சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Dec 2012

சிறு, குறு தொழில்களுக்கு சலுகைகள்: முதல்வர் அறிவிப்பு


கடும் மின் பிரச்னையனையில் இருக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு சிறிது ஆறுதல் அளிக்கும் வகையில், சில சலுகைகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
                     கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், தென்னிந்திய ஆலைகள் சங்க நிர்வாகிகள் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது தற்போது நிலவும் கடும் மின்வெட்டு பிரச்னைகளில் இருந்த தப்பிக்க, ஜெனரேட்டர்கள் மீதான வாட் வரியை குறைப்பது, ஜெனரேட்டர் வாங்க கடன் பெறும் போது, கடன் பெறுவோர் அளிக்கும் பங்குத்தொகையை குறைப்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை அவர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் ஜெனரேட்டர் வாங்க ஏதுவாக ஜெனரேட்டர் மீதான 14.5 சதவீத வாட் வரி 5 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், ஜெனரேட்டர் வாங்க தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் (டிக்) மூலம் கடன் பெறுவோர் அளிக்க வேண்டிய பங்குத்தொகை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலை ஜெனரேட்டர்களில் பயன்படுத்தப்படும் பர்னஸ் ஆயிலுக்கு, கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் செப். 30ம் தேதி வரை வாட் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது இந்த விலக்கு வரும் மே 31, 2013 வரை தொடரும் என்றும், இந்த சலுகைகள் மூலம் அரசுக்கு ஆண்டு ரூ. 97 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment