சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2012

நீர்ப்பறவை அனுபவம் :சுனைனா அழுகிறார்


             தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு சீனுராமசாமி இயக்கி வெளிவந்துள்ள படம் நீர்ப்பறவை. கடல் வாழ் மக்களின் வாழ்வியலை கண்ணீரோடும், காதலோடும்  சொல்லி இருக்கிறார் சீனு ராமசாமி. இந்தபடத்தில் நடித்த அனுபவங்களை நடிகை சு‌னைனா நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவரின் பேட்டி வருமாறு...

            நீர்ப்பறவை படத்தின் ஷூட்டிங் ‌ஆரம்பிக்கும் முன்னர் இரண்டு நாளைக்கு முன்னாடியே வந்திடுங்க என்று டைரக்டர் சொல்லிட்டு போய்விட்டார். அப்பவே என்னுடைய ரோல் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண ஆரம்பித்துவிட்டேன்.  படத்தில் எஸ்தர் கிறிஸ்த்துவ பெண்ணாக நடிக்கிறேன், என்றாலும் 1980களில் வரும் கதை என்பதால் எந்த ரெபரன்சும் எனக்கு கிடைக்கல. சரின்னு ஷூட்டிங் கிளம்பிட்டேன். அங்‌கே போனதும் சீனு சார் எனக்கு அந்த ரோல் பற்றி சொல்லி கொடுக்க தொடங்கினார். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது அப்புறம் செட் ஆகிட்டேன். சீனு சார் என் மேல் ரொம்ப நம்பிக்கை வச்சிருந்தார்.  தனியா ஏதும் நான் நடிக்கல அவர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்தேன்.  என்னை முதலில் நடிக்க கூடாது என்று சொன்னார். எமோஷன், பீல் எல்லாமே இயல்பா கொண்டு வரணும் என்றார். நான் நடித்த படங்களில் இந்த மாறி யாரும் சொன்னதில்லை. நீர்ப்பறவையில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது.

                இந்தபடத்தில் என்னுடைய நடிப்பு, நடை, உடை, பாவனை என்று அத்தனையும் மாற்றியவர் டைரக்டர் தான். சின்ன வயதிலேயே எனக்கு சைக்கிள் ஓட்ட தெரிந்ததால் படத்தில் சைக்கிள் ஓட்டியது ஒன்று பெரிதாக தெரியவில்லை. ஆனா படத்தில் என்னுடைய டிரஸ், கிறிஸ்த்துவ பெண் லுக் என்று எல்லாமே என்னை மாற்றிக் கொண்டேன்.  படத்தில் ரொம்ப கஷ்டமான போர்ஷன் எது என்றால், விஷ்ணுகிட்ட கடலுக்கு போ நீயும் மீனவன் தான் மீன் பிடி என்று சொல்லும் ‌காட்சியில் டைரக்டர் கிளிசரின் போடக்கூடாது, நீ உண்மையா மனசில இருந்து அழனும், அந்த கண்ணீர் துளி தான் இந்த காட்சிக்கு தேவை என்றார். படத்தில் உன்னுடைய கண் ‌காட்சியில் பேசணும் என்றார். அப்போது நான் உண்மையாகவே அழுதுவிட்டேன். ஆனால் அதற்கு பிறகு நான் அழும் எல்லா காட்சிகளையும் உண்மையாகவே அ‌ழ வைத்து எடுத்தார் டைரக்டர். ஒரு நடிகையாக எனக்கு இது நல்ல சவாலாக இருந்தது என்று தான் சொல்வேன்.

              21 வயசில் ஒரு குழந்தைக்கு தாயாக நான் கஷ்டப்பட்டு போராடும் காட்சி எல்லாம் இப்ப நினைத்தாலும் சங்கடமாக இருக்கும். அதிகம் பேசாத எஸ்தர் என்ற ரோல். அந்த காட்சி எடுத்த எல்லா நாட்களுமே என் மனசில் இருந்து இன்னும் போகல. என்னை விட என் அம்மா தான் அதிகம் அழுதிருப்பாங்க. ஒரு பாட்டில் கொஞ்சம் முத்தக்காட்சிகள் இருக்கும். படத்துக்கு அது தேவைப்பட்டது. அவங்க எப்படி பாசத்தோடு வாழ்ந்தாங்க, அவங்க லவ் எப்படின்னு நினைத்து பார்க்கும் பாட்டு அது. கதை தாண்டி திணிக்கப்பட்ட பாட்டு அது கிடையாது. ஆனால் படத்தில் நிறைய கட் பண்ணிட்டாங்க. அந்த பாடல் காட்சியை பார்க்கும்போது அது விரசமா இருக்காது.

              விஷ்ணு இந்த படத்தில் அவ்வளவு கடுமையாக உழைத்து இருக்கிறார். படத்தில் முதல் பாதி முழுக்க குடித்துக் கொண்டே இருக்கும்படியான ரோல். நான் எதுவும் கேட்டால் கூட தள்ளாடிக்கொண்டே பதில் சொல்வார். அந்தளவுக்கு அந்த கேரக்டராகவே வாழ்ந்திருப்பார். கண்டிப்பாக இந்தபடத்தின் மூலம் விஷ்ணு சிறந்த நடிகர் என்று பேசப்படுவார்.

                  பொதுவாக நடிகைகள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டால் அந்த படத்தை மறந்துவிட்டு அடுத்த படத்திற்கு போய்விடுவார்கள். ஆனால் நீர்ப்பறவை படம் என்னை ரொம்பவே பாதித்த படம். காதல், கஷ்டம், குடும்ப சுமை, பிரிவு என்று எல்லாமே இந்த படத்தின் மூலம் ஒரு அனுபவமாக எனக்கு கிடைத்திருக்கு. என்னுடைய அடுத்தபடத்திற்கு என்னை நிறையவே மாற்றிய படம் நீர்ப்பறவை என சொல்லாம் என்று சொல்லி முடித்தார். 

No comments:

Post a Comment