சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

26 Dec 2012

குடிமகன் vs சரக்கூற்றி - ஜோக்


            ஒரு உயர்ந்த ரக பாரில் ஓரத்தில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி ஒருவர் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார். அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் ஒரு முறை எழுந்து சென்று சரக்கு ஊற்றித் தருபவரிடம் மூன்று கிளாஸ்களில் பீர் கேட்டார். சரக்கு ஊற்றித் தருபவர் சற்று நேரம் பார்த்துவிட்டு,

"ஸார், நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேக்கறேன், ஒவ்வொரு கிளாஸா வாங்கி குடிச்சா இன்னும் நல்ல இருக்குமே.

நா கிளாஸ்ல
ஊத்தும்போதே நுரை அடங்கி உள்ள போய்டுதே ஆனா நீங்க மூணு மூணு கிளாஸா வாங்கி குடிக்கிறீங்களே...இதில இதோட நிஜ டேஸ்டே இல்லாம போய்டுமே" என்றான்.

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூனு பேர். அண்ணன் துபாய்ல இருக்கான், தம்பி கனடாவில இருக்கான், நான் இங்க லண்டன்ல இருக்கேன். சின்ன வயசிலேர்ந்தே நாங்க மூணு பேரும் ஒன்னாதான் சரக்கடிப்போம். நாங்க மூனு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூனு கிளாஸ்ல வாங்கி, மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணிருக்கோம். என் தம்பி அண்ணன் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங
்க. அதனாலதான்" என்றார் அந்த குடிமகன். ஆச்சர்யமாக பார்த்தான் அந்த 'சரக்கூற்றி '. (Bar tender)

இதேபோல தினமும் அந்த பாருக்கு சென்று அமர்ந்து மூன்று மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி மோர் போல குடித்து தன் தொப்பையை வளர்த்து வந்தார் அந்த அன்பர். ஒரு நன்னாளில், இரண்டு கோப்பையில் மட்டும் பீர் தரச்சொல்லி வாங்கி குடித்தார்.

இதைக்கண்ட சரக்கூற்றி சரக்கப்பன் மிகவும் சங்கடப்பட்டான். நேரே அவரிடம் சென்று "ரொம்ப ஸாரி ஸார், இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை" என்று வருத்தப்பட்டான்.
"ஏம்ப்பா என்னாச்சு" என்றார் அந்த குடிமன்னர் சகஜமாக.
"இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூணு கிளாஸ்ல வாங்கிக் குடிப்பீங்க. உங்க பிரதர்ல ஒருத்தர் இறந்துவிட்டாங்க போலிருக்கு இன்னிக்கி இரண்டு கிளாஸ்ல மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் பீரையும் நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன் சொன்னான் அந்த சரக்கு மன்னன்
"யாருக்கும் எதுவும் ஆகலை, நேற்றையோடு நான்தான் குடியை நிறுத்திட்டேன்பா, அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும் குடிக்கிறேன்".

இதைகேட்ட சரக்கூற்றிக்கு போதை தெளிய ரெண்டு நாள் ஆனது.

No comments:

Post a Comment