சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Dec 2012

மொசாட் ஒரு பார்வை.


                    இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல்  அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர். அத்தனை பெரும் உளவாளிகள். ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள் மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடி கொண்டிருக்கிறார்கள் நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை. உலகத்தில் இருக்கும் உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்.
உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை கொண்டிருப்பது மொசாத் மட்டுமே இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், நமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக் கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது. இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம் யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு. ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்ச்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.

 மொசாட் இஸ்ரேலின் உளவுப்படை.மொசாட்டுக்கென்று தனியாக அலுவலகம் கிடையாது.அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பு என செய்திதாளில் செய்தி மட்டுமே வரும்.அதற்க்கு செல்லும் நபருக்கு தான் மொசாட் பணிக்குத்தான் செல்கிறோம் என தெரியாது. இது எல்லா நாடுகளிலும் பரவியுள்ளது.இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தாலே அந்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் மொசாட்.அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவானது மொசாட். பின் நாளில் குருவுக்கே தண்ணி காட்டும்  சிஷ்யனாக வளர்ந்தது.ஒரு நபரை அவரின் அனுமதியில்லாமல் அவருக்கே தெரியாமல் தன உளவு வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறைமை மொசாட் உளவாளிகளுக்கு  உண்டு.மொசாட்டில் ஒருவர் சேருவது என்பது சாதாரண விஷயம் இல்லை.பல கட்ட சோதனைகள் இருக்கும்.பல்வேறு விதமான பயிற்சிகள் என இருக்கும்.உலகின் அனைத்து மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் எந்த கடினமான சூழ்நிலையையும் மிக சாமர்த்தியமாக  வேண்டும்.இந்த சோதனைகளில் பங்கேற்கும் போதே பல ஆபத்துகளை சந்திக்க வேண்டும். இந்த சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால் உளவுக்காக அமர்த்தபடுவார்கள்.இல்லையென்றால் அதோடு அவனின் கதை முடிந்தது.மொசாட் ஒரு வழிப்பாதை மட்டுமே.உள்ளே செல்லலாம்.ஆனால் வெளியே வரமுடியாது.


