சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Dec 2014

தி எண்ட்... தெலுங்கில் ஒரு பீட்ஸா!

ரு குறிப்பிட்ட வகைப் படம் வெளியானதும் அதே பாணியிலான படங்கள் நிறைய வெளிவருவது சினிமாவில் வழக்கமான ஒன்று.
'சுப்ரமணியபுரம்', 'பருத்திவீரன்' படங்கள் வெளியாகி ஹிட்டாக அதைத் தொடர்ந்து, அதே வகை படங்கள் பல வந்தன. அடுத்து 'சிவா மனசுல சக்தி' வெளியாகி வெற்றி பெற அதே டைப்பில் காமெடியை மையமாக வைத்து படங்கள் வந்தன. அதில் சந்தானம் அதிகமாக இருந்ததும் ஒரு ட்ரெண்ட் தான். அதன் பிறகு 'முனி' வெளியாகி திகில் + காமெடி கலவையை காண்பிக்க, இன்று வரை தொடர்கிறது பேய் படங்களின் ட்ரெண்ட்.

இது ஒரே மொழிக்குள் மட்டுமில்லாமல் மற்ற மொழிக்கும் பொருந்தும். தமிழில் 'பீட்ஸா' வெளியாகி ஒரு ட்ரெண்ட் செட்டராக அமைந்தது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தெலுங்கிலும் இதே டைப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் படம் தான் 'தி எண்ட்'. கிட்டத்தட்ட 'பீட்ஸா'வில் நாம் பார்த்த அதே திரைக்கதை பாணிதான். கதை பயணிப்பது மட்டும் வேறு களத்தில்.

ப்ரியா - ராஜீவ் புதிதாக திருமணமான தம்பதி. ராஜீவைப் பார்ப்பதற்காக அவரது நண்பர் கௌதம் அவர்கள் வீட்டிற்கு வருகிறார். கௌதமை வரவேற்று தன் புதுவீட்டை சுற்றிக் காண்பிக்கிறார்கள் ப்ரியா - ராஜீவ் தம்பதி. கட்டுமான வேலைகளில் சில வேலைகள் பாக்கி இருக்க, அதுவும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது. திடீரென மாடியில் வேலை செய்துகொண்டிருக்கும் ஒரு பெண் தவறி காலியாக இருக்கும் நீச்சல் குளத்தில் விழுந்து இறக்கிறார். அதைப் பார்த்ததில் இருந்து சற்று பயத்திலேயே இருக்கிறாள் ப்ரியா.

திருமணமானதற்கும், புது வீடு வாங்கியதற்காகவும் நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கிறார் ராஜீவ். அங்கு ரேகாவைப் பார்க்கிறான் கௌதம். சில சந்திப்புகளுக்குப் பிறகு இருவரும் நெருக்கமாகின்றனர். இருவரும் வெவ்வேறு வேலைகளுக்காக கோவா வரை செல்லவிருப்பதை அறிந்ததும் ஒன்றாகவே தங்கியிருக்கிறார்கள். பின்பு ஒரு நாள் திடீரென ப்ரியாவிடமிருந்து ஒரு போன்கால் வருகிறது. ராஜீவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவள் கூற உடனே அங்கிருந்து கிளம்பி சென்று நண்பனைப் சந்திக்கிறான். ராஜீவ் தன் மனைவி ப்ரியாவிற்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறுகிறான். அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான் கௌதம். பிறகு அவள் நடந்துகொள்ளும் விதத்தைப் பார்த்ததும் அதை அவனும் நம்புகிறான்.

ஒரு நாள் ப்ரியா, கௌதமைக் கண்டபடி திட்ட கோவமாகும் ராஜீவ் அவளின் தலையில் பலமாக அடித்து விடுகிறான். அதில் அவள் இறந்து போகிறாள். நண்பனைக் காப்பாற்ற நினைத்து அந்தக் கொலையை மறைக்க அந்த பிணத்தை ஒரு கவரில் சுற்றி வீட்டிலிருக்கும் நீச்சல் குளத்தில் போட்டு விடுகின்றனர். மறுநாள் அந்தபிணத்தை அரசு மருத்துவமனையில் இருக்கும் சவக்கிடங்கில் சேர்த்துவிடலாம். பிணத்தை யாரும் வாங்க வராததால் அவர்களே அதை எரித்து விடுவார்கள் எனத் திட்டம் போடுகின்றனர் ராஜீவும் - கௌதமும். எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு பிணத்தை நீச்சல் குளத்திலிருந்து எடுக்க செல்லும்போது ப்ரியாவின் பிரேதம் அங்கே இல்லாமல் போகிறது. ப்ரியாவின் பிரேதம் என்ன ஆனது? கொலை செய்த ராஜீவ் என்ன ஆகிறார் என்ற கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கிறது மீதிக் கதை.

அடுத்தடுத்து வரும் பிரச்னைகளையும், வெவ்வேறு நபர்கள் 'ப்ரியா எங்கே?' எனக் கேட்கும் கேள்விகளையும் சமாளிக்க முடியாமல் மிரளும் சுதீர் ரெட்டியின் (ராஜீவ்) நடிப்பு நன்று. நண்பனுக்காக கொலையை மறைக்க யோசிப்பதும், தடுமாறுவதும் என கௌதமும் (யுவா சந்திரா) முடிந்தவரை நடித்திருக்கிறார். ப்ரியா (பவானி ரெட்டி), ரேகா (கஸல் சோமையா) குறைந்த காட்சிகளே வந்தாலும் அழகு.

படத்தின் பெரிய பலவீனம், பயமுறுத்த முயற்சி செய்து அதில் தோற்றிருப்பதுதான். முடிந்தவரை திணறத் திணற ஒரு த்ரில்லர் கொடுப்பதற்கான எல்லா விஷயங்களும் இருந்தும் அதில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் ராகுல். படத்தின் திரைக்கதையில் நாம் தமிழில் பார்த்த 'பீட்ஸா'வின் ஸ்டைல் பிரதிபலிப்பது எளிதில் உணரமுடிகிறது. அதை படத்தின் க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் வரை பயன்படுத்தியிருப்பது பலவீனம்.

சின்னச் சின்ன ட்விஸ்டுகளால் கதை நகர்வது, ப்ரியாவின் பிரேதம் என்ன ஆனது? என்ற கேள்வியோடு அதைச் சார்ந்த பிரச்னைகளையும் காட்டி திரைக்கதை செல்வதால், படத்தின் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. ஆக்சன் படங்களில் மங்கிக் கொண்டிருக்கும் தெலுங்கு சினிமாவுக்கு 'தி எண்ட்' ஒரு புதிய முயற்சி. இன்னும் உழைத்திருந்தால் ஒரு ட்ரெண்ட் செட்டராகவே மாறியிருக்கும்.


இது நம்ம புத்தாண்டு சபதமுங்கோ...!

பிரசவ வைராக்கியம் மாதிரிதாங்க இந்த புத்தாண்டு சபதமும்! ஒவ்வொரு வருஷம் பிறக்கும்போதும் சபதத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. அதிலும் சிலரோட ஆழ்மனசுக்குள்ள எடுக்குற சபதம் இருக்கு பாருங்க... நம்ம தமிழ்ப் படங்களின் ஒட்டுமொத்த வில்லன்களும் தோத்தானுங்க! 

அப்படி என்னென்ன சபதங்களெல்லாம் எடுக்க நினைச்சிருப்பாங்க நம்ம ஆளுங்க........

ந்த வருஷமாவது கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி, மாடி வீட்டுல இருக்குற ஃபிகரை உஷார் பண்ணணும். குறைந்தபட்சம் அதோட முகத்தைப் பார்த்து ஸ்மைலாவது பண்ணணும்டா சாமி!

போ வருஷம் தத்திமுத்தி பாஸ் ஆன மாதிரி இல்லாமல், இந்த வருஷம் செம மார்க்கு எடுத்து பாஸாகணும். இந்த வருஷமும் பேப்பரை காட்ட மாட்டேன், பிட் அடிக்க விட மாட்டேன்னு எவனாவது வம்பு பண்ணினால் தக்காளி... சூனியம் வச்சிட வேண்டியது தான்!

மு கோழி பிசினஸ்ல ஆஹா ஓகோன்னு ஒரு வருஷத்தை ஓட்டியாச்சு! 18 வித பயனுள்ள டேபிள்ஷீட் பிஸினஸ்ல போன வருசத்தை சூப்பரா ஓட்டியாச்சு! இனி இந்த வருசத்துக்கு, மேக்னடிக் ஸ்டிக் பிஸினஸை கையில எடுக்கப் போறேன். 

இந்த ஸ்டிக்கால மண்டையில ரெண்டு தட்டு தட்டினால் இதிலிருக்குற ஆல்பா கதிர்கள் மண்டைக்குள்ள போயி, மெமரி பவரை தூண்டி விட்டு வளரவைக்கும்னு சொல்லப்போறேன். அமெரிக்காவிலுள்ள லிங்கன் யுனிவர்சிட்டியில இருக்குற ஆராய்ச்சியாளர்களே இந்த ஸ்டிக்கை டெஸ்ட் பண்ணி சர்டிபிகேட் கொடுத்ததா புருடா விடப்போறேன்! இந்த பினசும் சொதப்பிடாமல் வழக்கம் போல அமோக வருமானத்தை தரணும்! தர வைப்பேன்!

த்து வருஷம் பொறுத்தாச்சு... இனியும் பொறுக்க முடியாது. அப்பாவை வாலண்டியரா ரிட்டயர் ஆக வச்சு அந்த பதவிக்கு நாம வந்தே ஆகணும். வேணும்னா, நம்ம கட்சியோட மகளிர் அணித் தலைவியை கைய புடிச்சு இழுத்தாருன்னு புது பிரச்னையை கிளப்பி விட்டாவது அவரை ஓரங்கட்ட வைக்கணும்! இந்த ப்ளானுக்கு முதலில் அந்த தலைவியை சரிக்கட்டுற வேலையை ஆரம்பிச்சுட வேண்டியதுதான்!

வீட்டு லோனு, நகை லோனு டூவீலர் லோனு, எஜுகேஷனல் லோனுன்னு எக்கச்சக்கமான லோனை வாங்கிப் போட்டுக்கிட்டு அதை கட்ட முடியாமல் லோ லோன்னு அலையற பொழப்பை இந்த வருஷமே மூட்டை கட்டியாகணும். நாலு பேங்க்ல விசாரிச்சாவது இந்த லோன்களையெல்லாம் கட்டி அடைக்கிறதுக்கு லோன் தருவாங்களான்னு விசாரிச்சு அதை வாங்கி அடைச்சே ஆகணும்!

தோ ஒரு ஆவேசத்துல புதுக் கட்சி புத்தியில்லாமல் தொடங்கிட்டோம்! நாம தான் அப்படின்னா, நம்மளை நம்பி வந்தவங்களுக்காவது அறிவு வேணாமா? பரவாயில்ல, ஆனது ஆச்சு, அப்படியே கோட்டையவோ செங்கோட்டையவோ பிடிக்கப்போற மாதிரி பீலா விட்டுக்கிட்டே, உசுப்பேத்திக்கிட்டே இந்த வருஷத்தையும் கடத்திட வேண்டியது தான்! ஆனால் இதுக்காக நம்ம் சொந்த பணத்தில் சல்லிக்காசைக்கூட செலவு பண்ணிடாமல் பக்குவமா இருந்துக்கணும்!

ம்ம சாதியை நம்பித்தான் நாம இருக்கோம்கறது உண்மைன்னாலும், நம்மள நம்பித்தான் நம்ம சாதி சனமே இருக்குங்கற மாதிரி பில்டப்பு கொடுத்தாகணும்! அடுத்த வருசமே தேர்தல் வரப்போறதால அதிகமா யோசிக்காமல், சட்டுபுட்டுன்னு இந்த வருஷமே ஒரு கட்சியை தொடங்கி கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இறங்கிடணும்! நம்ம கட்சிக்கு கொடி என்ன கலர்ல வைக்கிறதுங்கறது தான் இப்ப பிரச்னையே!

சுண்டல்காரன்ல இருந்து சேட்டுக்கடை வரை எல்லா இடத்திலும் கடன் வச்சாச்சு! இனியும் ஒரே நேரத்துல நாலு பிகரை லவ் பண்ணிகிட்டு திரியிற வேலையெல்லாம் வேலைக்காகாது! வீட்டுக்கு நல்ல பிள்ளையா, நீங்க பார்க்கற பொண்ணையே கட்டிக்கறேன்னு சரண்டர் ஆயிட வேண்டியதுதான்! அப்புறம் மாமனார் போட்ட மைனர் செயினை அடமானம் வச்சாவது அம்புட்டு கடனையும், பிகரையும் செட்டில் பண்ணிட்டு அட்டகத்தி ஹீரோ மாதிரி இந்த வருஷம் புது வாழ்க்கையை தொடங்கிட வேண்டியதுதான்!

கிழவி இந்த வருஷமாவது மண்டைய போட்டால் நிம்மதியா இருக்கும்! அந்த சீரியலில் இருக்குற கிழவியும் மண்டையப் போட மாட்டேங்கறா, நம்ம வீட்டுல இருக்குற கிழவியும் மண்டைய போட மாட்டேங்கறா. இந்த வருஷமாவது ரெண்டுல ஒண்ணு பார்த்துடணும்... அந்த சீரியலா இல்ல இதுவான்னு! சமயம் கிடைக்காமலா போகும்?!

டெய்லி விதவிதமா சிங்காரிக்கிறது என்ன, புசுபுசு முடியை ஆட்டிகிட்டு பந்தா பண்றது என்ன, வேளா வேளைக்கு வகைவகையா கொட்டிக்கிறதுன்னு என்னன்னு ராஜ வாழ்க்கையா வாழ்ந்துகிட்டிருக்குற?! 

இதுல ஆசைஆசையா அன்னைக்கு ஒருநாள் உன் சாப்பாட்டுல கொஞ்சத்தை டேஸ்ட் பண்ணலாம்னு வந்தால், விரோதியை கண்ட மாதிரி கத்தி கூப்பாடா போடுற? இருடி இரு, இந்த வருஷத்துல என்னைக்காவது காம்பவுண்டு சுவரைத் தாண்டி வராமலா போற? அன்னைக்கு நீ பஞ்சர் தான் மவனே! (யார் யாரோ புத்தாண்டு சபதம் எடுக்குறப்ப, தெரு நாயி சபதம் எடுக்கக்கூடாதா பாஸ்?!) 

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், ஒவ்வொரு வருஷமும் புத்தாண்டு சபதம் எடுத்துட்டு அதில் ஒன்றைக்கூட நிறைவேத்தாதவங்க, ஏற்கனவே எடுத்த சபதத்தையே கன்டினியூ பண்றது பெட்டர்! :)