தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி. இவர் பீட்சா படத்தின் வெற்றியால் பேசப்படும் நடிகராகியிருக்கிறார். வித்தியாசமான ஸ்கிரிப்ட், வித்தியாசமான ஹீரோ என்று அவரை உற்று நோக்குகிறது கோலிவுட். இதனால் பீட்சாவுக்குப்பிறகு சில முன்னணி இயக்குனர்களே அவரிடம் கதை சொன்னார்கள். ஆனால் பல கதைகள் கேட்டு அதில் நலன் என்ற புதுமுக இயக்குனர் சொன்ன கதையை மட்டுமே ஓ.கே செய்து படப்பிடிப்புக்கு செல்ல ஆயத்தமாகி விட்டார் விஜய்சேதுபதி.
மேலும், சூதுகவ்வும் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் ஒரு புதுமையான ஹீரோவாக நடிக்கிறேன். ஆனாலும் காமெடியும் இருக்கிறது. முக்கியமாக இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத கதைக்களமாக இருக்கும் என்று அப்படம் பற்றி சொல்லும் விஜய்சேதுபதி, இனி சுந்தரபாண்டியனில் நடித்தது போன்று வில்லனாக நடிக்க மாட்டாராம். பீட்சா தனக்கென ஒரு அங்கீகாரத்தை கொடுத்து விட்டதால் அந்த ட்ரேக்கிலேயே முழுவீச்சில் பயணிக்கப்போவதாக சொல்கிறார் விஜய்சேதுபதி.
இந்த நிலையில், ஒரு படத்தின் வெற்றியிலேயே 50 லட்சம் சம்பளம் கேட்டு காலரை தூக்கி விடுகிறார் விஜய்சேதுபதி என்றொரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவுகிறது. ஆனால் அவரிடம் இதுபற்றி கேட்டால், என்னைப்பற்றி இதுவரை கிசுகிசுக்களோ, வதந்தியோ வரவில்லையே என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் வரத் தொடங்கியிருக்கிறது என்று சொல்லி சிரிக்கிறார்.

No comments:
Post a Comment