சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

25 Dec 2012

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - 1


புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர்.

 இளமை பருவம்:
                    எம்.ஜி.ஆர். என தமிழ் பேசும் மக்கள் அனைவராலும் போற்றப்படும் இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு  அருகேயுள்ள நாவலப்பிட்டியில்  மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் கேரளாவில் வக்கீலாக  பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர்  தமிழ்நாட்டின் கும்பகோணத்தில்  எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன்  சக்ரபாணி  என்ற சகோதரரும் (அண்ணன் ) நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார்.


இல்வாழ்க்கை:                             
                                  எம்.ஜி.ஆருக்கு மூன்று மனைவிகள். முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காக தாய் ஊருக்கு சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். இதற்கிடையே ஜானகி அம்மையாரை திரைப்படத்தில் கதாநாயகியாக சந்தித்தார். மூன்று படங்கள்தான் ஜானகியுடன் நடித்திருந்தாலும் காதல் பிறந்தது. எனவே ஜானகி தன் கணவரிடம் விவாகரத்து பெற்றுக் கொண்டார். ஜானகி அம்மையாருக்கு மகன் ஒருவனும் இருந்தான். இருந்தும் எம்.ஜி.ஆர். தான் காதலித்து வந்த வி. என். ஜானகியை மணந்துக்கொண்டார். மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை.எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது.

திரைப்படத் துறையில்:
                                              1936 ஆம் வருடம் சதிலீலாவதி   என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில்    கொடி  கட்டி பறந்தார்.இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம்.ஆர்.ராதாவினால்  சுடப்பட்டு தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
                                            இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம்  காவல்காரன்  இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.
                   அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன்,அடிமைப் பெண், மற்றும்உலகம் சுற்றும் வாலிபன். இந்த மூன்று திரைப்படங்களையும் எம்.ஜி.ஆர் அவர்களே இயக்கினார் 
அரசியலில் எம்.ஜி.ஆர்.
                                                   1940ல் தேசியவாதியாக இருந்தமையால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணிபுரிந்தார். வெளிபடையாக இல்லாமல் தன் முன்னேற்றத்தை கருதி அரசியலில் முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுமோ என்று கருதி வெளிப்படியாக ஈடுபடுவதில்லை. 1948க்கு பிறகு இந்திய சுதந்திரம் அடைந்த பிறகு சற்று அரசியலில் வெளி ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் அப்போது காமராஜர் மிக உயர்ந்து நின்றார். அவருடை கொள்கையை பின்பற்றி அப்போது எம்.ஜி.ஆர் அவர்கள் அரசியலில் ஈடுபாடு வைத்து கொண்டார். பின்நாளில் காமராசரின் மதிய உணவு திட்டத்தினை திறம்பட சத்துணவு திட்டமாக செயல்படுத்தினார். அண்ணா என் தலைவன், காமராசர் என் வழிகாட்டி என்று தி.மு.வில் இருக்கும் போதும் கூறினார்.

 தி.மு.கவில்  எம்.ஜி.ஆர்:    
           தி.மு.கவின் தலைவரான அண்ணா எம்.ஜி.ஆரை மிகவும் நேசித்தார். எம்.ஜி.ஆரும் அண்ணாவை தலைவனாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டார். தேர்தல் பிரட்சாரத்தில் அதிக பங்கு வகித்தமையால் அண்ணா எம்.ஜி.ஆருக்கு இதயகனி எனும் பட்டம் கொடுத்தார்.
                அறிஞர் அண்ணா உடல் நலக்குறைவினால் 3 பிப்ரவரி 1969 அன்று அண்ணா மரணம் அடைந்தார். அதையடுத்து அண்ணாவுக்கு அடுத்து அமைச்சரவையில் மூத்தவரான நாவலர் நெடுஞ்செழியன் தாற்காலிக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.

