உத்தர்கண்ட் மாநிலத்தில் போதை விருந்து பார்ட்டியில் கலந்து கொண்டதாக 14 மாணவிகள்
உள்பட 34 பேரை போலீசார் கைது செய்தனர். உத்தர்கண்ட் மாநிலம் ஜாக்ஹான் பகுதியில்
உள்ள ரிசார்ட் ஒன்று உள்ளது. நேற்று ஞாயிறு என்பதால் அங்கு சட்டவிரோதமாக போதை
விருந்து நடப்பதாக அப்பகுதி சர்சிகள் போலீஸ் அதிகாரி மம்தாவோராவிற்கு ரகசிய தகவல்
கிடைத்தது. இதையடுத்து போலீஸ்படையினர் அதிரடியாக ரிசார்ட்டிற்குள் புகுந்து சோதனை
நடத்தினர். அப்போது அங்கு நடந்த போதை விருந்தில் பங்கேற்றவர்களை சுற்றி வளைத்து
கைது செய்தனர். அவர்களிடமிருந்து போதை மருந்துகள் மதுபாட்டில்கள் பறிமுதல்
செய்யப்பட்டனர். சிக்கியவர்களில் 14 மாணவிகள் உள்பட 34 பேர் ஆவர். இவர்களில்
பெரும்பாலானோர் டில்லியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் என தெரியவந்தது. அவர்கள் மீது
வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களி்ன் எதிர்காலம் கருதி ஜாமினில் செல்ல
உத்தரவிட்டனர். எனினும் அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், விருந்தில்
பங்கேற்றது உண்மையானால் வழக்கப்பதிவு செய்யப்படும் என மம்தாவோரா தெரிவித்தார்.
No comments:
Post a Comment