க்ரிஸ்ட் ஹான் - ஜேமி கூப்பர்
இங்கிலாந்தைச் சேர்ந்த க்ரிஸ்ட் ஹான் மற்றும் அவரது மனைவி ஜேமி கூப்பர் இருவரும் இணைந்து குழந்தைகள் முதலீட்டு அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார்கள். அதன் இன்றைய சொத்து மதிப்பு. 700 மில்லியன் பவுண்ட். அதாவது இந்திய மதிப்பில் 7,000 கோடி ரூபாய். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் வரவே விவாகரத்துடன் தனக்கு சேர வேண்டிய 50% சொத்தையும் கேட்டார் ஜேமி. 'கால் பங்கு மட்டுமே தருவேன்' என ஹான் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், தற்போது அந்த சொத்திலிடுந்து 337 மில்லியன் பவுண்டை (சுமார் 3,271 கோடி) ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டுள்ளது கோர்ட். கூப்பருக்கு சுமார் 3,059 கோடி ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும். எஞ்சிய தொகை அவரின் ஓய்வூதியத் திட்டத்துக்கு அளிக்கப்படும். அவருக்கு உடனடியாக சுமார் 61 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை இங்கிலாந்தில் நடந்ததிலேயே அதிக ஜீவனாம்சம் வழங்கப்பட்ட வழக்கு இதுதான்.
ஹரால்டு ஹம் - சூ ஆன் ஹம்:
ஹரால்டு ஹம் - சூ ஆன் ஹம்:
அமெரிக்க தொழிலதிபர் ஹரால்டு ஹம், தனது இரண்டாவது மனைவியான சூ ஆன் ஹமை விவாகரத்து செய்யும்போது ஜீவனாம்சமாக வழங்கியது 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 6,200 கோடி). 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துகள் வைத்துள்ள ஹரால்டு இவ்வளவு குறைவான தொகையைக் கொடுத்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்ததாம்.
பெர்னி எக்லெஸ்டோன் - சல்விகா:
ஃபார்முலா ஒன் குழுமத்தின் தலைமை நிர்வாகியான பெர்னி எக்லெஸ்டோன், 2009ல் தனது இரண்டாவது மனைவி சல்விகாவை விவாகரத்து செய்தபோது, அவருக்கு வழங்கிய ஜீவனாம்சத் தொகை 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
ஃபார்முலா ஒன் குழுமத்தின் தலைமை நிர்வாகியான பெர்னி எக்லெஸ்டோன், 2009ல் தனது இரண்டாவது மனைவி சல்விகாவை விவாகரத்து செய்தபோது, அவருக்கு வழங்கிய ஜீவனாம்சத் தொகை 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
கீத் ரூப்பர்ட் மர்டாக் - ஆனா டோர்வ்:
ஆஸ்திரேலியத் தொழிலதிபர் கீத் ரூப்பர்ட் மர்டாக். உலகின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான நியூஸ் கார்பரேஷனுக்குச் சொந்தக்காரர். பட்ரிசியா புக்கர் முதல் மனைவியுடனான விவாகரத்துக்குப் பிறகு, ஆனா டோர்வை இரண்டாவது முறையாக மணந்து கொண்டார். பின்னர் 1999-ல் தனது இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்தார். அதற்காக வழங்கப்பட்ட ஜீவனாம்சத் தொகை 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். விவாகரத்து முடிந்து சரியாக 17 நாட்களுக்குப் பிறகு சீனப் பெண்ணான வென்டி டெங்கை மூன்றாவது முறையாக திருமணம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அலிஸ் வில்டென்ஸ்டின் - ஜோசெலின் வில்டென்ஸ்டின்:
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசெலின் வில்டென்ஸ்டின், முகமாற்று அறுவை சிகிச்சைக்காகவே நிறைய செலவழித்த விதத்தில் மிகவும் பிரபலமானவர். 1999 ஆம் ஆண்டு தன் கணவர் அலிஸ் வில்டென்ஸ்டிடம் இருந்து விவாகரத்து பெறும்போது வழங்கப்பட்ட தொகை 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.அது போக 13 வருடங்களுக்கு, வருடா வருடம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களும் (ரூ.622 கோடி) கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது நீதிமன்றம்.

டிமிட்ரி - எலினா:
ரஷ்ய தொழிலதிபர் டிமிட்ரி. இவரது சொத்துக்களின் மதிப்பு 8.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவரது மனைவி எலினா. 24 வருட மண வாழ்க்கைக்குப் பிறகு கடந்த மே மாதம் இவர்களின் விவாகரத்து வழக்கு தீர்ப்பானபோது மனைவிக்கு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 30,000 கோடி) ஜீவனாம்சத் தொகையாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தான் உலகிலேயே அதிக விலை மதிப்பான விவாகரத்து வழக்காக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment