சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2014

மாற்றுத் திறனாளிகள் வாகனம்: மனமிறங்கியது தமிழக அரசு!


மாற்றுத் திறனாளியான ஒருவர், வாகனம் ஓட்ட வேண்டும் என விரும்பினால், அது நிறைவேறுவது சுலபமான காரியமாக இல்லை.

காரணம், தன்னால் வாகனம் இயக்க முடியும் என மருத்துவத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆகிய இடங்களில் சான்றிதழ்கள் பெற்று, வாகனம் வாங்கிக்கொண்டு வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் சென்றால், அங்கே டிஸைன் அப்ரூவல் சர்ட்டிஃபிகேட் இருந்தால்தான் பதிவுசெய்ய முடியும் என்று சொல்லிவிடுவார்கள்.


டிஸைன் அப்ரூவல் இருந்தால் வாகனத்தை பதிவு செய்து, அத்துடன் அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அந்த மாற்றுத் திறனாளிக்கு லைசென்ஸும் வழங்குவார்கள். இந்த லைசென்ஸ் குறிப்பிட்ட அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு மட்டுமே. மேலும், இந்த லைசென்ஸும் பதிவு எண்ணும் இருந்தால்தான், அந்த வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் செலுத்த முடியும்.

டிஸைன் அப்ரூவல் இல்லை என்றால், வாகனத்தை பதிவுசெய்ய மறுத்து விடுவார்கள். அதனால், முதலில் சாதாரண வாகனமாக வாங்கி பதிவு செய்துவிட்டு, பின்பு வேண்டிய மாற்றங்களை வாகனத்தில் செய்துகொண்டு ஓட்டுகிறார்கள். தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பெரும்பான்மையான வாகனங்களுக்கு முறையான அனுமதி கிடையாது. அதனால், இன்ஷூரன்ஸும் செலுத்த முடியாது. இதனால், இந்த வாகனங்கள் பயன்படுத்துவோருக்கு ஏதாவது பிரச்னை என்றால், சட்டரீதியாக பல சிக்கல்களும் இன்ஷூரன்ஸ் கிளைம் செய்ய முடியாத அவல நிலையும் இருந்துவருகிறது.


நம் நாட்டில் வாகனங்கள் தயாரிக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக வாகனத்தில் மாற்றங்கள் செய்து அளிப்பதிலோ அல்லது அதற்கு வேண்டிய உதவிகள் செய்வதிலோ அக்கறை காட்டுவது இல்லைடி.வி.எஸ். உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே விதிவிலக்காக, மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனத் தயாரிப்புக்கு அனுமதி வாங்கி வைத்துள்ளன. ஆனால், ஒருவர் விரும்பும் வாகனத்தை வாங்கி மாற்றிக்கொள்ள முடியாத நிலை நீண்ட காலமாக இருந்துவருகிறது.

இந்தப் பிரச்னைக்கு  நீண்டகாலமாக போராடி வருகின்றன மாற்றுத் திறனாளிகள் அமைப்புகள். இவர்களின்  இடைவிடாத கோரிக்கைக்கு, தமிழக அரசு இறங்கி வந்திருக்கிறது.

சமீபத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "டி.வி.எஸ். நிறுவனம் தவிர்த்து, தமிழக அராசால் அங்கீகரிக்கப்படாத வேறு பணிமனைகள் இல்லாத தற்போதைய நிலையில், வாகன வகை மாற்றம்கோரி வருகிற மாற்றுத் திறனாளிகள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து உரிய சான்றிதம் பெற்று சமர்ப்பிக்கும்பட்சத்தில்,பதிவு அதிகாரி மற்றும் உதவி பதிவு அதிகாரி இருவரும் இணைந்து, அவ்வாகனத்தை ஆய்வுசெய்து, வகை மாற்றம் செய்யப்பட்ட வாகனம் மாற்றுத் திறனாளியால் எளிதில் கையாளக்கூடியதாக உள்ளதா மற்றும் பாதுகாப்பானதாக உள்ளதா என ஆய்வுசெய்து, அவ்வகை வாகனங்களுக்கு வகை மாற்றம் மேற்குறிப்புகள் வழங்குமாறும்,

மேற்குறிப்பு வழங்கப்பட்ட வாகனங்களை இயக்கும் தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குமாறும், இதுபோன்ற புகார்களுக்கு இடமளிக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்'" எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, மாற்றுத் திறனாளிகள் இருசக்கர வாகனத்தை தங்களுக்கு ஏற்றதுபோல மாற்றங்கள் செய்துகொண்டு, வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் ஓட்டிக் காண்பித்து, பதிவுசெய்யவும், லைசென்ஸ் பெறவும் முடியும்!


இனி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவார்கள் என்று நம்புவோம்!


No comments:

Post a Comment