சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2012

தமிழன் vs பில்கேட்ஸ் - ஜோக்


ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒருபுதிய தலைவர் நியமிப்பதற்காக ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்ப்படுத்தினார்கள்,

5000 பேர் கலந்து கொண்டனர்.


அதில் ஒருவர் நமது " ராமசாமி".

பில்கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000
பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்.

பில்கேட்ஸ் : இதுவரை 100 பேருக்குமேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,

2000
பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று.

பில்கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்.

500
பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : நான் 15 வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்.

பில்கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்.

498
பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

பில்கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள், ­­

எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளுங்கள்.

ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து.
எந்த ஊரு...?

மற்றொருவன் : "சேலத்து பக்கம்".

அங்க நிற்கிறான்"தமிழன்

No comments:

Post a Comment