சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Dec 2012

அதிகரித்து வரும் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள்-ஈரோடு


                 ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை 

அதிகரித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


மாநிலம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்கும் 

வகையில், 16 வயதுக்கு குறைவானவர்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாதென 

அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் மீது, 

மாவட்ட நிர்வாகம், சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, 

பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கம் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதத்துக்கு முன், நூற்றுக்கும் மேற்பட்ட 

குழந்தை தொழிலாளர்களை, அதிகாரிகள் மீட்டு மறுவாழ்வு அளித்தனர். 

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், 

பி.எஸ்., பார்க், வ.உ.சி., பார்க், கருங்கல்பாளையம், கடைவீதி, மணிக்கூண்டு, 

அனைத்து கோவில்கள் முன் என, பல பகுதிகளில் "பிஞ்சு' பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
            ஈரோடு மாநகரில் குழந்தை பிச்சைக்காரர்கள் அதிகரித்து வருகின்றனர். 

வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு, மக்களிடம் பிச்சை கேட்கும், 

பிஞ்சுகளை பார்க்கையில், பாவமாக உள்ளது. உழைத்து உண்ணாமல், 

குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து, அதில் வரும் வருமானத்தை கொண்டு, 

அவர்களது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர்.


பலர் ஏரியா வாரியாக பிரித்து, இக்குழந்தைக்கொண்டு பிச்சை எடுத்து, 

பெருந்தொகையை தாங்கள் வைத்துக்கொண்டு, பிச்சைக்காரர்களுக்கும், 

அவர்களது பெற்றோர்களுக்கும் ஒரு தொகையை வழங்குகின்றனர்.

அதனால், அக்குழந்தைகள் தினமும், இவ்வளவு தொகை வசூலிக்க 

வேண்டுமென வலியுறுத்துவதால், அக்குழந்தைகள், ரோட்டில் போவோர், 

வருவோரை எல்லாம், நச்சரித்து பணம் கேட்கின்றனர்.


ஈரோடு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான, கோவில், வ.உ.சி., 

பார்க், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பிச்சை கேட்கும் 

பிஞ்சுகளின் குரல் கேட்கிறது. அதிலும் ஒரு சிலர், கைக்குழந்தைகளுடன், 

பிச்சை கேட்டு, மக்களுக்கு தொல்லை தருகின்றனர்.


குழந்தை தொழிலாளர்களை மீட்டு மறுவாழ்வு தரும், மாவட்ட நிர்வாகம், 

சைல்டுலைன், தொழிலாளர் நலத்துறை, பள்ளிகல்வித்துறை, அனைவருக்கும் 

கல்வி இயக்கத்தினர், பிஞ்சு பிச்சைக்காரர்களையும் மீட்டு மறுவாழ்வு 

வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment