சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Dec 2012

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - 2


புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர்.
            இவர் கடவுள் நம்பிக்கையற்ற  கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது.

தஞ்சை  தமிழ்ப் பல்கலைக் கழகம்:
1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
·         முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13.6.1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது.
·         1981 ஆகஸ்ட் 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது.
·         இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமயினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.
 ஈழம் குறித்தான ஆர்வம்:
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன்  தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார்.பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்.  பிரபாகரன் நட்பு :

விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையை கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றி பிரபாகரனிடம் கூறியுள்ளார்.எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்என்று கூறியுள்ளார்

1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.

விருதுகள்:


        1.     பாரத் விருது - இந்திய அரசு  விருது 
2.     அண்ணா விருது - தமிழக  அரசு  விருது 
3.     பாரத ரத்னா விருது - இந்திய அரசு  விருது 
4.     பத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)
5.     சிறப்பு முனைவர் பட்டம் - அமெரிக்க அரிசோனா பல்கலைகழகம், சென்னை தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்(ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலை  பல்கலைக்கழகம்(ஏற்க மறுப்பு),
6.     வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.

திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்:

1.     இதயக்கனி - அறிஞர் அண்ணா 
2.     புரட்சி நடிகர் - கலைஞர்.மு.கருணாநிதி
3.     நடிக மன்னன் -    சென்னை ரசிகர்கள்
4.     மக்கள் நடிகர் - நாகர்கோவில்   ரசிகர்கள்
5.     பல்கலை வேந்தர் சிங்கப்பூர்  ரசிகர்கள்
6.     மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்
7.     கலை அரசர்  விழுப்புரம்  முத்தமிழ்க் கலை மன்றம்
8.     கலைச்சுடர் -    மதுரை  தேகப்பயிற்சிக் கலை மன்றம்
9.     கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்
10.  கலை மன்னன்  சென்னை  ரசிகர்கள்
11.  கலை வேந்தர் - மலேசிய  ரசிகர்கள்
12.  திரை நாயகன் - சேலம் ரசிகர்கள்


பொதுச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும்:


1.     கொடுத்து சிவந்த கரம் - கும்பகோணம்  ரசிகர்கள்
2.     கலியுகக் கடவுள் - பெங்களூரு விழா
3.     நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்
4.     பொன்மனச் செம்மல் -  கிருபானந்த வாரியார்
5.     மக்கள் திலகம் - தமிழ்வாணன்
6.     வாத்தியார் திருநெல்வேலி  ரசிகர்கள்
7.     புரட்சித்தலைவர் - கட்சித் தோழர்கள்
8.     இதய தெய்வம் - தமிழ்நாடு  பொதுமக்கள்

எம்.ஜி.ஆர்  நினைவிடம்: 
             தமிழக  அரசு   எம். ஜி. ஆர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில்  அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம். ஜி. ஆர் நினைவிடம்  அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
                தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். 

எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் :
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன.

நினைவு இல்லம் குறித்து எம்.ஜி.ஆர் உயில்:

பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரது நினைவு இல்லங்கள் எல்லாம் தமிழக அரசின் செலவிலேயே ஏற்படுத்தப்பட்டன. அரசுக்கு இந்த செலவை தவிர்த்திட என்னுடைய வீட்டையே இந்த நினைவு இல்லமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன் என்று எம்.ஜி.ஆர் தான் அலுவலகமாக பயன்படுத்திய வீட்டினை நினைவில்லமாக மாற்றுமாறும், இந்த இல்லத்தின் பராமரிப்பு செலவுக்காகவும், காவல் காப்பது போன்றவைகளுக்காகவும் ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்களில் இருந்து வரும் வருமானத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் தன் உயிலில் குறிப்பிட்டுள்ளார். 

நினைவு இல்லத்தில் உள்ள நினைவுப் பொருள்கள்:

எம்.ஜி.ஆர் வளர்த்த ஆண் சிங்கம் ராஜா பாடம் செய்து பதப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. எம்.ஜி.ஆர் படித்த நூல்கள் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பொருள்கள் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் முதன் முதலாக இணைந்த 12 பேரின் உறுப்பினர் படிவங்கள். எம்.ஜி.ஆரின் அம்பாசிடர் கார் எம்.ஜி.ஆர் உபயோகித்த உடற்பயிற்சி கருவிகள். துப்பாக்கி சூட்டினை அடுத்து அவர் கழுத்தில் இடப்பட்டிருந்த மாவுக் கட்டு போன்றவை நினைவு இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்:

திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்த கோவிலை அமைத்து பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்கு கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்கு பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது. 
நிறைவு:
                   ஒருவருக்கு  அறிவுரை செய்பவன் தான் முதலில் அவற்றை கட்டாயமாக பின்பற்றுபவனாக இருக்க வேண்டும் அது போல் மக்களுக்கு நல்ல கருத்துகளை கூறியதோடு நிற்காமல் தானும் வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.

       " நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் 
          இந்த ஏழைகள் வேதனை படமாட்டார்"
என்று தன்  ஆட்சியை நடத்தி மக்களுக்கு நன்மை செய்து 
        "வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி 
          மக்களின் மனதில் நின்றவர் யார் " 
என்று வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று விட்டார்.அவர் புகழ் இந்த உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.



விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் படிப்பிணை பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!







No comments:

Post a Comment