கருணாநிதிக்கு உதவி:
                அண்ணா மறைந்ததும் தமிழகத்தின் முதல்வர் பதவிக்கான சர்ச்சை திராவிட முன்னேற்றக் கழகத்தில் நிகழ்ந்தது. தாற்காலிக முதல்வராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏக்களும், கருணாநிதிக்கு ஆதரவாக சில எம்.எல்.ஏகளும் இருந்தார்கள். பலத்த போட்டி நிலவியது. திமுகவின் சட்டமன்றக் குழுவுக்குப் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 9 பிப்ரவரி 1969 அன்று சென்னை அரசினர் தோட்டத்தில் கூட்டப்படும் என்று அறிவித்தார் நெடுஞ்செழியன். கருணநிதியும் எம்.ஜி.ஆரும் திரைத்துறையிலும், அரசியலிலும் நண்பர்களாக இருந்தார்கள். அப்போது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் கலைஞரின் பக்கமே இருந்தனர். கருணாநிதி ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பட்டதில் நெடுஞ்செழியனுக்கு பலத்த அதிருப்தி. கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் விதத்தில் திமுக எம்.எல்.ஏக்களை ராமாவரம் தோட்டத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் எம்.ஜி.ஆர். ஆதித்தனாரும் தன் பங்குக்கு நிறைய உதவிகளைப் பொருளாதார ரீதியாகச் செய்துகொடுத்தார் என்று வருத்தப்பட்டார் நெடுஞ்செழியன். பொதுச்செயலாளர் பதவிக்கும் போட்டி ஏற்பட்டது. கட்சி நிர்வாகப் பணிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திமுக தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் வந்தனர். இப்போதும் கலைஞரின் பக்கமே எம்.ஜி.ஆர் இருந்தார். 
"என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்." என்று கலைஞர் கருணாநிதி முதல்வர் பதவிக்கு வந்து 18 ஆண்டுகள் முடிந்து 19வது தொடங்குவதையொட்டியும், திமுக அரசு பதவியேற்று நான்காண்டுகள் முடிந்து இன்று 5வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதையொட்டியும் சட்டசபையில் தனக்கு நடந்த பாராட்டு விழாவில் தெரிவித்திருக்கிறார்.

திமுகவிலிருந்து வெளியேற்றம்:
                                                தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கட்சியில் நிலவும் குறைபாடுகளைக் கண்டு, பொதுக்குழு கூட்டத்தில் கணக்கு கேட்டார். "தி.மு.கழகத்தினர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும். தங்கள் கை சுத்தமானது என்பதை நிரூபிக்க வேண்டும்" என்று பொதுக்கூட்டங்களில் பேசினார். தி.மு.க. செயற்குழுவில் உள்ள 31 உறுப்பினர்களில் 26 பேர், "எம்.ஜி.ஆர். மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற மனுவில் கையெழுத்திட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் கொடுத்தனர். தி.மு.க மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டும், அதுவரை தி.மு.க. பொருளாளர் பொறுப்பிலிருந்தும், சாதாரண உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாகத் தெரிவித்தும், பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் அக்டோபர் 9ந்தேதி கடிதம் அனுப்பினார். எம்.ஜி.ஆரை 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள்.

அண்ணா திமுக தோற்றம்:
                                         கட்சியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர் தி.மு.க கட்சியிலிருந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நிரந்தரமாக நீக்கப்பட்டார். அதன் பின் சுற்றுபயணம் மேற்கொண்டு மக்களின் ஆதரவை எம்.ஜி.ஆர் கணித்தார்.
                      1972 ஆம் வருடம்  அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்  என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். அந்தப் பெயரே அண்ணாவை எத்தனை தூரம் எம்.ஜி.ஆர் நேசித்தார் என்று காட்டியது. பின்பு எல்லாமாநிலங்களிலும் அக்கட்சி வளர்ந்தமையால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்றேற்றக் கழமாக மாற்றப்பட்டது.


1975ல் வருமான வரி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினார்கள். யாருக்கும் எந்த வித துரோகமும் செய்ததில்லை யாரிடமும் நான் கடன் வாங்கியதும் இல்லை இப்படிப்பட்ட நான் அரசாங்கத்திடம் கடன்காரனாகிவிட்டேனே? என எம்.ஜி.ஆர் வருத்தம் கொண்டார். 
எஸ்.எம்.துரைராஜ், குழ.செல்லயா, சௌந்திரபாண்யன்,ஜி.ஆர்.எட்மண்ட் முதலிய சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தி.மு.கவில் இணைந்தனர். எம்.ஜி.ஆர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்தமையால் உறுப்பினர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்தது.
மேலும் கட்சித்தாவல் தடைசட்டம் அப்போது பிறப்பிக்கப்படவில்லை என்பதால் எண்ணற்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், சட்டசபை உறுப்பினர்களும் தொடர்ந்து இணைந்தார்கள். அதில் பாவலர் முத்துசாமியை கழகத்தின் முதல் அவைத்தலைவராக எம்.ஜி.ஆர் நியமித்தார். 
"மொழிப் பிரச்சனையில் இந்தி ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவது என்ற பிரச்சனையில் நானும் கருணாநிதியும், நானும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள்" என்று எம்.ஜி.ஆர் சட்டசபையில் தெரிவித்திருக்கிறார்.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில்   பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா  விருது வழங்கப்பட்டது.



விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் படிப்பிணை பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!

             

No comments:

Post a Comment