கூடி வாழ ஆசைப்படும் தனுசு ராசிக்காரர்களே, 16.12.14 முதல் 17.12.17 வரையிலான காலம், விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் அமைகிறது. எதிலும் முன்னெச்சரிக்கை தேவை.
சனி உங்களுக்கு தனாதிபதியாகவும், தைரிய ஸ்தானாதிபதியாகவும் இருப்பதால், ஏழரைச் சனியால் ஏற்படும் கெடுபலன்கள் குறையும். ராசிக்கு 12ல் சனி மறைவதால், உங்கள் அடிப்படை நடத்தையை மாற்றிக் கொள்ளாதீர்கள். இழுபறியான வேலைகள் விரைந்து முடியும். வீண் செலவுகள் வேண்டாம்.
இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்கள் பேச்சில் முதிர்ச்சி வெளிப்படும். கணவன்மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஒரு சொத்தை விற்று பழைய பிரச்னைகள், சிக்கல்களை தீர்ப்பீர்கள். அரசாங்க விஷயங்கள் சற்றுத் தாமதமாகி முடியும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்கு வீர்கள். என்றாலும், அவ்வப்போது வீண் அவநம்பிக்கை, எதிர்காலம் பற்றிய பயம் வந்துபோகும். எவருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம்.
சனி பகவான் சஞ்சார பலன்கள்:
16.12.14 முதல் 24.01.15 வரை; 30.4.15 முதல் 13.6.15 வரை; 6.9.15 முதல் 17.10.15 வரை... உங்கள் ராசி நாதன் சுகாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் 4ம் பாதம், விருச்சிக ராசி 12ம் வீட்டில் சனி செல்வதால், குடும்பத்தில் நிம்மதி உண்டு. தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணி மீண்டும் துவங்கும்.14.6.15 முதல் 5.9.15 வரை உங்கள் ராசிக்கு 11ம் வீடான துலாம் ராசி, விசாகம் 3ம் பாதத்தில் சனி செல்வதால், நினைத்த காரியம் நிறைவேறும். அரசால் அனுகூலம் உண்டு. 30.4.15 முதல் 1.8.15 வரை குருவின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். மற்றவர்கள் விஷயத் தில் தலையிடவேண்டாம்.
உங்கள் தனசேவகாதிபதியான சனி, சுய நட்சத்திரமான அனுஷத்தில் 25.1.15 முதல் 29.4.15 வரை; 18.10.15 முதல் 15.11.16 வரை செல்வதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.
அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 15.3.15 முதல் 29.4.15 வரை; 19.5.16 முதல் 12.8.16 வரை, சனி அனுஷத்திலேயே வக்ரமாவதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். 16.11.16 முதல் 17.12.17 வரை உங்கள் சப்தமஜீவனாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனி செல்வதால் கணவன்மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. புது வேலை கிடைக்கும். 8.4.17 முதல் 5.8.17 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால், பொருள் இழப்பு, வீண் டென்ஷன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும்.
சனி 2ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு இருந்தாலும் பற்றாக் குறையும் ஏற்படும். பேச்சில் கடுமை வேண்டாம். சனி 6ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் தீர்ப்பு தாமதமாகும். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். சனி 9ம் வீட்டைப் பார்ப் பதால், தந்தைக்கு நெஞ்சு எரிச்சல், ரத்த அழுத்தம், வந்து நீங்கும்.
வியாபாரத்தில் சில சூட்சுமங் களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். மூலிகை, செங்கல் சூளை, லாட்ஜ், வாகன உதிரிபாகங்களால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். என்றாலும் பெரிய பொறுப்புகள் கிட்டும். சம்பளம் உயரும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் கூடி வரும். கன்னிப்பெண்களுக்கு, கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமா கும். மாணவர்கள், போட்டித் தேர்வு களில் போராடி வெற்றி பெறுவார்கள்.
மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, ஓரளவு நன்மையையும், பணவரவை யும், பிரபலங்களின் நட்பையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: திருவாதிரை நட்சத்திர நாளில் சிதம்பரம் சென்று ஸ்ரீநடராஜரை நெய் தீபமேற்றி வழிபடுங்கள். புற்றுநோயால் அவதிப்படும் ஏழைகளின் மருத்துவத்துக்கு உதவி செய்யுங்கள்.
No comments:
Post a Comment