மொசாட் ( short for HaMossad leModi'in uleTafkidim Meyuchadim (புலனாய்வு மற்றும் சிறப்பு நடவடிக்கைகளுக்கான நிறுவனம்)  இஸ்ரேலின் தேசிய புலனாய்வு முகவர்.
புலனாய்வு தகவல் திரட்டல், மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளல் என்பன மொசாட்டின் பொறுப்புக்களாகும். இலக்குகளைக் கொல்லுதல், இசுரேலின் எல்லைக்கு வெளியே துணை ராணுவப்படை செயற்பாடுகளை மேற்கொள்ளல், அலியா முகவர்கள் தடை செய்யப்பட்ட இடத்திலிருந்து  யூதர்களை  கொண்டு வருதல் மற்றும் உலக அளவில் யூதர்களை பாதுகாத்தல் என்பன மறைமுக நடவடிக்கைகளில் அடங்கும். அமான், சின் பெட் ஆகியவற்றுடன் இசுரேலிய புலனாய்வு சமூகத்தின் உட்பொருட்களில் இதுவும் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆயினும், இயக்குனர் நேரடியாக பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.
சமீப காலத்தில்(2010) அல் மாபொ என்ற ஹமாஸ் ஆசாமியை துபாயில் போட்டுத் தள்ளியது மொஸாட். ஆனால் பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது வீடியோவில் சிக்கியது என்று எப்படி ஒரு மொஸாட் ஆபரேஷன் இருக்கக் கூடாது என்று இலக்கணம் வகுத்த அட்டாக். ஆனால் அல் மாபொ என்ற திமிங்கிலத்தை தூக்க இது போன்ற திட்டுகளைத் தாராளமாக வாங்கலாம் எனத் தெரிந்தே தான் மொஸாட் இதை செய்தது என்று சொல்பவர்களும் உண்டு. இந்த ஆபரேஷன் புத்தகத்தில் அப்பீட் ஆகி விட்டது.
ஆறு நாள் போரில் மொஸாட்டின் பங்கை விவரித்தது போல் ஆபரேஷன் எண்டப்பிபற்றியும் எழுதியிருக்கலாம்.  யுகாண்டாவிற்கு பிரான்ஸ் விமானம் ஒன்றை கடத்தி இருந்தார்கள். இஸ்ரேலியர்களைத் தவிர மற்றவர்களை விட்டு விட்டனர். விடுதலை அடைந்தவர்களை பேட்டி கண்டு, வான் வழியே 2500 மைல்களுக்கு 100 கமோண்டோக்களை அனுப்பி 102 பிணைக் கைதிகளை 90 நிமிடத்தில் மீட்டனர். கொசுறாக உகாண்டா விமானங்களையும் சில மிக் போர் விமானங்களையும் மண்ணாக்கினார்கள்.1976-ல் இதற்கு ஒரே வாரத்தில் இதற்கு ஸ்கெட்ச் ரெடி செய்தது மொஸாட். சுவாரஸ்யமான இந்த சமாச்சாரத்தை சாய்ஸில் விட்டிருக்கலாமோ?
படிக்கும் போதும் படித்த பின்பும் விடாமல் தோன்றியது. கசாப்பையும் அவனை அனுப்பியவர்களை கைமா செய்யாமல் வெட்கம் மானம் இன்றி அவனுக்கு பிரியாணி போட்டுக் கொண்டு இருக்கிறோமே. நாட்டின் பாதுகாப்பு முக்கியம.நாடு என்று ஒன்று இருந்தால தானே அதை முன்னேற்றவும் ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்றவும் உண்ணாவிரதம் இருக்க முடியும். அதனால் நாம் போராட வேண்டியது லோக்பாலுக்கு அல்ல நிச்சயமாய் மொஸாட்டில் பாதி அளவுக்காவது திறமை இருக்கும் உளவு நிறுவனத்திற்காக!”.
மேலே சொன்ன விமான மீட்பை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். காந்தகாரில் என்ன நடந்தது என்று யோசியுங்கள்.  மொஸாட் இஸ்ரேலுக்காக செய்த சாகசங்களைப் படித்துப் பாருங்கள். பின்பு சொல்லுங்கள் நமக்கும் ஒரு மொஸாட் வேண்டுமா, வேண்டாமா என!
எதிராளியைவிட ஒரு மணி நேரமாவது கூடுதலாகச் சிந்தித்தால்தான் அவனை வெல்ல முடியும் என்பது போர்த் தந்திரங்களில் ஒன்று. உலகம் முழுவதும் இதனை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளோ, போராளி இயக்கங்களோ பின்பற்றுகின்றனவோ.. இல்லையோ.. யூத தேசமான இஸ்ரேல் மட்டுமே தாரக மந்திரமாகப் பின்பற்றி வருகின்றது.

தான் தூங்கினால் பாலஸ்தீனம் முழித்துக் கொள்ளும் என்பதில் இன்றைக்கும் தெளிவான சிந்தினையுடன் ஆட்சி நடத்தி வருகிறார்கள் இஸ்ரேலியர்கள். மத்திய கிழக்காசியாவில் தனிப்பெரும்பான்மையுடன் அமெரிக்காவைப் போல் சர்வாதிகாரத்துடனும், சகல செல்வாக்குடனும் இருந்து வந்தாலும், ஒவ்வொரு நொடியையும் தனது பாலஸ்தீன எதிர்ப்பிலும், தனது நாட்டின் பாதுகாப்பு பற்றிய கண்காணிப்பிலும் உறுதியுடனேயே இருக்கிறது இஸ்ரேல்.

தனது எதிரிகளை அழித்தொழிக்க தான் உருவாக்கிய மொஸாத் என்னும் கூலிப் படையினர் மாதந்தோறும் இத்தனை பாலஸ்தீன விடுதலை விரும்பிகளை அழித்தொழிக்க வேண்டும் என்பதை கட்டளையாகவே மேற்கொண்டு வருகின்றனர்.

பாலஸ்தீனப் பிரச்சினைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதெல்லாம் அப்பாவிகள் இருக்கின்றார்களே என்ற ஒரு சின்ன தயக்கம்கூட இல்லாமல் ஒரு தீவிரவாதிக்காகவே கட்டிடம் முழுவதையுமே ராக்கெட் தாக்குதலில் சிதைக்கும் அளவுக்கு கொடூர மனம் கொண்டது இஸ்ரேல். அதனால்தான் இன்றுவரையிலும் இத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்தும் தாக்குப் பிடித்து வருகிறது.

பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் ஒவ்வொன்றின் வரலாறும், அந்த இயக்கத்தினருக்கே தெரிகிறதோ இல்லையோ.. மொஸாத்தில் இருப்பவர்களுக்கு மட்டும் நன்கு தெரிந்துவிடுகிறது.

விடுதலை இயக்கங்களின் தொண்டர்களையெல்லாம் விட்டுவிட்டு கமாண்டர்கள் என்றழைக்கப்படும் தளபதிகளை குறி வைத்துத் தாக்கியழிப்பதும் மொஸாத்தின் அன்றாடப் பணிகளில் ஒன்று. இதனால்தான் தங்களது இயக்கங்களின் தளபதிகளுக்கு நான்கைந்து பெயர்களைச் சூட்டி அவர்களை மறைமுகமாகக் காத்து வருகிறார்கள். அந்த இயக்கத்தினர் ஆனாலும் மொஸாத்தின் ஆழ ஊடுறுவும் வேவு தந்திரத்தின் முன்னால் இது அத்தனையையும் அவ்வப்போது தோற்றுப் போகிறது.

ஆனானப்பட்ட சி.ஐ.ஏ.வுக்கே தண்ணி காட்டக்கூடிய அளவுக்கு செல்வாக்கும், அறிவுத் திமிரும் படைத்த இந்த யூதக் கொலையாளிகள் இந்த ஆண்டின் துவக்கத்தில் துபாய் நாட்டில் நடத்திய ஒரு அட்டகாசமான, திரில்லிங்கான படுகொலையைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் பற்றி கூகிளாண்டவரிடம் விசாரித்துக் கொண்டே வந்தபோது, திடீரென்று இந்த வீடியோ காட்சியும், இது பற்றிய செய்திகளும் கண்ணுக்குப் பட்டது. நான் ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும், மறுபடியும் பார்த்தபோது நேரம் போவதே தெரியாமல் தலையுச்சியில் இருந்து உள்ளங்கால்வரையிலும் மயிர்கூச்செறியும்வகையில் ஒரு திகில் அனுபவம் மீண்டும் எனக்குக் கிட்டியது. என்னைப் போலவே உங்களில் பலருக்கு இது பற்றி முன்பே தெரிந்திருக்கலாம். சிலருக்குத் தெரிந்திருக்காது. அப்படித் தெரியாதவர்களுக்காக இந்தச் செய்தி.

முகமது அல் மாப்ஹா என்பவர் ஹமாஸ் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவர். இவருடைய வயது 49. Izz ad-Din al-Qassam Brigades என்ற ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். பாலஸ்தீன அரசுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே ஏற்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்வரையிலான காலக்கட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக நடந்த பல்வேறு வன்முறை எதிர்ப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்டது முகமதுவின் இந்த இயக்கம்தான். இந்த இயக்கத்தின் சார்பாகத்தான் ஜோர்டானில் இருந்து ஆயுதங்களைத் தருவித்து அதன் மூலம் இஸ்ரேலிய ராணுவத்துடன் போர் நடத்தினார் முகமது என்பது இஸ்ரேல் அரசின் குற்றச்சாட்டு.

டெல் அவிவில் நடைபெற்ற பல்வேறு மனித வெடிகுண்டுத் தாக்குதல்களின் சூத்ரதாரியும் இவர்தான் என்பதால் இஸ்ரேல் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்திருக்கிறார். இந்த காரணங்களுக்காகவே மிக நீண்ட நாட்களாக மொஸாத் படையினராலும், இஸ்ரேலிய அரசாலும் கொல்லப்படுவதற்காகவே தேடப்பட்டு வந்தவர்.
 
பாலஸ்தீனத்தில் இருந்தால் தான் எப்படியும் கொல்லப்படுவோம் என்பதால் ஹமாஸ் இயக்கத்தினர் இவரை சிரியா தலைநகரமான டமாஸ்கஸில் இவரைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

டமாஸ்கஸிலும் இவரைக் கொல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் வருத்தத்தில் இருந்த மொஸாத் படையினருக்கு முகமது, துபாய்க்கு வரவிருக்கிறார் என்ற செய்தி ஒரு வாய்ப்பாகிவிட்டது.

