் தக்கபடி 15-30% வரை சம்பள உயர்வு இருக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

துறைவாரியான வேலைகள்!

கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் கிளவுட் கம்ப்யூட்டிங்கை பயன்படுத்திச் செய்யும் வேலைகள் வாயிலாக 400 மில்லியன் டாலர் அளவுக்கு பிசினஸ் நடைபெற்றுள்ளது. வரும் நாட்களில் அனைத்துத் துறை களிலும் கிளவுட் கம்ப்யூட்டிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும் என்பதால், அது சார்ந்த அறிவை அனைவரும் ஏற்படுத்திக்கொள்வது அவசியம். இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் 2011-15 வரையிலான வேலைவாய்ப்பு வளர்ச்சி வங்கி (27.4%), கல்வி (29%), அரசுப் பணிகள் (26.3%), ஹெல்த்கேர் (26.3%), இன்ஷூரன்ஸ் (27.7%), ரீடெயில் (24.2%), மீடியா மற்றும் தகவல் பரிமாற்றம் (31.6%) ஆகிய துறைகளில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம்/ ஐடிஇஎஸ், உற்பத்தி, -பப்ளிஷிங், ரீடெயில், -காமர்ஸ் ஆகிய துறை சார்ந்த வேலைகளில் அதிகமான வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சுரங்கம் ஆகிய மூன்று துறைகளிலும் சேர்த்து உலக அளவில் 100 மில்லியன் வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அதிகரிப்பின் முதல்கட்டம்!
இன்றைய நிலையில் பெரும்பாலான நிறுவனங்கள் வேலைக்கான ஆட்களை எடுக்கக் கல்லூரிகளில் நேர்முகத் தேர்வுகளை நடத்த ஆரம்பித்துவிட்டன. நடப்பு ஆண்டின் மே மாதத்துக்குப்பிறகு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் கன்சல்டன்சி ஆகிய வகையில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன. இது 2015-லும் தொடரும். இன்றைக்கு இந்திய பொருளாதாரம் சிறந்து விளங்குவதால், புதிய தொழில் தொடங்கு வதற்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது.

வேலைக்குச் சாதகமான படிப்புகள்!
3ஜி-யிலிருந்து 4ஜி தொழில்நுட்பமானது வேகமாக வளர்ந்துவருவதால், தகவல் தொலைதொடர்புத் துறையிலும், மொபைல் டெக்னாலஜியில் மிக முக்கியமாக அப்ளிகேஷன் டெவலெப்மென்ட் பிரிவில் வேலைக்கான தேவை மிக அதிகமாகவே இருக்கும்.

இன்று அதிகமானவர்கள் ஆன்லைன் மூலம் பல்வேறு படிப்புகளைத் தேர்வு  செய்து படிக்கிறார்கள். எதிர்காலத்தில் வேலைச் சூழலில் சாதகமாக விளங்கும் ஆண்ட்ராய்டு (Android), ஹடூப் (Hadoop), கிளவுட் கம்ப்யூட்டிங் படிப்புகளான விர்சுவலைசேஷன் விஎம்வேர் (Virtualisation VMware), ரூபி ஆன் ரெய்ல்ஸ் (Ruby on Rails), ஸ்பிரிங் சோர்ஸ் (Spring Source) போன்ற படிப்புகளையும் தேர்ந்தெடுத்து படிப்பது நல்லதுஎன்றார்.

வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்க, கல்லூரி இறுதியாண்டில் மாணவர்களும், இருக்கும் வேலைகளைத் தக்கவைத்துக்கொள்ள பணியாளர்களும் தங்கள் அறிவைப் பட்டை தீட்டிக்கொள்வது அவசியம்.





No comments:

Post a Comment