சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2012

தாய் மொழி கல்வி


தாய் மொழி கல்வி:

தமிழக பள்ளிகள் மற்றும் பொறியியல் உள்ளிட்ட பெரும்பான்மை கல்லூரிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பாடம் நடத்தபடுகிறது. புரியாதவர்களுக்கு தமிழில் கேள்வி கேட்கவோ-விளக்கம் தரவோ பெரும்பாலும் இடமளிப்பதில்லை. இதனால் பள்ளிகளில் மிகசிறப்பாக கல்வி கற்றவர்கள் கூட கல்லூரிகளில் தோல்வியை தழுவி தாழ்வு மனப்பான்மையால் வாழ்க்கையை இழக்கிறார்கள் (என் கல்லூரி நண்பன் ஞாபகம்). இழப்பு அவர்களுக்குமட்டும் இல்லை பாரத நாட்டுக்கும்தான்.

கற்றுகொடுக்கபடுவது தொழில்நுட்பமா இல்லை மொழியையா என்பது விளங்க வில்லை. எதிர்த்து எந்த மாணவனும் குரல் கொடுப்பதும் இல்லை. 'எனக்கு புரியவில்லை, தமிழில் விளக்குங்கள்' என்று எத்தனை மாணவன் போர்க்கொடி தூக்கியுள்ளான். 'நான் கற்க வந்தது பொறியியல், ஆங்கிலம் அல்ல!' என்று கூறும் துணிவு எத்தனை பேருக்கு உள்ளது.

ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட உலகின் தொழில்நுட்ப முன்னோடிகளாக இருக்கும் அனைத்து நாடுகளும் தங்கள் தாய் மொழியிலேயே பாடம் நடத்துகிறார்கள். இது மொழி வளர்க்கும் முயற்சி / மொழி வெறி என்பது நிச்சயம் தவறு. 

இதில் அறிவியல் காரணங்களும் மிக முக்கியமாக உள்ளது. ஒவ்வொருவரின் மூளையும் ஆழ்மனதில் தங்கள் தாய் மொழியை கொண்டே இயங்குகிறது. வேற்று மொழியில் கற்றல் பணி நடக்கும்போது மூளையின் ஆற்றல மொழிபெயர்ப்பு வேலைகளில் செலவு செய்யபடுகிறது. கற்பிக்கப்படும் மொழியின் அறிவு குறைவாக உள்ளபோது, நிலைமை இன்னும் மோசமாகி பாடத்தை பின்தொடர முடியா நிலை ஏற்படுகிறது.

தங்கள் தாய்மொழியில் கற்பதால் புரிதலும், நுண்ணறிவும், ஆராய்ந்து உணர்தலும் அதிகமாகிறது. கற்கும் வேளைகளில் மூளையின் செயலாற்றல் நன்கு பயன்படுத்தி கொள்ளபடுகிறது. தாய்மொழியில் கற்பதால் மொழிமாற்ற வேலைகள் மூளைக்கு குறைந்து கற்கும் வேலையை மட்டுமே பார்ப்பதால் மூளையின் ஆற்றல நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளமுடிகிறது.

இதனால் தான் தற்காலங்களில் நம் நாட்டில் முன்னோடிகள், தலைவர்கள், சித்தாந்தவாதிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனையாளர்கள் என எல்லாவற்றிற்கும் அறிவு பஞ்சம் ஏற்படுகிறது. பிற மொழிக்கல்வி கார்பரெட்களுக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்வதிலேயே முழுமூச்சாக உள்ளன.

இதை அரசாங்கமும் கல்வி நிறுவனங்களும் கண்டு கொள்ளாவிட்டாலும் மாணவர்களும் ஆசிரியர்களும் 
நினைவில்  கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment