"தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில அரசுகள், தங்களுக்கு தேவையான காவிரி நீர் குறித்த, நம்ப தகுந்த ஆவணங்களை, உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரம் குறித்து, நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்றும், அறிவித்தது. இதனால், காவிரி பிரச்னைக்கு ஒரு முடிவு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகளுக்கு இடையே, காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக, இரண்டு மாநில அரசுகளுமே, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணை, 26ம் தேதி நடந்தபோது, "காவிரி நதி நீர் விவகாரம், மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். எனவே, இரண்டு மாநில முதல் அமைச்சர்களும், சந்தித்து பேசி, இந்த பிரச்னைக்கு சுமுகமாக தீர்வு காண வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, இரு மாநில முதல்வர்களின் கூட்டம், நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. இதில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில், தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை திறந்து விடும்படி, வற்புறுத்தினார்.
ஆனால், "ஒரு சொட்டு தண்ணீர் கூட விட முடியாது' என, கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டார், திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள், டி.கே.ஜெயின், மதன் பி லோகூர் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான, மூத்த வக்கீல், வைத்தியநாதன், தன் வாதத்தில் கூறியதாவது:சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, பெங்களூரு சென்று, கர்நாடகா முதல்வர் ஷெட்டாரை சந்தித்து பேச்சு நடத்தினார். இதில், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என, கர்நாடகா அரசு கூறி விட்டது.தண்ணீர் பற்றாக்குறையால், தமிழகத்தில், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கோரிக்கையை முறியடிக்கும் மற்றும் தாமதப்படுத்தும் நோக்கத்துடன், கர்நாடகா அரசு செயல்படுகிறது.டிசம்பர், 1ம் தேதியிலிருந்து, 15ம் தேதி வரை, தமிழகத்துக்கு, குறைந்தது, 30 டி.எம்.சி., தண்ணீராவது தேவைப்படுகிறது. இதை திறந்துவிடும்படி, கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, வைத்தியநாதன் வாதாடினார்.

கர்நாடகா அரசு சார்பில் வாதாடிய, மூத்த வக்கீல், அனில் திவான், கூறியதாவது: டிசம்பர், 1ம் தேதியிலிருந்து, 15ம் தேதி வரை, கர்நாடகாவுக்கு, 78 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படுகிறது. எங்களிடம், 70 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்கும்அளவுக்கு மட்டுமே, வசதி உள்ளது. இது, எங்களின் தேவையை விட, 8 டி.எம்.சி., குறைவு.இவ்வாறு அனில் திவான் வாதாடினார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இரு மாநில அரசுகளும், தங்களின் தண்ணீர் தேவை குறித்து, நம்பத் தகுந்த ஆவணங்களை, உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை, நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அதற்கு முன், இரு மாநில அரசுகளும், ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.நீதிபதிகளின் இந்த உத்தரவால், காவிரி பிரச்னைக்கு நாளை மறுநாள் ஏதாவது முடிவு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment