சென்னை கோடம்பாக்கத்தில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் அருளானந்தம் கைது செய்யப்பட்டார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை, உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கரன் அடித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், அந்த ஆசிரியரை ஒரு கும்பல் பள்ளிக்குள் புகுந்து தாக்கிவிட்டு தப்பியோடியது. இந்த காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தன.
இதைவைத்து, அடியாட்களை ஏவி ஆசிரியரை தாக்கியதாக, தொழிலதிபர் அருளானந்தம் மற்றும் சிலர் மீது கோடம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், திருச்சியில் பதுங்கியிருந்த தொழிலதிபர் அருளானந்தத்தை கோடம்பாக்கம் தனிப்படை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர். அவர் இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்தினர்.
இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் அருளானந்தத்தை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவரை புழல் சிறையில் காவல்துறையினர் அடைத்தனர்.

No comments:
Post a Comment