சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

6 Dec 2014

மோடிக்கு வைகோ நன்றி சொல்லியிருக்க வேண்டும்!”

ரேந்திர மோடியை இனியும் விமர்சித்துப் பேசினால் வைகோ இந்த நாட்டில் எங்கும் நடமாட முடியாது'' பி.ஜே.பியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் இந்த மிரட்டல் வாக்குமூலத்தைக் கட்சி எல்லைகளைத் தாண்டி, பல தலைவர்களும் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் கும்பகோணம் வந்திருந்த ஹெச்.ராஜாவை சந்தித்து சில கேள்விகளை முன் வைத்தோம்.

''வைகோ பாதுகாப்பாகத் திரும்பி போகக் முடியாது என்று நீங்கள் பேசியிருப்பது, அரசியலில் விரோதப் போக்கைத் தூண்டுவதாக இருக்கிறதே. ஆனால், வைகோ ஒருவரிகூட உங்களை விமர்சித்து பேசவில்லையே?''
''மானம் கெட்ட மத்திய அரசே என்றும், மோடி, ராஜ்நாத் சிங்கை தாறுமாறாக விமர்சித்தும் பேசியிருக்கிறார் வைகோ. நான் பேசியது என்னுடைய தலைவர்களை விமர்சித்துப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அவர்விட்ட அறிக்கைக்குத்தான் நான் பதில் சொல்லியிருக்கிறேன். பிரதமரை அவன், இவன் என்று பேசுவதுதான் முறையா? எனக்கு எதிரானக் கண்டனத்தை .தி.மு.., தி.மு. போன்ற கட்சிகள்தான் தெரிவித்திருக்க வேண்டும். சிறு சிறு கட்சிகள் கண்டனம் தெரிவிப்பது அவரவர் விருப்பத்தைக் காட்டிக்கொள்வதற்காக.
100வது சுதந்திரதினம் கொண்டாட இந்தியாவே இருக்காது என்று வைகோ சொல்லியதற்கு 125 கோடி மக்களும் கண்டனம் தெரிவிக்க வேண்டுமல்லவா? என் தலைவர் மோடியை பேசியதற்குத்தான் நான் பதில் பேசியிருக்கிறேன். என்னைப் பற்றி பேசியிருந்தால் நான் அமைதியாகத்தான் இருந்திருப்பேன்.''

''இதனால் .தி.மு. தொண்டர்கள் கொந்தளித்துப் போயிருக்கிறார்களே?''
''என் வீட்டுக்கு சிவகங்கை மாவட்ட .தி.மு. செயலாளர் செவ்வந்தியப்பன் போயிருக்கிறார். என் வீட்டை தாக்கி இருக்கிறார்கள். பி.ஜே.பி அலுவலகத்தைத் தாக்கி இருக்கிறார்கள். இது திராவிட கட்சிகளுக்கே இருக்கின்ற ஒரு குணாதிசயங்கள். இவர்களுக்கு எதிராக மாற்றுக் கருத்தை யாரும் சொல்லக் கூடாதா? எனக்கு வைகோ நண்பர்தான். ஆனால், நாகரிகமாக பேசுங்கள், இல்லையென்றால் எங்கள் ஆதரவை இழப்பீர்கள் என்று சொன்னேன். கூட்டணியில் இருந்துகொண்டு இப்படி பேசுவது அழகல்ல; மாற்றிக்கொள்ளுங்கள் என்று வைகோவுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன்!''

''வைகோ நாட்டில் நடமாட முடியாது என்று சொன்னதற்காக நீங்கள் சிறையில் இருக்க வேண்டும் என்று  தமிழருவி மணியன் சொல்லியிருக்கிறாரே?''

''.தி.மு.கவுக்கு அண்டர் ரைட்டர் தமிழருவி மணியன். அதனால் நான் பேசியதற்கு சிறையிலே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.     100வது சுதந்திரதினத்தைக் கொண்டாட இந்தியாவே இருக்காது என்று சொன்னவர்கள், எங்கே இருக்க வேண்டுமென்று தமிழருவி மணியன் பதில் சொல்ல வேண்டும். மோடியை விமர்சித்தால் பெரிய மனுஷன் ஆகலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். .வி.கே.எஸ்.இளங்கோவன்கூட மோடியை அந்த ஆளு, இந்த ஆளு என்று பேசியதாகச் சொல்கிறார்கள். நான் இளங்கோவனிடம் அதுமாதிரி எதிர்பார்க்கவில்லை!''

''சட்டமன்றத் தேர்தலிலும் பி.ஜே.பி., .தி.மு.., பா.. கூட்டணி தொடர வேண்டும் என்று பி.ஜே.பியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சொல்லியிருக்கிறார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?''
''கூட்டணியைப் பற்றி பேச எனக்கு உரிமை கிடையாது. கூட்டணியை முடிவுசெய்ய வேண்டியது அகில இந்திய நாடாளுமன்றக் குழு.''

''2016 சட்டமன்றத் தேர்தல்?''
''2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் .தி.மு.கவுக்கும், பி.ஜே.பிக்கும்தான் நேரடிப் போட்டி நடக்கும். .தி.மு. பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச் 2ம் தேதி ஏர்டெல் மேக்சிஸ் வழக்கு வருகிறது. தி.மு.கவுக்கு 2ஜி வழக்கு இருப்பதால் மக்களைப் பார்த்து பேசக்கூட நேரம் கிடைக்குமா என்ற நிலையில், ஊழல் வழக்கில் சிக்கியிருக்கிறார்கள். .தி.மு.கவுக்கு ஒரே பலமாக இருந்தது எம்.ஜி.ஆரின் இமேஜ்தான். இப்போது அந்த இமேஜ் காணாமல் போய்விட்டது. நேர்மையான, திறமையான ஆட்சி என்று சொன்னால், மோடி தலைமையிலான ஆட்சிதான் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மோடி இளைஞர்களின் ஹீரோ.''




No comments:

Post a Comment