சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Dec 2012

கொரில்லா



        நன்கு வளர்ந்த கொரில்லாக்கள் சுமார் 6 அடி உயரமும் 150 கிலோ எடையும் இருக்கும். கொரில்லாக்கள் இரண்டு கைகளையும் விரித்தால் சுமார் 8 அடிகள் வரை நீளும். இவை பொதுவாக நான்கு முதல் எட்டு மனிதர்களின் பலத்திற்கு சமமான பலத்தினை பெற்றிருக்கும். பெண் கொரில்லாக்கள் ஆண் கொரில்லாகளை விட உருவத்தில் பாதி அளவுதான் இருக்கும்.

        கொரில்லாக்கள் மனிதர்களை போல் கை மற்றும் கால்களில் தலா பத்து விரல்களையும், கண்கள் மனிதர்களை போல் முன்னோக்கிய பார்வையும், 32 பற்களையும் பெற்றிருக்கும். ஆனால் கால்களை விட கைகள் மிக நீளமாகவும் அதிக தசைகளையும், கைகளில் உள்ள விரல்களை போல் கால்களிலும் இருக்கும். Adult கொரில்லாக்களின் (Age-15) முதுகில் உள்ள ரோமங்கள் வெளிர்நிறத்தில்  மாறிவிடும்.

கொரில்லாகளால் மனிதர்கள் போல் கைகளை ஊன்றாமல் நடக்க முடியும் ஆனால் அவை அவ்வாறு நடக்க விரும்புவதில்லை. இவைகளுக்கு கோபமும் எரிச்சலும் வரும்போது மட்டுமே கைகளை தூக்கி நெஞ்சில் அடித்து பயங்கரமாக சத்தமிடும்.
கொரில்லாக்கள் பொதுவாக 50 வருடங்கள் வரை உயிர்வாழும். இதன் குட்டிகள் மிக சிறியவையாக 2 கிலோ எடையே இருக்கும். குட்டிகள் பொதுவாக 3 வருடங்கள் வரை தாயை சார்ந்தே வாழும் ஆண் கொரில்லாக்கள் 12-13 வருடத்திலும் பெண் கொரில்லாக்கள் 11-12 வருடத்திலும் பருவ வயதை எட்டும். கூட்டம் கூட்டாமாக வாழும் இவை இளம் வயது கொரில்லாகளுக்கு உணவு சேகரிக்கும் முறை, குழந்தை பரிமாரிப்பு, தாங்கும் வீடு கட்டும் முறை போன்றவற்றை கற்று கொடுக்கும்.

கொரில்லாக்கள் உடல் அசைவுகள், சத்தம், முக மாற்றத்தின் மூலமாக பேசிக்கொள்ளும். மனிதர்களின் சத்தத்தை போல் சத்தம் போடமுடியாது, ஆனால் நம் கற்றுகொடுத்தால் செய்கைகளையும், நாம் பேசும் மொழியையும் அறிந்து செயல்படும்.

கொரில்லாக்கள் மிகவும் புத்திசாலியானது. அவை நம்மைபோல எல்லாவிதமான Emotion -களையும் ( love, hate, fear, grief, joy, greed, generosity, pride, shame, empathy, and jealousy) பகிர்ந்துகொள்ளும். கொரில்லாக்கள் நம்மைபோல் சிரிக்கும், சத்தம் போட்டு அழும் ஆனால் அழும்போது கண்ணீர் வராது.

கொரில்லா குடும்பத்தில் ஒரு Silverback, பிரச்சனை செய்யாத தன்மையுடைய பலம் வாய்ந்த ஒரு ஆண் கொரில்லா, வயதுக்கு வாராத ஒரு ஆணும் (8-13 years old) மூன்று அல்லது நான்கு வயதுக்கு வந்த பெண் கொரில்லாவும், 5 -8 வயதுக்கு வராத பெண் கொரில்லாகளும் இருக்கும். சிலநேரங்களில் குடும்பங்கள் இதைவிட சிறியதாகவும், பெரியதாகவும் இருக்கலாம். சில நேரம் இளம் ஆண் கொரில்லாக்கள் கூட்டமாக தனியாகவும் சுற்றிகொண்டிருக்கும். 

கொரில்லாக்கள் இரவுநேரம் 13 மணி நேரமும், மத்திய வேளைகளில் சிறிது நேரமும் தூங்கும், மாற்ற நேரங்களில் உணவை தேடி உண்டுகொண்டிருக்கும். இவை பொதுவாக கிழங்கு, பழம், இலை, தளை, எறும்பு, கரையான் போன்றவற்றையும் உண்ணும். தூங்குவதற்கு வசதியாக சிறிய மரங்களில் படுக்கைகளை தயார் செய்து கொள்ளும், படுக்கைகள் springy platform போன்று இருக்கும்.

கொரில்லாக்கள் மிகவும் அமைதியானவைகள், இவைகளின் முதல் எதிரியே மனிதன்தான், இன்றும் ஆப்ரிக்காவில் இவை உணவுக்காக வேட்டையாட படுகிறது. பிற விலங்குகளை பிடிக்க இவற்றை கண்ணியில் பயன்படுத்துகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் விலங்கியல் பூங்ககளுக்காக பிடிக்கப்படும் குட்டி கொரில்லாகாக அதன் முழு குடும்பமும் அழிக்கபட்டுவிடும் ஏனென்றால் முழு குடும்பமும் அந்த குட்டிக்காக போராடுவதால்தான்.



விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

No comments:

Post a Comment