செல்போன் பயன்படுத்தும் இன்றைய இளைஞர்களின் பெரும் அலறலாக இருப்பது 'பேட்டரி லோ' என்னும் குமுறல். ஆம், காலேஜ் செல்லும் முன் போடப்படும் சார்ஜ் மாலை வீடு திரும்பும் வரை இருக்க வேண்டும் என மாணவர்கள் மட்டுமின்றி,
வேலைக்கு செல்வோரும் எதிர் பார்க்கின்றனர்.
மேலும், இன்றைய யுகத்தில் அனைவரும் இண்டர்நெட்டையும் மொபைலில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாகச் சேட் செய்வதாலும், 3ஜி இணைப்பை பயன்படுத்துவதாலும் அனைவரது போன்களும் சீக்கிரமாகவே 'பேட்டரி லோ' எனக் கதற ஆரம்பித்து விடுகிறது. இதனால், எந்நேரமும் மொபைல் சார்ஜ் ஃபுல்லாக இருக்க வேண்டும் என இன்றைய மொபைல் பயனாளர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் விஷயமாக மாறிவிட்டது. உங்களுக்காக, 2014 ஆண்டில் இதுவரை வெளியான சார்ஜ் அதிக நேரம் தாங்கும் டாப் 10 மொபைல் போன்கள் இதோ.. ஜியோனி மாரத்தான் M3 இந்தப் போனின் பேட்டரி திறன் 5000 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 32 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 792 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஐபோன் 6 ப்ளஸ் இந்தப் போனின் பேட்டரி திறன் 2915 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 24 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 384 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். மோட்டோ நெக்சஸ் 6 இந்தப் போனின் பேட்டரி திறன் 3220 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 24 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 330 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். சாம்சங் கேலக்ஸி நோட் 4 இந்தப் போனின் பேட்டரி திறன் 3100 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 22 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 440 மணி நேரம் வரை தாங்கும். எல்ஜி G3 இந்தப் போனின் பேட்டரி திறன் 3000 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 21 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 553 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். எஹ்டிசி டிசையர் Eye இந்தப் போனின் பேட்டரி திறன் 2400 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 20 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 538 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். லெனோவோ Vibe X2 இந்தப் போனின் பேட்டரி திறன் 2300 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 19 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 216 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஐபோன் 6 இந்தப் போனின் பேட்டரி திறன் 1810 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 14 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 250 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். சோனி எக்ஸ்பீரியா Z3 compact இந்தப் போனின் பேட்டரி திறன் 2600 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 14 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 920 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். எல் ஜி ப்ரோ 2 இந்தப் போனின் பேட்டரி திறன் 3200 MAh ஆகும். தொடர்ந்து பயன்படுத்தினாலும் 14 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 370 மணி நேரம் வரை பேட்டரி தாங்கும். |
உங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.
6 Dec 2014
அதிக பேட்டரி பேக்அப் மொபைல்களின் டாப் 10 பட்டியல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment