இன்றைய நிலையில் ரியல் எஸ்டேட் முதலீடே நம்பகமானது; அதுவே அதிக வருமானம் தரக்கூடியது எனப் பலரும் நினைக்கிறார்கள். அவர்கள் இதிலுள்ள சிக்கல்களை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று பெரும் பணத்தை செலவு செய்து இடத்தை வாங்கியவர்கள் பிற்பாடு வருத்தப்படவே செய்கிறார்கள். ஏதோ ஓர் அவசரத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் பற்றியும், இனி அந்தத் தவறை செய்யாமல் இருக்க என்ன செய்யலாம் என்பது பற்றியும் நிதி ஆலோசகர் ஆர்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம். ரியல் எஸ்டேட்டில் நாம் செய்யக்கூடாத தவறுகளைப் பட்டியலிட்டார் அவர். அந்தத் தவறுகள் இதோ...
எதிர்காலத் தேவை தந்த ஏமாற்றம்!
“முதலீடு என்கிறபோது அது எதுவாக இருந்தாலும் கவனம் முக்கியம். அதுவும் ரியல் எஸ்டேட் முதலீடு என்றால் தேவை அறிந்தே பரிசீலிக்க வேண்டும். காரணம், அதை அவசரத் தேவை என்கிறபோது உடனே விற்று பணமாக்கிக்கொள்ள முடியாது.
அவர் என் நெருங்கிய நண்பரின் உறவினராகப் பழக்கமானார். அவரது நண்பர்கள் இவரிடம் முதலீடு செய்யப் பணம் இருக்கிறது என்பதை அறிந்து பல்வேறு ஏரியாக்களில் நிலத்தை வாங்க பரிந்துரை செய்திருக்கிறார்கள். இவரும் தனது மகளின் திருமணத் தேவையின் போது அதை விற்று பணமாக்கிக் கொள்ளலாம் என்று நினைத்து, ஆறு ஊர்களில் இடங்களை வாங்கியிருக் கிறார்.
அதில் சில இடங்கள் இவரது தேவைக்கு முன்னதாகவே நல்ல விலைக்குக் கேட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இவர் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று விட்டிருக்கிறார். ஆனால், மகளுக்குத் திருமணம் நிச்சயமாக, அந்த நேரத்தில் நிலத்தை விற்க முன்வந்திருக்கிறார். இவரது அவசரம் தெரிந்துகொண்டு, நிலத்தை அடிமாட்டு விலைக்குக் கேட்டிருக் கிறார்கள். அப்போதுதான் என்ன செய்யலாம் என்று என்னிடம் கேட்டு வந்தார்.
‘நீங்கள் மகளின் திருமணத் தேவைக்காக நிலத்தில் முதலீடு செய்தது முதல் தவறு. வாங்கிய ஓரிரண்டு ஆண்டுகளிலேயே உங்கள் நிலத்துக்கு நல்ல விலை கிடைத்தும் விற்க தவறியது நீங்கள் செய்த இரண்டாம் தவறு' என அவர் செய்த தவறுகளைச் சொன்னேன்.
எதிர்காலத் தேவைக்காகவென்று நிலத்தின் மீது முதலீடு செய்வதை முற்றிலும் தவறு என்று சொல்லிவிட முடியாது. நம் தேவை நெருங்கும்போது, அல்லது மனை விலை நல்ல உச்சத்துக்கு சென்றுவிட்டது; இனி எதிர்காலத்தில் இறங்கும் என்கிற சூழ்நிலைக் காணப் பட்டால் அந்த மனையை விற்று, பாதுகாப்பான முதலீட்டில் பணத்தை போட்டுவைக்க தயங்கக்கூடாது. விலை அதிகமாக இருந்தபோது நிலத்தை விற்ற பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் மகள் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி இருக்கலாம்.
தெரியாமல் வாங்கியதால் வந்த விபரீதம்!
தெரியாமல் வாங்கியதால் வந்த விபரீதம்!
என் இன்னொரு நண்பர் பிறந்தது ஈரோட்டில். படித்தது வளர்ந்தது எல்லாமே அங்கேதான். ஆனால், பிழைப்புக்காகக் குடியேறிய இடம் சென்னை. சுற்றுலாவுக்காகச் சென்றதை தவிர, குற்றாலத்தைப் பற்றி எந்தவொரு அறிமுகமும் இல்லாமல், அங்கிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கும் ஏரியாவில் இடம் வாங்குவதாக இருக்கிறேன் என்று என்னிடம் சொன்னபோதே, பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும் என்று எச்சரித்தேன். அதை அலட்சியம் செய்தவர், இடத்தை வாங்கி கையிலிருக்கும் பணத்தைப் போட்டு வீட்டையும் கட்டினார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. நிரந்தரமாக வாடகைக்கு வருபவர்கள் யாரும் இல்லை. தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டைப் பாதுகாக்க, பராமரிக்க நம்பிக்கையான ஆட்கள் அங்கே யாரையும் தெரியாது என்பதால் சென்னையிலிருந்து மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ குற்றாலத்துக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. நிரந்தரமாக வாடகைக்கு வருபவர்கள் யாரும் இல்லை. தற்போது காலியாக இருக்கும் அந்த வீட்டைப் பாதுகாக்க, பராமரிக்க நம்பிக்கையான ஆட்கள் அங்கே யாரையும் தெரியாது என்பதால் சென்னையிலிருந்து மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ குற்றாலத்துக்குச் சென்று வந்துகொண்டிருக்கிறார்.
நமக்குத் தெரிந்த இடங்களில் நிலத்தையோ அல்லது வீட்டையோ வாங்கிப் பராமரிப்பதுதான் சுலபமான காரியம். எந்த வகையிலும் அறிமுகமும் இல்லாத இடத்தில் நிலத்தை வாங்குவதால், அதன் பாதுகாப்புக்கு யாராலும் உத்தரவாதம் தரமுடியாது. எந்தத் தொடர்பும் இல்லாத ஊரில் வாங்கிய இடங்களை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியா மல் போனதால், மோசடிக்காரர்கள் அந்த இடத்தை அபகரித்துக் கொண்டதாக வரும் செய்திகளை நாம் அன்றாடம் படிக்கத் தானே செய்கிறோம்.
தந்திரத்தால் தடுமாற்றம்!
‘பிரபலமாக உள்ள துறையில் ஏமாற்று வேலைகள் அதிகமாக இருக்கும் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் ரியல் எஸ்டேட்' என்று எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார். ஆனால், அவரே ஒருநாள் ரியல் எஸ்டேட் டில் ஏமாந்தார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களைக் காட்டி பலவாறு நம்மை வாங்கத் தூண்டுவார்கள். அவர்களின் அந்தத் தந்திரத்தாலேயே ஏமாந்தவர்கள் பலபேர். அப்படித்தான் இவரும் ஏமாந்து போயிருக்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம், தான் நிலம் வாங்க இருப்பதாகச் சொல்ல, அவரோ அவருக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரிடம் இவரைச் சிக்க வைத்திருக்கிறார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் களில் பெரும்பாலானவர்கள் பல இடங்களைக் காட்டி பலவாறு நம்மை வாங்கத் தூண்டுவார்கள். அவர்களின் அந்தத் தந்திரத்தாலேயே ஏமாந்தவர்கள் பலபேர். அப்படித்தான் இவரும் ஏமாந்து போயிருக்கிறார். தனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரிடம், தான் நிலம் வாங்க இருப்பதாகச் சொல்ல, அவரோ அவருக்குத் தெரிந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரிடம் இவரைச் சிக்க வைத்திருக்கிறார்.
அந்த ரியல் எஸ்டேட் வியாபாரி ஒருநாள் இவர்களுக்காகத் தனியே கார் ஒன்றை ஏற்பாடு செய்து, அன்றைய தினத்துக்கான அனைத்து செலவுகளை யும் அவரே செய்து தன்னிடமுள்ள பல இடங்களுக்கு அழைத்துச் சென்று காட்டி இருக்கிறார். எந்த இடமும் பிடிக்காமல் போனாலும், நமக்காக இவர் இவ்வளவு செலவு செய்கிறாரே என நினைத்து ஓர் இடத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்த இடத்தில் இன்று வரை ஆட்கள் நடமாட்டமே இல்லாமல் இருக்கிறது.
நிலத்தை விற்க நினைப்பவர்கள் ஆயிரம்தான் சொன்னாலும் அந்த இடம் குறித்த விவரங்களைத் தனிப்பட்ட முறையில் விசாரிக்காமல் வாங்கக் கூடாது. அதேபோல, விற்பனை செய்பவரின் மீது பரிதாபப்பட்டு சொத்தை வாங்கக் கூடாது.
உஷார் வழிகள்!
பொதுவாக வீடு வாங்குகிறவர்கள், முக்கியமாக அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு வாங்குகிறவர் கள் உடற்பயிற்சி நிலையம் இருக்கிறது, நீச்சல்குளம் இருக்கிறது என்றெல்லாம் நினைத்து, அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால், அதை நாம் பயன்படுத்துவோமா என்றெல்லாம் அந்த நேரத்தில் யோசிக்க மாட்டார்கள்.
சில நேரங்களில் நிலத்துக்கான தேவை இருக்காது. ஆனால், நல்ல வருமானம் தரும் முதலீடு என்று பிறர் சொல்லக் கேட்டு, வட்டிக்கு கடன் வாங்கியாவது நிலத்தில் முதலீடு செய்து ஏமாந்து போவார்கள். இதுபோன்ற தருணங்களில் கொஞ்சம் உஷாராக இருந்தால் ஏமாற்றத்தைத் தவிக்கலாம்” என்று சொல்லி முடித்தார் ராதாகிருஷ்ணன்.
எல்லோருக்கும் நாம் பிறந்த மண்ணில் நமக்கான ஒரு சென்ட் நிலம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத்தான் செய்வார்கள். இந்த ஏக்கம் ஏமாற்றத்தைத் தராமல் இருக்க வேண்டுமானால், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது உஷாராக இருக்க வேண்டியது அவசியம்.
No comments:
Post a Comment