சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2012

கிங்பிஷர் பைலட்டுகள் மீண்டும் போர்க்கொடி


                    ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, மூன்று மாத சம்பளத்தை தராவிட்டால், மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகமான, டி.ஜி. சி.ஏ.,விடம் புகார் அளிப்போம்' என, கிங் பிஷர் விமான நிறுவன பைலட்டுகள், எச்சரித்துள்ளனர்.கிங் பிஷர் விமான நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியதை அடுத்து, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பைலட் மற்றும் ஊழியர்களுக்கு, ஏழு மாதங்களாக, சம்பளம் வழங்கப்படவில்லை.

                     இதை எதிர்த்து, அந்நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.விமான போக்குவரத்து தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக, அந்த நிறுவனத்தின் உரிமமும், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே, ஊழியர்களுக்கு வழங்கப்படாத, ஏழு மாத சம்பளத்தை, படிப்படியாக வழங்குவதாகவும், முதல் மூன்று மாதங்களுக்கான சம்பளத்தை, தீபாவளிக்குள் தருவதாகவும், மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம், கிங் பிஷர் விமான நிறுவனம் உறுதி அளித்திருந்தது.ஆனாலும், இதுவரை, ஊழியர்களின் சம்பளம் வழங்கப்படவில்லை.

                  இதையடுத்து, கிங் பிஷர் விமான நிறுவன பைலட்டுகள், மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பைலட்டுகள் தரப்பில், நேற்று கூறப்பட்டதாவது:தீபாவளிக்குள், மூன்று மாத சம்பளத்தை தருவதாக, விமான நிறுவனம், எங்களுக்கு உறுதி அளித் திருந்தது. இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி, எங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனில், டி.ஜி.சி.ஏ.,வை அணுகுவதை தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை.இவ்வாறு பைலட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

                  இதற்கிடையே, டி.ஜி.சி.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது:சம்பள பிரச்னை என்பது, சம்பந்தப்பட்ட ஏர்லைன்ஸ் நிர்வாகத்துக்கும், அதன் ஊழியர்களுக்கும் இடையேயானது. இதை, அவர்களுக்குள்ளேயே, சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும். எங்களை பொறுத்தவரை, பயணிகள் பாதுகாப்பு தான் முக்கியம்.ஏற்கனவே வந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தபட்ட விமான நிறுவனத்தின் உரிமம், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், விமான நிறுவன ஊழியர்கள், தொழிலாளர் கோர்ட் அல்லது தொழிலாளர் நல அலுவலர் உள்ளிட்ட, சம்பந்தபட்ட அமைப்புகளை அணுகலாம்.இவ்வாறு, டி.ஜி.சி.ஏ., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment