சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Dec 2014

கிரானைட் முறைகேடு: சகாயத்திடம் இன்ஸ்பெக்டர்கள் அளித்த புகாரால் பரபரப்பு!

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ..எஸ். அதிகாரி சகாயத்திடம் 2 இன்ஸ்பெக்டர்கள் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடு தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி தனது விசாரணையை தொடங்கினார் ..எஸ். அதிகாரி சகாயம். மேலும், அவர் நேற்று முதல் பொதுமக்களிடம் புகார் மனுக்களை வாங்கி வருகிறார்.

இந்நிலையில், இன்று மதுரை அண்ணா நகர் இன்ஸ்பெக்டர் முருகேசன், தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சகாயத்திடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ''எங்களைப் போன்ற பல்வேறு காவலர்கள் இணைந்து மதுரைக்கு அருகில் தாமரைப்பட்டி என்ற இடத்தில் ஒரு இடத்தை வாங்கி, நாங்கள் அனைவரும் பிளாட்டுகளாக பிரித்து கொண்டோம். அதில் தற்போது நாங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் நிலத்தில் நிறைய கிரானைட் கற்கள் உள்ளது.

இந்நிலையில், அதன் அருகில் கிரானைட் குவாரி வைத்திருக்கும் பி.ஆர்.பி. நிறுவனத்தினர் தங்களது குவாரியை விரிவுபடுத்துவதற்காக எங்களது நிலத்தையும் கேட்டார்கள். நாங்கள் வீடு கட்டி குடியிருப்பதால் கொடுக்க முடியாது என்றோம். இதையடுத்து, பெரிய மலைக்கற்களை கொண்டு வந்து எங்கள் நிலங்களுக்கு அருகில் குவித்து வைத்தனர். மேலும், அவர்களது குவாரிகளில் அதிகப்படியான சக்தி கொண்ட வெடிகளை வைத்து வெடிக்கச் செய்தனர். இதனால் எங்கள் வீடு அதிர்வுக்குள்ளாகி இருக்கிறது.


அவர்கள் எங்கள் வீட்டை அடிமாட்டு விலைக்கு கேட்டனர். நாங்கள் கொடுக்காததால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அவர்களுக்கு பயந்த சிலர் அடிமாட்டு விலைக்கு தங்களது வீடுகளை விற்று விட்டுச் சென்று விட்டனர். இது சம்பந்தமாக தாங்கள் விசாரணை நடத்தி, காவல்துறையினரின் வீடுகளையும், நிலங்களையும் மீட்டுத்தர வேண்டும். அல்லது எங்களது வீட்டிற்கான இழப்பீடு தொகையையாவது வாங்கித் தரவேண்டும்'' எனக் கூறியுள்ளனர்.

காவல்துறையினர் இருவர், ..எஸ். அதிகாரி சகாயத்திடம் புகார் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment