சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Dec 2014

வைகோவின் அரசியல் பயணத்தில் இன்னுமொரு திருப்பம்!

நாடாளுமன்றத் தேர்தலில் பா..-வுடன் அமைத்த கூட்டணியை முறித்துக்கொண்டு முதல் ஆளாக வெளியேறிவிட்டார். 'பொருந்தாக் கூட்டணியில் ஏன் சேர்ந்தீர்கள்... ஏன் விலகினீர்கள்?’ எனக் கேட்டால், ஆதி முதல் அந்தம் வரை உணர்ச்சித்ததும்பப் பேசினார்...

''அது ஓர் அக்னிப்பரீட்சை காலகட்டம். நாடாளுமன்றத் தேர்தல் சமயம், ஈழத் தமிழர்களை அழிக்க ஆயுதம் கொடுத்து, நம் சொந்தங்கள் கொல்லப்படக் காரணமா இருந்த சோனியா காந்தியிடம் மீண்டும் ஆட்சி அதிகாரம் செல்லாமல் இருக்க என்ன வழி என யோசிச்சா, எனக்கு வேற ஒண்ணுமே புலப்படலை. அப்போ பா.. தரப்பில் இருந்து முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜுலு ஆகியோர் தொடர்ந்து என்கிட்ட கூட்டணிக்காகப் பேசினாங்க. 'நீங்க புலிகளை ஆதரிக்க வேணாம். இலங்கைப் பிரச்னையில் வாஜ்பாய் என்ன கொள்கையைப் பின்பற்றினாரோ, அதையே பின்பற்றுவோம்னு உறுதி கொடுத்தால், கூட்டணியில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லைனு சொன்னேன். அதுக்கு 'சரினு சொன்னாங்க. தேர்தல் பிரசாரத்துக்காக வண்டலூர் வந்த மோடியை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்தேன். 'ஈழத் தமிழர்கள் பிரச்னையில் வாஜ்பாய் அணுகுமுறையைப் பின்பற்றுவோம்னு சொன்னால் போதும்னு சொன்னேன். அவரும் 'நோ ப்ராப்ளம்னு சொன்னார். ஆனா, தேர்தலுக்குப் பிறகு மோடியின் பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்ஷே வர்றார்ங்கிற செய்தி வந்ததும் எனக்குக் கை-கால் ஆடிடுச்சு.

அடுத்த அரை மணி நேரத்துல எதிர்ப்பு அறிக்கை கொடுத்துட்டு, மோடிக்கு ஒரு கடிதத்தை -மெயில் அனுப்பினேன். அப்ப ராஜ்யசபாவில் எனக்குப் பதவி கொடுக்கப்போறதா பேச்சு அடிபட்டது. எங்கேயோ டூர்ல இருந்த மோடியைத் தொடர்புகொள்ள முடியலை. உடனே வசுந்தரா ராஜே சிந்தியாவைச் சந்திச்சு, 'ராஜபக்ஷே வருகையைத் தடுக்கணும்னு சொன்னேன். 'ஆமா, இது ரொம்பத் தப்பான முடிவுதான். நீங்க மோடிகிட்ட பேசுங்கனு சொன்னாங்க. ராஜ்நாத் சிங், 'இதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாதுனு சொல்லிட்டார்.

அப்புறம் மோடியைச் சந்திச்சேன். அப்போ அமித்ஷாவும் அருண் ஜெட்லியும் உடன் இருந்தாங்க. சுமார் முக்கால் மணி நேரம் பேசினேன். என் மனவேதனைகளை எல்லாம் கொட்டினேன். ஒரு ஸ்டேஜ்ல,
' ஃபால் அட் யுவர் ஃபீட்... உங்க கால்லகூட விழுறேன். தயவுசெஞ்சு அவரைக் கூப்பிடாதீங்கனு சொன்னேன். 'சார்க் நாட்டு தலைவர்களைக் கூப்பிட்டுட்டோமேனு ஜெட்லி சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிட்டு இருந்தார். 'இன்னைக்கு ராத்திரிக்குள்ள ஒரு முடிவெடுங்க. இல்லைனா, கறுப்புக் கொடி காட்டுறதைத் தவிர எனக்கு வேற வழி இல்லைனு சொல்லிட்டு வந்துட்டேன்!

போராட்டம் நடத்தினோம். ஆனாலும் இலங்கை மீதான இந்திய அரசின் அணுகுமுறையில் எந்தவித மாற்றமும் இல்லை. வரிசையா சூழ்ச்சிகள்தான் அரங்கேறின. சேஷாத்திரி சாரியையும், சுப்ரமணியன் சுவாமியையும் அனுப்பி, இலங்கை ராணுவ மாநாட்டுல போய் ராஜபக்ஷே அரசின் ராணுவ நடவடிக்கைகளைப் பாராட்ட வெச்சாங்க. இலங்கை மந்திரி பெரீஸ் இந்தியா வந்தப்ப, '2015-ம் ஆண்டு மார்ச் மாசம் நடக்கப்போற மனித உரிமை கமிஷன் கூட்டத்தில், இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கப்போறோம்னு சுஷ்மா ஸ்வராஜ் சொன்னதை வெளியுறவுத் துறைச் செயலர் வெளிப்படையாகப் பத்திரிகையாளர் சந்திப்புலயே சொன்னார்

இதையெல்லாம்விட பெரிய அதிர்ச்சி, கொலைகாரன் ராஜபக்ஷேவுக்கு பாரத் ரத்னா விருது கொடுக்கணும்னு பேச்சு கிளம்பியதுதான். பா..-வில் யாரும் அதைக் கண்டிக்கவே இல்லை. உச்சக்கட்ட அதிர்ச்சியா, 'இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற வாழ்த்துகள்னு மோடி அந்தக் கொடுங்கோலனை வாழ்த்தியிருக்கார். ஈழத் தமிழர் நலனில் காங்கிரஸைவிட பா.. மோசமா நடந்துக்கிறதால, கூட்டணியில் இருந்து வெளியேறுவதைத் தவிர எங்களுக்கு வேற வழி இல்லை.''

''ஈழம் தவிர, பிரதமர் மோடியின் மற்ற செயல்பாடுகள் மீது உங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லையா?''
''இவங்க இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டுவந்து திணிக்கணும்னுதான் திருக்குறளையும், பாரதியையும் பிரபலப்படுத்துறோம்னு கிளம்பியிருக்காங்க. தமிழ் மொழி, திருக்குறளுக்கு ஆதரவாகப் பேசும் பா.. எம்.பி தருண்விஜய்யைப் பாராட்டி, ஒரு திருவள்ளுவர் சிலையை நானே அவருக்குக் கொடுத்துவிட்டேன். ஆனா, அவர் 'சம்ஸ்கிருதம்தான் இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் தாய்னு பேசியிருக்கார்னு பிறகுதான் தெரியவந்துச்சு.


இவங்க ஏன் புதுசா ராஜேந்திர சோழனுக்கு விழா, ராஜராஜ சோழனுக்கு விழானு வர்றாங்க? தமிழர்கள் உணர்ச்சிபூர்வமானவர்கள். அதுல புகுந்து விளையாடினோம்னா, இவங்களுக்குள்ள ஊடுருவிடலாம்னு வர்றாங்க. சம்ஸ்கிருதத்தையும் திணிச்சு, திராவிட இயக்கத்தின் ஆணிவேரை அறுக்கிற அளவுக்கான திட்டம் அது. இதையெல்லாம்விட பெரிய ஆபத்து... இவங்க அமல்படுத்தும் கல்விமுறை மாற்றம். உண்மை வரலாற்றை மறைச்சுட்டு, புராணச் செய்திகளை குஜராத்தில் வரலாறு ஆக்கிட்டாங்க. அந்த ஆபத்தான கல்விமுறையை இந்தியா முழுக்கக் கொண்டுவரப்போறாங்க. இப்படி இவங்களோட உண்மை சொரூபம் தெரிஞ்சதும், கூட்டணியில் இருந்து வெளியேற ஒரு காரணம்.''

''ஏதோ பா.. ரெண்டு வருஷங்களுக்கு முன்னாடி ஆரம்பிச்ச கட்சி மாதிரி, 'அந்தக் கட்சியைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லைனு சொல்றீங்களே. அவங்க எப்பவும் இந்துத்வா ஆதரவுக் கொள்கைகளோடுதானே இருக்காங்க?''
''அத்வானிக்கு கட்சியில் ஒரு ரோல் இருக்கும். அவர் நாம சொன்னா ஓரளவுக்குக் கேப்பார்னு தேர்தலுக்கு முன்னாடி நினைச்சோம். ஆனா, அந்தக் கட்சியில் இப்போ எல்லாமே தலைகீழ்.''

''பா.. கூட்டணியில் இருந்து வெளியேறிட்டீங்க... தே.மு.தி.., பா..-வுடன் நட்பு தொடருதா?''

''எல்லாரோடும் நட்பாவும் மதிப்பாவும் இருக்கேன். தேர்தல் வரும்போது அன்றைய சூழ்நிலைக்கு ஏற்றபடி கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.''

''நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில், பொன்விழா மாநாடு நடத்தப்போறாங்களாமே?''
''நான் என் பிறந்த நாளைக்கூடக் கொண்டாட மாட்டேன். காரணம், என் ஒரிஜினல் பிறந்த நாள் எனக்கே தெரியாது. பள்ளிச் சான்றிதழ்படி மே 22-னு இருக்கும். வாஜ்பாய், ஒரு மே 22-ல் போன் பண்ணி என்னை வாழ்த்தினார். 'இன்று என் பிறந்த நாள் இல்லைனு சொன்னேன். '365 நாள்ல ஏதோ ஒருநாள் உங்க பிறந்த நாளா இருக்கும்ல. இந்த வாழ்த்து அந்த நாளுக்கானதுனு சொன்னார்.

கட்சித் தொண்டர்கள்தான், 'நீங்க, பிறந்த நாள் கொண்டாடுறது இல்லை; அரசியலுக்கு வந்து
50 வருஷங்கள் ஆகிடுச்சு. அதுக்கு ஒரு பொன்விழா மாநாடு நடத்துறோம்னு சொன்னாங்க. நான் மறுத்தேன். ஆனா,  என்னைக் கட்டாயப்படுத்தி சம்மதிக்கவெச்சுட்டாங்க. மே 5, 6 தேதிகளில் சென்னையில் விழா. பிரகாஷ் சிங் பாதல், ஃபரூக் அல்லது ஒமர் அப்துல்லா, மம்தா பானர்ஜி, நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ், சரத் பவார், சந்திரபாபு நாயுடுனு பலரை அழைக்க உள்ளோம். இவர்களுடன் முன்னாள் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்

அவரை, காங்கிரஸ்காரராக அழைக்கவில்லை; என் மேல் அன்பும் மதிப்பும்கொண்ட நண்பராக அழைக்கிறோம். தமிழகத்தில் தி.மு.., .தி.மு. தவிர்த்து அனைத்துக் கட்சியினரையும் அழைக்கிறோம். என்னுடைய 1,531 நாடாளுமன்ற ஆங்கிலப் பேச்சுக்களை நாலு பவுண்டு வால்யூம்களாகத் தொகுத்து வெளியிடுகிறார்கள்.''

''அரசியலில் 50 வருடங்களாக ஏகப்பட்ட பயணம், உழைப்பு, அனுபவங்கள்... ஆனால், சொந்தத் தொகுதியில்கூடத் தோல்விதான் மிஞ்சுகிறது. இதை நினைத்து வருந்தியிருக்கிறீர்களா?''
''வருத்தப்படலை! ஏன்னா, 2,61,000 மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். அது பெரிய விஷயம். 500, 1,000, 2,000 ரூபாய்னு பணம் கொடுக்கும்போது, 'இன்னைக்கு செலவுக்குக் கொடுத்தாங்களேனு ஒரு நன்றிக்கடன்ல எதிர்தரப்புக்குக்கூட ஓட்டு போட்டுடுறாங்க. வசதியானவங்களே அரசாங்கத்தின் இலவசப் பொருட்களை வாங்கும்போது, ஏழை மக்களை நான் குறைசொல்ல விரும்பலை.

என் தோல்வி, கட்சி எதிர்காலத்தைப் பாதிக்குமேனு நானாவது கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனா, என் தோழர்கள் அதை ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை. 'ஸ்பார்ட்டாவீரர்கள் மாதிரி முன்னைவிடத் துடிப்பா இயங்கிட்டு இருக்காங்க. கடந்த 50 ஆண்டு அரசியல் பயணத்தில் வாய்தவறிக்கூட, 'நான்தான் முதலமைச்சர்னு இதுவரை நான் சொன்னதும் இல்லை; அந்தக் கனவில் நான் இருக்கேன்னு வெளிப்படுத்தினதும் இல்லை. ஆனா, என் தோழர்களுக்கு அந்த ஆசை உண்டு.''

''ராமதாஸ் பேத்தி திருமணத்தில் மு..ஸ்டாலினைச் சந்தித்தது, முல்லைப் பெரியாறு விவகாரத்தில்ஜெயலலிதாவைப் பாராட்டியது... 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகளா?''
''இன்று ஒன்று சொல்கிறேன்... குறித்துக்கொள்ளுங்கள். இன்று மட்டும் அல்ல,
வருங்காலத்திலும் .தி.மு.-வோடும் கூட்டு கிடையாது; தி.மு.-வோடும் கூட்டு கிடையாது. ஆனால், இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டியது என் கட்சித் தோழர்கள்தான். திருமண வீட்டில் ஸ்டாலினிடம் பேசியது நட்பும் அரசியல் நாகரிகமுமான ஒரு விஷயம். முல்லைப் பெரியாறு விவகாரத்தில், உண்மையிலேயே அந்த வழக்கை சட்டபூர்வமா நடத்தி வெற்றி பெறவைத்தது ஜெயலலிதாவின் வியூகம்தான். நான் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவேன்; விமர்சிக்க வேண்டியதை விமர்சிப்பேன். ஒரு கட்சித் தலைவரைப் பாராட்டினால், உடனே கூட்டணிதான் என்ற ஹேஷ்யம் கிளம்பும் அளவுக்கு, தமிழ்நாட்டில் சிந்தனை மலிவுபட்டிருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது.''

'' 'திராவிடக் கட்சிகளின் சித்தாந்தம் காலாவதி ஆகிடுச்சுனு அன்புமணி ராமதாஸ் சமீபத்தில் பேசியிருக்காரே?''
''அதன் அரிச்சுவடிகூட அன்புமணிக்குத் தெரியாது. அதைப் பற்றி தெரியாத ஒருவர், 'முடிஞ்சிடுச்சுனு எப்படி சொல்ல முடியும்?''

''சுப்ரமணியன் சுவாமியை 'அரசியல் ஜோக்கர்என்கிறார்கள் சிலர். ஆனால், ஈழத் தமிழர் விவகாரம், கூட்டணிக் கட்சிகளின் இருப்பு... என, பல விஷயங்களில் அவர் நினைப்பதுதானே நடக்கிறது?''
''அவர் ஜோக்கர் அல்ல. அவரிடம் நல்ல ஆங்கிலப் புலமை இருக்கிறது. சட்டநுணுக்கம் தெரிந்தவர். ஹார்வேர்டில் போய் லெக்சர் தருகிறார். ஆனால், தன் அறிவு அனைத்தையும் அழிவுக்குப் பயன்படுத்தும் மிக மிக ஆபத்தான ஒரு மனிதர். அவர் ராஜபக்ஷேவால் பா..-வுக்குள் திணிக்கப்பட்ட ஓர் ஏஜென்ட். இது நூற்றுக்கு நூறு உண்மை.''

''சொத்துக்குவிப்பு வழக்கின் தண்டனை காரணமாக 'இனி 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதாவால் தேர்தலில் நிற்க முடியாதுஎன்கிறார்கள். அவரின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''ஈழம், தமிழக அரசியலில் உள்ள வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியில் இருக்கும் ஐரோப்பிய யூனியன் தூதுவர்கள் சிலர் சென்னையில் என்னைச் சந்தித்தனர். அப்போது 'தமிழகத்தில் இன்று தேர்தல் நடந்தால், யார் ஜெயிப்பார்கள்?’ எனக் கேட்டனர். 'ஜெயலலிதா. காரணம், ஊழல் குற்றச்சாட்டைத் தாண்டி மக்களிடம் அவர் மேல் ஓர் அனுதாபம் இருக்குனு சொன்னேன். அதுவே உங்கள் கேள்விக்கும் பதில்.''

''தமிழக முதல்வர் .பி.எஸ்- எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் சகட்டுமேனிக்கு விமர்சிப்பது பற்றி...''
''ஒரே நாளில் திடீரென முதல்வர் ஆனவர் அல்ல அவர். அந்தக் கட்சியில் அடிமட்டத் தொண்டராக இருந்து முன்னேறியவர். அவர், விவரம் தெரியாதவர் அல்ல; நுணுக்கமாகப் பேசக்கூடியவர்; பதில் சொல்லக்கூடியவர். எனவே, அவரை எவரும் கொச்சைப்படுத்த வேண்டாம் என்பது என் கருத்து!''

''தங்கள் கொள்கைகளைக் காக்க திராவிடக் கட்சிகள் ஒண்ணுசேரணும்னு சொல்றீங்க. ஆனா, ஈழ ஆதரவு கட்சிகள் இடையிலேயே இணக்கமான நட்பு இல்லையே. அப்புறம் திராவிடக் கட்சிகள் எங்கிருந்து ஒன்று சேர்வது?''
''நம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களே தாங்கள் கோலோச்சிய 10 ஆயிரம் ஆண்டுகளில் மிகச் சில காலகட்டத்தைத் தவிர, ஒற்றுமையாக இருந்தது இல்லை. காரணம், எமோஷன்ஸ்; சென்டிமென்ட்; ஈகோ. அது நம் ரத்தத்திலும் ஊறியிருக்கு. கேரளாக்காரர்கள்10 பேர் எங்க போனாலும் ஒண்ணாவே இருப்பார்கள். ஆனா, நாம 15 திசைகள்ல நிப்போம். மூணு தமிழர்கள் தூக்கைத் தடுக்க எங்க சொந்த செலவில் எல்லாரையும் அழைச்சிட்டு வந்தோம். அதில் எதுவும் அபிப்பிராயப் பேதம் வந்துடக் கூடாதுனு எங்க பேரைக்கூடப் போடாம ஒரு மூலையில நின்னோம்


அப்பக்கூட ரெண்டு, மூணு பேர் அந்த மேடைக்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்களே! நாங்கள் முடிந்த அளவுக்கு உணர்வாளர்களை ஒண்ணு சேர்த்துக்கொண்டுபோகணும்னு நினைக்கிறோம். ஆனா, தனக்குன்னு ஒரு அஜெண்டா வெச்சுக்கிட்டு விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி, பிரபாகரனைச் சொல்லி தங்களை வளர்த்துக்கலாம், சில வசதிகளைத் தேடிக்கலாம்னு நினைக்கிறவங்களை நான் எதுக்கு மதிக்கணும்? மேலும், திராவிடக் கட்சிகள் ஒண்ணுசேர வேண்டும் என நான் சொல்லவில்லை; திராவிடக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தடுப்பதில் ஒன்றுபட்ட சிந்தனை வேண்டும் என்றே சொன்னேன்!''






No comments:

Post a Comment