சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

23 Dec 2014

இளமை இதோ... இதோ!

காதல் வானில் மனச் சிறகை விரித்துப் பறக்க நினைக்கும் பருவம்... 18 - 21 வயது. டீன் பருவத்தில் இருந்து விடுபட்டு, அடல்ட் பருவத்துக்குள் நுழையும் இப்பருவத்தை... ஆங்கிலத்தில் 'யங் அடல்ட்ஹுட்' (Young adulthood) என்பார்கள்.


'பப்பி லவ்எனப்படும் காதல் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் எழும் பருவம் இது. பக்கத்து வீட்டுப் பையன், கிளாஸ்மேட், ஆசிரியர், ஆட்டோக்காரர் என எதிர்பாலினர் யாராவது அக்கறையாக, அன்பாகப் பேசினாலே போதும்... அவர்களிடத்தில் ஈர்ப்பு அதிகமாகும். அந்த ஈர்ப்புக்கு 'காதல்என்று மனம் பெயர் வைக்கும். ஆனால், இந்தப் பருவம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய உழைப்பை, படிப்பை வெளிப்படுத்த வேண்டிய காலம் என்பதால், காதல் (!) என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட வேண்டும்.
எதிர்பாலினர் ஒருவர் குறித்து ஏற்படும் பரவசத்தை, டீ, காபி சாப்பிடும்போது பேசக்கூடிய பொழுதுபோக்குச் செய்தியாக மட்டுமே கடந்துவிட வேண்டும். மாறாக, அந்த நினைவுகளிலேயே மூழ்கி முத்தெடுக்க நினைப்பது... விபரீதமானது. உதாரணமாக, 'என் கிளாஸ்மேட் ரிஷி ரொம்ப ஸ்மார்ட்பா... அவனுக்கு எல்லா டிரெஸ்ஸும் சூட் ஆகுதுஎன்று அதை ரசித்து, ஒரு பாராட்டு வைக்கலாம்... தவறில்லை. ஆனால், 'ரிஷி ரிஷி ரிஷி...’ என்று முப்பொழுதும் நினைவுகளில் மூழ்கினால், எதிர்காலமும் மூழ்கிக் கொண்டு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


இந்தப் பருவத்தில் வரும் காதல் (?), 80% அழகைப் பிரதானப்படுத்தியே இருக்கும். அதன் அடிப்படையில் 'காதல்என்று ஒரு வலையில் சிக்கினால், பின் அந்தத் தேர்வு தவறாகும்பட்சத்தில்... அதில் இருந்து மீள்வது சிரமமாகும். பரவசப் பட்டாம்பூச்சிகள் மனதில் பறக்கும் காலம் இது. அதன் வழியே நாமும் பறக்காமல், கம்ப்யூட்டர், மைண்ட் கேம்ஸ், ஓவியம், இசை என விருப்பமான வேறு ஒரு களத்தில் மனதைச் செலுத்தி, முறைப்படுத்தலாம்.

18 வயது எனும்போது... 'பாக்கெட் மணி' என்கிற விஷயமும் வந்து சேர்ந்துவிடும். எதையெடுத்தாலும் கேட்டுக் கேட்டுச் செலவழித்த காலத்தைக் கடந்து, இஷ்டம் போல செலவழிக்கும் தைரியம் வந்துவிடும் வயது என்பதால்... பாக்கெட் மணியை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை நன்கு பழகிக்கொள்ள வேண்டும்.


'என்னோட ஃப்ரெண்ட்ஸ் டிரீட்டுக்கு கூப்பிட்டிருக்காங்க. அவங்க ஆர்டர் பண்ற பீட்ஸா, பர்கர் இதை எல்லாம் எப்படி தவிர்க்க முடியும்? அதனாலதான் அவங்களோட சேர்ந்து சாப்பிடுறேன்' என்பவரா நீங்கள்? ப்ளீஸ்... பார்ட்டி, ட்ரீட் என்றாலே... வெஸ்டர்ன் ஃபுட், ஜங் ஃபுட்... போன்றவற்றைத்தான் சாப்பிட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. நம்முடைய பாரம்பரிய உணவுகளான இடியாப்பம், ரவா தோசை, மசால் தோசை, ஆப்பம், குழிபணியாரம்... போன்ற உணவு வகைகள் எல்லா இடங்களிலும்தான் கிடைக்கின்றனவே! அவற்றையே சாப்பிடலாமே!

பர்கர், பீட்ஸா, குளிர்பானங்கள் என்று மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் உணவுகளை, ஃபேஷன் என்கிற பெயரில் சாப்பிட்டு தீர்க்கும் நாம்... கேழ்வரகு, கம்பு என்று சத்து மிகுந்த சிறுதானியங்களில் தயாராகும் உணவு வகைகள் பக்கம் கவனத்தைத் திருப்பலாமே! அவற்றில் சத்து இருக்கிறது என்பதற்காகக்கூட வேண்டாம்... அவையெல்லாம் இன்றைக்கு ஸ்டார் ஹோட்டல்களில்கூட 'ஃபேஷன்' உணவுகளாக பரிமாறப்படுகின்றன என்பதற்காகவாவது சுவைத்துப் பார்க்கலாமே!

இவ்வளவு தூரம் உணவுகளைப் பற்றி இங்கே நான் கிளாஸ் எடுக்கக் காரணம்... உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டுமே... நம்முடைய உணவில் இருக்கிறது என்பதற்காகத்தான்!
ஆரோக்கியத்தோடும், என்றென்றும் இளமையோடும் இருக்க நினைப்பவர்கள்... அதற்கான பதியத்தை, சின்ன பருவ வயதிலேயே போட வேண்டும் என்பதையும் மறந்துவிடாதீர்கள். கல்லூரிகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் தவறாமல் பங்கேற்பது... தினமும் ஏதாவது ஒரு விளையாட்டை ரெகுலராக விளையாடுவது, உடற்பயிற்சி செய்வது ஆகிய விஷயங் களிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

யாராவது சொல்லி, அதற்காக நம்மை நாம் மாற்றிக் கொள்வதைவிட... நமக்கு இதுதான் சரி என்கிற மாதிரியான சரியான சில பழக்க வழக்கங்களை சின்ன வயதிலேயே மனதில் ஆழமாக பதித்துவிட்டால்... எந்த வயதிலும் நீங்கள் பதினாறு என்பதில் சந்தேகமில்லை.



சரி, பருவ வயதினருக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையுமே வராதா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மிக முக்கியமானதொரு பிரச்னை பற்றி இங்கே பேசியே ஆகவேண்டும். அது பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் (PCOS - Polycystic Ovarian Syndrome)




No comments:

Post a Comment