சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

24 Dec 2012

பேரூர் பட்டிசுவரர் ஆலயம்.





          திருக்கோயில்களில் அழகு மற்றும் சிறப்பு ஆகி்யவற்றுகான நற்பெயரைப் பொதுவாகத் தட்டிக்கொண்டு போவது தஞ்சை மாவட்டம் தான். இதற்குபோட்டி போடும் விதமாக அமைந்திருப்பது கோவை மாவட்டத்திலுள்ள பேரூர் ஆகும். கோயம்புத்தூரி்லிருந்து சுமார் முப்பது நிமிடப்பேருந்துப் பயணம் (ஆறு கிலோ மீட்டர்). கோயில் முகப்பில் பேருந்து நிற்கிறது. 
   
                    உலக  புகழ்பெற்ற    பேரூரில் சிவன், பட்டீசுவரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ள இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில்  அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. கோவிலுக்கு எதிரே குளம் ஒன்று உள்ளது. இக்கோவில் கி. மு. முதல் நூற்றாண்டு வாக்கில் கரிகால் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் இக்கோவிலில் உள்ள கனகசபையில் உள்ள ஒரே கல்லால் ஆன சிலைகள் ஆறாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கின்றன.
அமைவிடம்:   

                           கிழக்குப்பார்த்த கோயிலில் முதலில் அமைந்துள்ளது 

இராஜகோபுரமாகும். ஐந்து நிலைகளைக் கொண்ட இராஜகோபுரம் சிறந்த 

சுதை வேலைப்பாடு கொண்டது. இராஜ கோபுரத்தை அடுத்து நீண்ட நெடிய 

வழியில் இருபுறமும் அமைந்துள்ள தூண்களில் சிறந்தசிற்பங்கள் 

காணப்படுகிறன்றன. அரக்கியின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வரும் 

அனுமன், ஏகபாதமூர்த்தி, கொடி பெண்கள், இடக்கை போல ஹஸ்தம் 

வலக்கைப்பூக் கொண்ட அம்மை முதலிய சிற்பங்கள் சிறப்புடையன. 

மண்டபத்தில் மேல் கூரையில் அறுபான்மை நாயன்மார் வரலாறுகள் 

ஓவியமாகத் தீட்டப்பெற்றுள்ளன. மேல் கூரையையொட்டிய இரு 

பகுதியிலும் பேரூர் புராணச் செய்திகள் ஓவியமாகக் காட்டப்பட்டுள்ளன.
                                                                     

                            
                 வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நிருதி 

விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. வெளிப்பிரகாரத்தில் மேற்குப்பகுதியில் 

சொர்க்க வாசல் மேற்கு நோக்கிய வாயிலைக் கொண்ட மண்டபத்துடன் 

விளங்குகிறது. அதனையடுத்து வடக்குப் பகுதியில் மேற்கு நோக்கி 

அருள்மிகு தண்டபாணி கோயில் அமைந்துள்ளது. நின்ற கோலத்தில் 

வலக்கையில் தண்டு, இடக்கை கட்டியம் வலம் பிதஹஸ்தம், அரையில் 

கோவணம் உடையவராய் தண்டபாணிக் கடவுள் பக்தர்களுக்கு 

அருள்பாலித்து வருகிறார்.

              அதனையொட்டி தென்புறத்தில் விசாலாட்சி ஆலயமும் 

வலப்புறத்தில் விசுவநாதர் ஆலயமும் உள்ளன. வெளிப்பபிரகாரத்தின் வட 

கீழ்த்திசையில் யாகசாலை மண்டபம் உள்ளது. அதனையொட்டி அம்மன் 

கோயிலின் நேர் கிழக்கில் கிழக்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. 

அவ்வாயிலின் வெளிப்புறத்தின் மேல் அம்மையப்பர் திருமணக்காட்சி கதை 

வேலைப்பாட்டில் சிறப்புற்றுத் திகழகின்றது. அவ்வாயிலின் தெற்கில் வாகன 

மண்டபம் உள்ளது.
         
               வெளிப்பிரகாரத்தைக் கடந்து அருள்மிகு பட்டிஸ்வரர் 

ஆலயத்தை அடைய மேற்கு நோக்கிச் சென்றால் கொடிக்கம்பம், பலிபீடம்

இடப வாகனம் ஆகியவற்றை முறையாகக் கடந்து உள்ளே செல்லலாம். 

இரண்டாம் நுழை வாயிலின் தென்புறத்தில் விநாயகரும், வடபுறத்தில் 

சண்முகரும் வீற்று உள்ளனர். வாயிலைக் கடந்து உள்ளே சென்ற 

உட்பீரகாரத்தில் தெற்கே சென்றால் தென்கிழக்கு மூலையில் சூரியன் 

மேற்கு நோக்கி நின்ற நிலையில் உள்ளார். தெற்குப்பகுதியில் அறுபத்து 

மூவர் மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் நாயன்மார் திருவுருவங்களும்

சந்தானக்குரவர் திருவுருவகங்களும் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. 

அதனை ஓட்டித் தென்மேற்குத் திசையில் விநாயகர் ஆலயம் உள்ளது. 

உட்பிரகாரத்தின் மேல் பகுதியில் சிவலிங்கங்கள் உள்ளன. சிவலிங்களின் 

பெயர்களை நின்று நிதானமாக படித்து வணங்கி செல்லுங்கள். 

                       இந்த   லிங்கங்களை அடுத்து வலப்புறம் மனோன்மணி உருவம் 

உள்ளது. உட்பிரகாரத்தில் வடமேற்கில் வலப்புறம் வள்ளியம்மை, இடப்புறம் 

தெய்வானை அம்மையுடன் சுப்பிரமணியர் நின்ற கோலத்தில் கிழக்கு 

நோக்கிய ஆலயத்தில் அருள்பாவித்து வருகிறார். உட்பிரகாரத்தில் 

வடபுறத்தில் நீண்ட மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தின் 

கீழ்க்கோடிப்பகுதியில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் 

திருவுருவங்கள் உள்ளன. இவை இரண்டும் மிகப் பழைய உருவங்கள். 

அடுத்து வடகிழக்கு மூலையில் ஞானபைரவர் தெற்கு நோக்கி நின்ற 

கோலத்தில் உள்ளார். பேரூர் முக்தித்தலம் ஆதலின் நாய் வாகனம் 

இல்லாத ஞானபைரவர் நிலையில் காட்சியளிக்கிறார். ஞானபைரவரை 

அடுத்துக் கிழக்குப் பகுதியில் சந்திரன் நின்ற நிலையில் உள்ளார். 

உட்பிரகாரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பொரிய மண்டபம் உள்ளது. 

இடபத்தின் கொம்பினால் (சிருங்கத்தால்) தோன்றிய தீர்த்தம் சிருங்கத் 

தீர்த்தம் ஆகும்.
         
                 மண்டபத்திலிருந்து நுழைவாயிலில் துவாரபாலகர் 

இருபுறமும் உள்ளனர். துவார பாலகர் அனுமதியுடன் உள்ளே சென்றால் 

மகாமண்டபம் அடையலாம். அம்மண்டபத்தில் தூண்கள் உத்தரங்கள் 

வாயில்கள் ஆகியவற்றில் அவற்றைச் செய்து அளித்தவர்களின்  பெயர்கள் 

கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மகா மண்டபத்தின் தென்பகுதியில் 

சிறிய விநாயகர் அமர்ந்து அருள் பாலிக்கிறார்.  அடுத்து வருவது அர்த்த 

மண்டபம் அர்த்த மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் கருவறையை 

அடுத்து மனோன்மணியம்மை செம்புத்திருமேனி உள்ளது. கருவறையில் 

அருள்மிகு பட்டிப்பெருமான் சுயம்பு வடிவமான சிவலிங்கமாக வீற்றிருந்து 

அருள்பாலித்து வருகிறார். சிவலிங்கத்திருமேனியின் முடியில் 

குளம்புச்சுவடும், கொம்புச் சுவடும் இன்றும் உள்ளன.
     
            கருவறையின் மேல் விமானம் வேசர அமைப்பில் உள்ளது. 

விமானத்தில் எட்டுத் திசைக் காவலர் உருவங்களும் பிற உருவங்களும் 

சுதை வேலைப்பாட்டில் அமைந்துள்ளன. வெளிப்புற கோஷ்டங்களின் 

தென்புறத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேல்புறத்தில் லிங்கோற்பவர்

வடபுறத்தில் நான்முகன், விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உருவங்கள் 

உள்ளன. வடபுறத்தில் கோமுகியை அடுத்து சண்டேசுவர நாயனார் ஆலயம் 

அமைந்துள்ளது. உட்பிரகாரத்தை அடுத்து வெளியில் வடக்குப்பகுதியில் 

நக்கிரகங்கள் ஆலயம் உள்ளது. அருள்மிகு பட்டிப்பெருமான் ஆலயத்துக்கு 

வடக்கிலும், அருள்மிகு பச்சைநாயகி அம்மன் ஆலயத்துக்குத் தெற்கிலும் 

ஆக இடையில் திருக்கல்யாண மண்டபம் உள்ளது. கிழக்கு நோக்கிய 

அம்மன் சன்னதியின் தென்புறத்தில் துர்க்கை அம்மன் ஆலயம் 

அமைந்துள்ளது. நடராச பெருமான் தூக்கிய திருவடியின் நேர் நோக்கிய 

நிலையில் துர்க்கையின் திருவுருவம் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். 

          அம்மன் சன்னதியில் வடபுறத்தில் வரதராசப் பெருமாள் கோயில் 

உள்ளது. மகா மண்டபத்தின் உள் வடபுறத்தில் பள்ளியறை அமைந்துள்ளது 

அர்த்தமண்டபத்தை அடுத்துக் கருவறையின் நின்ற கோலத்தில் இடக்கை 

டோல ஹஸ்தம், வலக்கை பூவேந்திய நிலை அருள் வெளிப்படும் கண்கள் 

என்ற அமைப்பில் அருள்மிகு பச்சைநாயகி அம்மன் அருள்பாலித்து 

வருகிறார். தமிழில் பச்சைநாயகி என்றும் வடமொழியில் மரகதாம்பாள் 

என்றும் வழங்குவது மரபு. அம்மன் கருவறையின் மீது நாகர (சதுர) 

அமைப்பில் விமானம் உள்ளது. அம்மன் கோயில் மகா மண்டபத்தில் 

வடக்கில் வெளிப்பிரகாரத்தில் அண்மைக் காலத்தில் கொண்டு 

வைக்கப்பெற்ற ஒரே மரத்திலான ஆஞ்சநேயர் திருவுருவம் உள்ளது. 

இத்திருக்கோயிலின் முன்புறம் தெப்பக்குளம், மிகவும் அழகான முறையில் 

அமைக்கப்பட்டுள்ளது. இது பதினாறு வளைவு களையுடையது. சிறிய

பெறிய ரதங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.




விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் 

கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!




No comments:

Post a Comment