சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

15 Dec 2014

அடைமழையில் அழகு காக்க!



ஜில்லுன்னு ஒரு மழைக்காலம் தொடங்கியாச்சு!  மழைக்காலத்தை நினைத்தாலே மனசுக்குள்ளும் மழையடிக்கும். ஆனால் ஈரப்பதம் நிறைந்த சூழல் நம் சருமத்தைப் பாதிக்கும் என்பதுதான் சந்தோஷத்திலும் நெருடும் சங்கடம். மழைக்காலத்தில் சருமத்தைப் பராமரிக்கும் வழிகளை விவரிக்கிறார் சென்னை நியூஸ்டைல் டிரெண்டு அழகுக்கலை நிபுணர் ராதா.
''எண்ணெய் சருமத்தினரும், வறண்ட சருமத்தினரும்தான் இந்த பருவநிலையில் அதிகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எப்போதும் சருமம் உலர்வாகவும் இல்லாமல், அதிக எண்ணெய்ப் பசையுடனும் இல்லாமல் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.
வைட்டமின் , பி, சி நிறைந்த உணவுகள், பழங்கள், தக்காளி, பீட்ரூட், கேரட் மற்றும் நீர், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளைச் சாப்பிடுவது சருமத்துக்குப் பளபளப்பைக் கூட்டும். எண்ணெய் சருமத்தினர் பீன்ஸ், கேரட் மற்றும் வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், மாம்பழம், பப்பாளி சேர்த்துக்கொள்ளலாம்.
வறண்ட சருமத்தினருக்கு வைட்டமின் மற்றும் சி மிகவும் அவசியம். திராட்சை, சோயா, பாதாம் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்துக்கொள்வது நல்லது. இவர்கள் சருமம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயை உள்ளங்

கையில் விட்டு சிறிது தண்ணீர் சேர்த்துப் பூசி, பிறகு குளிக்கலாம். சோற்றுக் கற்றாழையும் மிகச் சிறந்த மாய்ஸ்சரைஸர்தான். மழைக் காலத்தில் அதிக தாகம் எடுக்காது என்று அலட்சியம் காட்டாமல், நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். ரோஜா இதழ்களைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவைத்து தினமும் இரண்டு வேளை குடிக்கலாம். சருமத்தில் சுருக்கம் மறைந்து, உடல் முழுவதும், ஒருவிதப் புத்துணர்ச்சி ஏற்படும். சருமம் ஜொலிக்கும். எந்த வகை சருமமாக இருந்தாலும் கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைஸிங், சன்ஸ்க்ரீனிங் என்ற நான்கு முறையைப் பின்பற்றினால் உங்கள் சருமத்துக்குப் பாதுகாப்புதான்.

கிளென்சிங்
சருமத்தினுள் இருக்கும் அழுக்குதான் மங்கு, திட்டுக்கள், தேமல், கரும்புள்ளியாக வெளிப்படுகிறது. இதற்கு முதலில் சருமத்தின் உள் ஊடுருவும் அழுக்கினை நீக்க வேண்டும். கிளென்சிங் அனைத்து வகையான அழுக்கையும் அப்புறப்படுத்தும். கிளென்சிங் மில்க் தடவி, 10 நிமிடங்கள் கழித்து முகத்தைப் பஞ்சினால் துடைப்பதன் மூலம் அழுக்கு வெளியேறும். கிளென்சிங் செய்வதற்கு முன்பு கொதிக்கும் நீரில் 5 சொட்டுக்கள் அரோமா எண்ணெயை விட்டு ஆவி பிடிப்பதன் மூலம், சருமத் துவாரங்களில் இருந்து அழுக்கு சுலபமாக வெளியே வந்துவிடும். பிறகு, மைல்டு ஃபேஷ் வாஷ் போட்டு மிதமாகத் தேய்த்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும்.  
டோனிங்்
கிளென்சிங் செய்ததும், சருமத்தில் துளைகள் திறந்திருக்கும். இதனால் அழுக்குப் படிய வாய்ப்பு அதிகம். சருமம் பழைய நிலைக்குத் திரும்ப, 5 சொட்டுக்கள் டோனரை, கைகளில் ஊற்றி தட்டித் தட்டித் தடவ வேண்டும். தினமும் டோனிங் செய்வதன் மூலம் முகத்தில் இறந்த செல்கள் நீங்கி, பொலிவு பெறும். ரோஜா, மல்லி, ஜாதிமல்லி, தாழம்பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஐந்து மணி நேரம் வைத்துவிடுங்கள். தினமும் குளித்து முடித்ததும், இந்த எசன்சைத் தடவி, இதன் மேல் க்ரீம்களைப் பயன்படுத்துவது நல்லது.

பார்லர் ஃபேஷியல்!
ஃபேஷியல் செய்வதால், சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து ஆக்சிஜன் கிடைக்கும். முகம் பொலிவு கூடும். அழுக்குகள் நீங்கி, கரும்புள்ளிகள் மறையும். வீட்டிலேயே சருமப் பராமரிப்பு முறைகளைப் பின்பற்ற முடியாதவர்கள் பார்லருக்குச் சென்றும் இதை மேற்கொள்ளலாம். எண்ணெய் சருமம் உள்ளவர்கள், பேர்ல் ஃபேஷியலும் வறண்ட சருமத்தினர் சில்வர் ஃபேஷியலும் செய்யலாம். வறண்ட சருமத்தினருக்கு மாய்ஸ்சரைஸர் கிரீம் பயன்படுத்தி, ரோஸ் வாட்டர் கிளென்சர் கொண்டு கிளீன் செய்யப்படும். இந்த இரண்டு ஃபேஷியலுமே, இந்த மழைக்காலத்துக்கு ஏற்றது.
மாய்ஸ்சரைஸிங்
முகத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கவேண்டும். .சியில் இருந்தாலும், முகத்தில் சருமத்தில் நீரின் அளவு குறையலாம். இதைத் தவிர்க்க மாய்ஸ்சரைஸரைத் தடவுவது அவசியம். அனைத்து சருமத்துக்கும் மாய்ஸ்சரைஸர் தேவை.  
சன்ஸ்க்ரீனிங்

இது சூரியக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. எஸ்.பி.எஃப் 20 கொண்ட சன்ஸ்க்ரீனை தடவலாம்.



No comments:

Post a Comment