உலக மக்களின் நலன் வேண்டி 11 ஆயிரம் வில்வ பழங்கள் மற்றும் 11 ஆயிரம் தாமரை மலர்களை கொண்டு வாலாஜா தன்வந்திரி பீடத்தில் மகா யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
வில்வ மரத்தில் மகாலட்சுமி யாகம் செய்வதாக சிவபுராணத்தில் குறிப்பு உள்ளது. வில்வ மலரானது ஒருலட்சம் தங்க புஷ்பங்களுக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. 7 வில்வ மரங்களை வீட்டில் வளர்த்தால் கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், உலகிலுள் அனைத்து சிவலாலயங்களை வணங்கிய பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இவ்வகையான கடவுளின் அனுக்கிரகம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும், மக்கள் நோய் நொடியின்றி இன்புற்று வாழ வேண்டும் என்றும், உலக மக்கள் யாவரும் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்ற நோக்கத்துடனும் 2004 ஆம் ஆண்டு முதல், 11 ஆயிரம் வில்வ பழங்கள் மற்றும் 11 ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வேலூர் மாவட்டம், வாலாஜாவை அடுத்த கீழ்புதுபேட்டை தன்வந்திரி பீடத்தில் மகாயாகம் நடத்தப்பட்டு வருகிறது. 11வது ஆண்டாக இந்த யாகம் கடந்த 28ஆம் தேதி தொடங்கி, 4 நாட்கள் நடக்கிறது.

இதுகுறித்து விளக்குகிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர சுவாமிகள்.
''இன்றைய காலக்கட்டத்தில் பணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து, உடல்நிலையில் கவனம் செலுத்தாதவர்களுக்கு, உடல்நிலையில் எந்த பிணியும் ஏற்படாமல் இருக்கவே மருத்துவ கடவுளான தன்வந்திரியை வணங்கி யாகம் நடத்தபடுகிறது. 4 நாட்கள் நடக்கும் இம்மகாயாகத்தில் ஒவ்வொரு நாளும் 2,750 வில்வபழங்கள் மற்றும் 2,750 தாமரை மலர்களை கொண்டு மகாயாகம் நடத்தப்படும்,
அந்த வகையில் முதல் நாளான 28ஆம் தேதி ஒட்டுமொத்த மனித குலத்தை உள்ளடக்கிய 27 நட்சத்திரங்களின் பெயரில் ஹோமங்கள் நடத்தப்பட்டது, மேலும், உடல் நலம் வேண்டி பக்தர்கள் எழுதும் மந்திரங்கள் கடவுள் பாதத்தில் வைத்து அவர்களின் நலன் வேண்டி அர்ச்சனை செய்யப்பட்டது. 29ஆம் தேதி அன்று மக்கள் செல்வ செழிப்புடன் வாழ யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் செல்வ கடவுளான மகாலட்சுமி முன்னிலைபடுத்தப்பட்டு வில்வபழங்கள் மற்றும் தாமரைப் பூக்கள் கொண்டு மகாலட்சுமி யாகம் நடத்தப்பட்டது.

30ஆம் தேதி அன்று திருமணம் ஆகாத பெண்களுக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. இந்த யாகம் மூலம் திருமண தடைகள் நீக்கி விரைவில் திருமணம் நடைபெற சுயம்வர கலாபார்வதி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மகாவிஷ்ணுவின் கிருபையால் திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
கடைசி நாளான இன்று (1ஆம் தேதி) மஞ்சள் குங்குமம் போன்ற அபிஷேகங்களுக்கு மாற்றாக, நல்லெண்ணெய் கொண்டு மருத்துவ கடவுளான தன்வந்திரிக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, மக்கள் பிணியில்லா வாழ்க்கை அமைய யாகம் நடத்தப்பட உள்ளது. இந்த யாகம் மூலம் பக்தர்கள் நலமுடன் வாழ முடியும்'' என்றார்.
No comments:
Post a Comment