சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Dec 2012

தெரிந்து கொள்வோம்


1.சுழற்றும் இராட்டினங்களில் (Roller Coaster) சுற்றுபவர்களுக்கு, மூளையில் குருதி உறையும் வாய்ப்பு உண்டு.

2.
நீலநிற விழிகள் கொண்டவர்களால், இரவில் நன்றாகப் பார்க்க முடியும்.

3.
பணம், காகிதத்தில் அச்சிடப்படுவது இல்லை; பருத்தி இழைகளால் அச்சிடப்படுகிறது.

4.
ஒரு சொட்டு மதுவை தேளின் முதுகில் ஊற்றினால், அது விரைவில் இறந்து விடும்.

5.
நைல் நதியின் ஓடுகின்ற வழியில், நிலத்துக்கு உள்ளே, அதைவிட ஆறு மடங்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

6.
உலகில் 29 விழுக்காடு பெட்ரோல்; 33 விழுக்காடு மின்சாரத்தை அமெரிக்கர்களே பயன்படுத்துகின்றார்கள்.

7.
காதுகளில் ஒலிபெருக்கிகளை மாட்டிக்கொண்டு பாடல்களைக் கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும் திரிபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை: ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக அணிந்து இருந்தால், உங்கள் காதுகளுக்குள் வழக்கத்தை விட 700 விழுக்காடு கூடுதலாக நோய்க்கிருமிகள் உட்புகுந்து விடும்.

8.
உலக மாந்தர்களின் இறப்புக்குக் காரணமாக இருக்கின்ற விலங்குகளில் முதல் இடம் வகிப்பது கொசு.

9.
இடது கை பழக்கம் உள்ளவர்களை விட, வலது கை பழக்கம் உள்ளவர்கள், சராசரியாக 9 ஆண்டுகள் கூடுதலாக வாழ்கின்றார்கள்.

10.
வீடுகளில் காற்று பதனப் பெட்டிகளைப் போல (AC) நமது உடலில் மூக்கு செயல்படுகிறது; சூடான காற்றையும், குளிர்ந்த காற்றையும் சமனப்படுத்தி ஒரே அளவு வெப்பத்தில் நமது நுரையீலுக்கு உள்ளே செலுத்துகிறது: காற்றில் உள்ள தூசிகளை வடிகட்டி அனுப்புகின்றது.

11.
இறக்கும் தறுவாயில், நம் உடலில் முதலில் செயல் இழக்கும் உறுப்பு - காது.

12.
அமெரிக்காவின் வடமேற்குக் கரையில் உள்ள ஒரேகான் மாநிலத்தில், 2400 ஆண்டுகள் வயது உள்ள காளான் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது; 3.4 சதுர மைல்கள் பரப்பில் விரிந்து உள்ளது.


விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!




No comments:

Post a Comment