சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய பல விதிமுறைகள் கடைபிடிக்கபடுக்கின்றனர்.
1) நோயாளி,தானம் தருபவர் இருவரின் இரத்த வகையும் ஒரே வகையாக இருக்க வேண்டும்.
2)தானம் தருபவர்க்கு புகை,குடிப்பழக்கம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்.
3)தானம் தருபவர்க்கு சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம் இல்லாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4)கிட்னி தானம் செய்பவர் நோயாளிக்கு இரத்த உறவுமுறை உள்ளவராக இருக்க வேண்டும்.( அப்பா, அம்மா, அண்ணன், அக்கா,தம்பி,தங்கை,)
5)தானம் செய்பவருக்கு திருமணம் ஆயிருப்பின் அவருடைய மனைவி,மகன், மகள், என அனைவரும் சிறுநீரக தானம் செய்ய மனப்பூர்வமாக சம்மதிக்க வேண்டும்.
6)நோயாளி மற்றும் தானம் செய்யபவரது உறவினர்களின் அடையாள, இருப்பிட, உறவுமுறை சான்றுகள் அரசு அலுவலகங்களில் பெற்று கொடுக்கவேண்டும்.
7)இவற்றை எல்லாம் அந்த பகுதி நீதிமன்றத்தில் உள்ள நீதிபதியிடம் காண்பித்து கையெழுத்து வாங்கவேண்டும்.
8)எல்லா ஆவணங்களையும் நீங்கள் சிகிச்சை எடுக்கும் மருத்துவமனையில் கொடுத்ததும் அவர்கள் பார்த்துவிட்டு பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்கள்.
9) அங்கு அம்மருத்துவமனையின் தலைமை மருதுதுவர் மற்ற அரசு அதிகாரிகள் உங்களை சில கேள்விகள் கேட்டு உறுதிபடுத்தி கொண்டு சான்றிதழ் அளிப்பார்கள்.
10)அதன்பின்பே அறுவைசிகிச்சை செய்யப்படும்.
அறுவை சிகிச்சை முடிந்து நீங்கள் 10 நாட்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கபடுவீர்கள் .பின்னரே மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு செல்லலாம். பின் ஒருநாள் விட்டு ஒருநாள் இரத்த பரிசோதனை மூலம் உங்கள் கிட்னி எப்படி இயங்குகிறது என பார்ப்பார்கள்.இது அளவு ஒரு மாதம் வரை.
ஒருமாதம் கழித்து 2 நாளுக்கு ஒருமுறை,பின் வாரம் 2 முறை, பின் வாரம் 1 முறை, எனவும் மாற்றி எடுப்பார்கள்.முதல் ஒருவருடம் மிக கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
தினமும் கவனமாக குறிப்பிட்ட நேரத்திற்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment