சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

20 Dec 2012

என் சொந்த ஊர் குளம்


                 திருப்பூர் அருகிலுள்ள குளத்தூபுதூர்  கிராமத்திற்குட்பட்ட  குளம் இது.குளத்துபுதூர்  என் சொந்த  ஊர்.சிறு வயதில் இந்த குளத்தில்தான் என் தாத்தா எனக்கு நீச்சல் பழக்கிவிட்டார். பின் நண்பர்களுடன் இக்குளத்தில் நீச்சல் அடித்து விளையாடுவேன். என் 8 வயது வரை குளம் நீர் இல்லாமல் வற்றியே இருந்தது.பின் வருணபகவானின் கருணையால் அவ்வப்போது  மழை பெய்து நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரும்போது எங்கள்  ஊர் குளமும் நிரம்பும்.ஒரு முறை குளம் நிறைந்து கடை விழுந்தால்  ஒரு வருடம் சில மாதங்கள் வரை நீர் வற்றாமல்  இருக்கும். 
       
         அந்த நேரங்களில் பள்ளி விடுமுறையாக இருந்தால் மதியம் வரை  கிரிக்கெட் விளையாடி விட்டு என் நண்பர்களுடன்  குளத்தில் குளிக்க சென்றால்  மாலை வரை  குளத்து நீரில் விளையாடுவோம்.நீரில் தொட்டு விளையாடுவது, ஒளிந்து விளையாடுவது,நீருக்குள் அமிழ்ந்து தம் கட்டி விளையாடுவது,அருகிலுள்ள மரத்தில் இருந்து குதிப்பது என உற்சாகமாக கழியும் எங்கள் விடுமுறை நாட்கள்.
                
                திருப்பூர் நகராட்சி  மாநகராட்சி  ஆனதும்  மேயர் செல்வராஜ் அவர்களின்    மூலம் குளத்தில் கால்மிதி படகு விடப்பட்டது.சனி,ஞாயிறு விடுமுறை  நாட்களில்   பொதுமக்கள் படகுத்துறையில் போழுதுபோக்கினர்.சில மாதங்களில் நீர் வற்ற ஆரம்பித்தது.படகுத்துறையை பாதுகாக்கவும், பயன் படுத்தவும் ஆளில்லாமல் போனது.
                 
            திருப்பூர்  கோவை,மாவட்டங்களில்  சூலூர், சாமளாபுரம் குளத்திற்கு அடுத்தபடியாக குளத்துபுதூர் குளம்தான் பெரியது.ஞாயிற்று கிழமைகளில் மீன் வியாபாரம் நடக்கும்.1/4 கிலோ முதல் 5 கிலோ வரையுள்ள பெரிய மீன்களும் கிடைக்கும்.
                
               இப்போது இதெல்லாம் கனவில் கூட நடக்காது.ஏனென்றால் குளத்திற்கு வரும் நீர் அனைத்தும் கோயம்புத்தூர் பகுதிகளின்  கழிவு நீர்களே. நொய்யல் ஆறு அந்தளவு மாசடைந்து விட்டது.மேலும் குளத்தின் அருகில் மலம் கழிப்பதும் நடக்கிறது. 2012 நவம்பர் மாதம் ஏற்ப்பட்ட நீலம் புயல் மழையால்  குளம் மீண்டும் நிறைந்துள்ளது. ஆனால் குளத்திற்கு வந்த நீர் முழுவதும்  கோவை பகுதி மக்களின் கழிவு நீர் மட்டுமே.குளத்தின் அருகே திருப்பூரிலிருந்து  மங்களம் செல்லும் சாலையில் குளத்தை கடக்கும் போது  ஒருவித நாற்றம் அடிக்கிறது.மேலும் குளத்தில் லாரி,வேன்,பள்ளிகூட பேருந்துகள்,இருசக்கர  வாகனகளை கழுவுவதும் குளத்தில் தான்.
               
        குளத்தின்  வடதுபக்கம் உள்ள  கரை பலமிழந்து உள்ளது.குளத்தில் அதிகமாக நீர் தேங்கும் போது  ஏரிக்கரை உடையும் அபாயம் உள்ளது. கரைக்கு மறுபக்கம் பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்கள் உள்ளது.தகுந்த நடவடிக்கை எடுத்தால்  பலத்த பொருட்சேதத்தையும் உயிர் சேதத்தையும் தவிர்க்கலாம்.பல ஏக்கர் விவசாய நிலங்களுக்கு  இந்த குளம் தான் நீர் பிடிப்பு பகுதி.விறுவிறுப்பாக வாசித்தீர்கள்..! மற்றவர்களும் வாசித்துப் பயன் பெற்றுக் கொள்வதற்காக முடியுமானவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.!


No comments:

Post a Comment