தனது நீண்ட நாள் கனவு பலிக்கப் போகிறதே என்ற சந்தோஷத்தோடு முகமதுவை கொலை செய்ய பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தனது ஏஜெண்டுகளை துபாய்க்கு அனுப்பி வைத்தது மொஸாத். 

இத்தனை ஆண்டு கால போராட்ட வரலாற்றில் ஒரு சின்ன சறுக்கலை முகமது செய்ததுதான் அவரது கொலைக்கு அவரே ரத்தினக் கம்பளம் விரித்தது போலாகிவிட்டது என்கிறார் ஹமாஸ் இயக்கத்தின் டமாஸ்கஸ் பிரிவின் வழக்கறிஞர்.

விமான டிக்கெட்டை டமாஸ்கஸில் இருந்து ஆன்லைனில் பதிவு செய்தது. அதிலேயும் தனது சொந்தப் பெயரில் இருந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தியது. அதன் பின்பு இப்போதும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருக்கும் தனது குடும்பத்தினருக்கு போன் செய்து தான் துபாய்க்கு செல்லும் தகவலையும், தங்கப் போகும் ஹோட்டலின் பெயரையும் சேர்த்து சொன்னது என்று பலவும் சேர்ந்து முகமதுவை வீழ்த்திவிட்டது என்கிறார்கள் ஹமாஸ் இயக்கத் தோழர்கள்.

இந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதியன்று டமாஸ்கஸில் இருந்து பாங்காங் வழியாகத் துபாய் வந்து சேர்ந்தார் முகமது. துபாய் ஏர்போர்ட் அருகேயிருக்கும் பஸ்டன் ரொட்டனா என்ற ஹோட்டலில் 230-வது எண் அறையில் தங்கினார் முகமது.

அவரைப் பின் தொடர்ந்து வந்த சில மொஸாத்துக்களும் அதே ஹோட்டலில்தான் முகமது தங்கியிருந்த அறையின் எதிர் அறையில்தான் தங்கியுள்ளனர். மற்ற ஏஜெண்டுகள் நகரின் பல்வேறு ஹோட்டல்களில் தனித்தனிப் பிரிவாகத் தங்கியவர்கள், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்து பேசியுள்ளனர்.

முகமது மட்டுமே தனியே வந்திருக்கும் தகவலை உறுதி செய்து கொண்டு இரவு 8.20 மணியளவில் ஹோட்டலுக்குள் 4 மொஸாத் ஏஜெண்ட்டுகள் மட்டுமே நுழைந்து முகமதுவை சப்தமில்லாமல் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார்கள். 

அந்தக் கொலைக்காரக் மொஸாத் கூலிப் படையினர் சென்று வந்த இடங்களில் இருந்த CCTV-யில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து முகமதுவை அவர்கள் படுகொலை செய்ய போட்டிருந்த திட்டத்தை துபாய் போலீஸார் பட்டவர்த்தனமாக்கியுள்ளனர்.

எப்போதும் பாதுகாவலர்கள் படை சூழ இருந்து வரும் முகமது இந்த முறை தனியே பயணப்பட வேண்டியதாகிவிட்டது. அன்றைக்கு பார்த்து அவர் புக் செய்த விமானத்தில், பாதுகாவலர்களுக்கு டிக்கெட் கிடைக்காததால் அவர்களை அடுத்த நாள் விமானத்தில் வரும்படி சொல்லியிருக்கிறார். இதுவும் மொஸாத்துக்குத் தெரிந்துவிட அதற்கு முன்பாகவே முந்திக் கொள்ள நினைத்து, முகமது வந்து சேர்ந்த அன்றைக்கே ஆறரை மணி நேர இடைவெளியில் அவரைக் கொலை செய்திருக்கிறார்கள்.

இந்த டிவி காட்சிகளின் தொகுப்பை வெளியிட்ட துபாய் போலீஸின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் டாகி கஃப்லன் தமீம் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட மொஸாத் ஏஜெண்டுகள் என்று 11 பேரை அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் குடியுரிமை பெற்ற Michael Lawrence Barney, James Leonard Clarke, Jonathan Louis Graham, Paul John Keeley and Stephen Daniel Hodes; அயர்லாந்தில் குடியுரிமை பெற்ற  Gail Folliard, Evan Dennings and Kevin Daveron பிரான்சு நாட்டைச் சேர்ந்த Peter Elvinger, மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த   Michael Bodenheimer. இவர்கள்தான் அந்த தேடப்படும் மொஸாத் ஏஜெண்டுகள். 

பல்வேறு நாடுகளில் இருந்து கிளம்பி சுவிட்சர்லாந்தில் ஒன்று சேர்ந்து தனி விமானம் மூலம் துபாய்க்குள் கால் வைத்த இந்த மொஸாத் ஏஜெண்டுகளில் சிலர் டூரிஸ்ட்டுகள் போலவும், சிலர் விளையாட்டுப் போட்டியைக் காண வந்தது போலவும் காட்சியளித்துள்ளனர். துபாயில் அவர்கள் தங்களது தலைக்கு விக்கை பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

முகமதுவின் அறைக்கதவின் லாக், எலெக்ட்ரானிக் புரோகிராமிங் செய்யப்பட்ட ஒன்றாம். அந்த புரோகிராமையே உடைத்தெறிந்துவிட்டு அறைக்குள் நுழைந்த 4 மொஸாத்துகள் முகமதுவைச் சித்ரவதைப்படுத்தியும், இறுதியில் விஷம் கொடுத்தும் கொலை செய்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. பின்பு, கதவை உட்பக்கமாக முகமதுவே தாளிட்டிருப்பதுபோல் அதில் ரீபுரோகிராம் செய்துவிட்டுத்தான் தப்பியோடியிருக்கிறார்கள். என்ன கில்லாடித்தனம்..?

துபாய் அரசு இந்த படுகொலைக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் தனது கெடுபிடியை இறுக்கமாக்கியிருக்கிறது. முன்பெல்லாம் அரபு குடியரசு நாடுகள் பாலஸ்தீனர்கள் என்றால் கொஞ்சம் கருணையுடன் நடந்து கொள்ளும் என்பதால்தான் இந்த நாடுகளுக்கு மட்டும் தைரியமாக வந்து செல்வார்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தளபதிகள். இதனை உடைத்தெறிந்திருக்கிறது சர்வ வல்லமை பொருந்திய மொஸாத்..

ஏற்கெனவே உலகம் முழுவதும் இருக்கும் மொஸாத் ஏஜெண்டுகளின் போலி பாஸ்போர்ட்டுகளை பல்வேறு நாடுகளும் அடையாளம் கண்டு அவற்றை தடை செய்துள்ளன. இந்த முறை இந்த ஏஜெண்ட்டுகள் வந்த அனைத்து ஐரோப்பிய நாடுகளுமே போலியான புகைப்படம் ஒட்டிய பாஸ்போர்ட்டுகளுக்கு அனுமதியளித்துள்ளார்கள். இது பற்றி அனைத்து நாடுகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சம்பந்தப்பட்ட நாடுகள் முகமதுவின் படுகொலை பற்றி விசாரணை செய்து போலியாக பாஸ்போர்ட் வழங்கியமைக்காக சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படுகொலை வழக்கில் போலி பாஸ்போர்ட் வழங்க உதவியதற்காக ஆஸ்திரேலிய அரசு, தனது நாட்டுக்கான இஸ்ரேலிய தூதரை வெளியேற்றியது.

இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மட்டுமே போலந்து தலைநகர் வார்சாவில் அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இதில் இன்னொரு திருப்பமாக ஹமாஸ் அமைப்பின் விரோதியாகச் செயல்படும் எகிப்து நாட்டைச் சேர்ந்த பாத் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள்தான் துபாய் வந்திருந்த மொஸாத் ஏஜெண்டுகளுக்கு மறைமுகமாக உதவிகள் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனராம்.

மேலும் இந்தப் படுகொலையின் பின்னால் நிச்சயமாக மொஸாத் இருக்கிறது என்று துபாய் அரசு சொன்னாலும் இன்றுவரை இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கும், இதற்கும் யாதொரு ஸ்நானப் பிராப்தமும் இல்லை என்றே சொல்லி வருகிறது. ஆனாலும் துபாய் அரசு மொஸாத்தின் தலைமை இயக்குநரை கைது செய்து தரும்படி சர்வதேச போலீஸாரிடம் ரெட் அலர்ட்டை கொடுத்துவிட்டது கூடுதல் சுவாரஸ்யமான விஷயம்.
No comments:

Post a Comment