சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2012

தொழில் உரிமம் இன்றி, சென்னையில், 40 ஆயிரம் நிறுவனங்கள்


             தொழில் உரிமம் இன்றி, சென்னையில், 40 ஆயிரம் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. முறைப்படி உரிமம் பெறாவிட்டால், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.மாநகராட்சி பகுதிகளில் உள்ள, வணிக நிறுவனங்கள், கடைகள் முறையான உரிமம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு, மாநகராட்சிக்கூட்டத்தில், மேயர் சைதை துரைசாமி பதில் அளித்து பேசியதாவது:மாநகராட்சியின், 200 வார்டுகளிலும், 40,350 தொழில் உரிமங்கள் வழங்கப் பட்டு உள்ளன. 31,327 தொழில் உரிமங்கள் புதுப்பிக்கப் பட்டு உள்ளன. நடப்பு நிதியாண்டில், 3,033 தொழில் உரிமங்கள் வழங்கப் பட்டு உள்ளன.நடப்பு ஆண்டில், 34,360 தொழில் உரிமங்கள் புதுப்பித்தல், புதிய உரிமம் வழங்கிய வகையில், 7.42 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டு உள்ளது.

           வணிக வரித்துறை, விற்பனை வரித்துறை அலுவலகங்கள் மூலம் பெறப்பட்ட தகவலின்படி, மாநகராட்சி பகுதியில், 40 ஆயிரம் வியாபார நிறுவனங்கள், தொழில் உரிமம் இன்றி செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.இவற்றில், 6,000த்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, அறிவிப்புகள் வழங்கப் பட்டு உள்ளன. மற்ற நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும்.
இந்நிறுவனங்கள் உரிமம் பெறாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வரும் காலங்களில் தொழில் உரிமம் சார்ந்த வகையில், கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment