சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

27 Dec 2012

மேலும் ஒரு பெண் கற்பழிப்பு
           டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தினமும் பெண்கள் கற்பழிக்கப்படும் தகவல்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் வகையில் வெளியானபடி உள்ளது. பல மாநிலங்களில் இருந்து இந்த தகவல்கள் வந்த போதிலும் இன்று காலை டெல்லி அருகே மேலும் ஒரு பெண் கற்பழித்து ரோட்டோரம் வீசப்பட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு:- 

           ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் பூனம் (வயது42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த சனிக்கிழமை வேலை விஷயமாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள விரிந்தாவனுக்கு சென்றார். அங்கு வேலைகளை முடித்துக் கொண்டு நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டார். 

              அப்போது அவர் வர்மா என்பவரை சந்தித்தார். காரில் இருந்த வர்மா, நானும் ஜெய்ப்பூர்          தான் செல்கிறேன். வாருங்கள் உங்களை காரில் கொண்டு போய் விடுகிறேன் என்றார். வர்மாவின் பேச்சை நம்பி அந்த பெண் காரில் ஏறினார். 

         கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் வர்மாவின் நண்பர்கள் 2 பேர் திடீரென்று வந்து காரில் ஏறினார்கள். அவர்களில் ஒருவன் அந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினான். இதற்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார். 

           இதனால் பயந்து போன வர்மாவின் நண்பர்கள் இருவரும், துணியை எடுத்து அந்த பெண்ணின் வாயில் திணித்தனர். இதன் காரணமாக அந்த பெண்ணால் கூச்சல்போட இயலாமல் போய்விட்டது. காரின் பின் இருக்கையில் அந்த பெண் சாய்ந்தார். 

        இதை பயன்படுத்தி அந்த பெண்ணை 3 பேரும் கற்பழித்தனர். இதில் அந்த பெண் சுயநினைவு இழந்தார். ஓடும் காரில் சுமார் 1 1/2 மணி நேரமாக இந்த பாலியல் பலாத்கார கொடூரம் நடந்தது. 3 பேரும் அந்த பெண்ணை வேட்டையாடி முடித்திருந்தபோது கார் தென்கிழக்கு டெல்லியை அடைந்திருந்தது. டெல்லிக்குள் அந்த பெண்ணுடன் சென்றால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என்று வர்மாவும், அவன் கூட்டாளிகளும் பயந்தனர். 

             இதனால் அவர்கள் அந்த பெண்ணை நேற்றிரவு 9 மணி அளவில் தென்கிழக்கு டெல்லி புறநகரான கல்காஜ் பகுதியில் ரோட்டோரத்தில் தள்ளி விட்டு சென்றனர். 9.15 மணிக்கு அந்த சாலை வழியாக சென்றவர்கள், ஒரு பெண் அலங்கோலமான நிலையில் சாலையோரத்தில் மயங்கிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

              இதுபற்றி அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் குழு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்தது. அப்போது அந்த பெண் பலரால் கற்பழிக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். 

                  இன்று காலை அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தது. அதன் பிறகு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் ஓடும் காரில் அந்த பெண் 3 போரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம் தெரிய வந்தது. 

           இதையடுத்து டெல்லி போலீசார் வர்மா மற்றும் அவரது 2 கூட்டாளிகள் மீது இந்திய தண்டனை சட்டம் 376 (ஜி) (கும்பலாக கற்பழித்தல்) பதிவு செய்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் முக்கிய குற்றவாளி வர்மா இன்று காலை ஆக்ராவில் பிடிபட்டான். இந்த தகவலை டெல்லி போலீஸ் செய்தித்தொடர்பாளர் ராஜன் பகத் உறுதிப்படுத்தினார்.

         வர்மாவின் கூட்டாளிகள் 2 பேரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படை போலீசார் டெல்லி முழுக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். 

          முக்கிய குற்றவாளியான வர்மாவிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர், கற்பழிக்கப்பட்ட பெண்ணை தனக்கு 5 ஆண்டுகளாக தெரியும் என்றார். இதனால் அந்த பெண் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

           இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு இதே பெண் ஆக்ரா போலீசில் தன்னை சிலர் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்தது தெரிய வந்துள்ளது. ஆனால் போலீசார் அந்த புகாரில் உண்மை இல்லை என்று கூறி வழக்குப்பதிவு செய்யவில்லையாம். எனவே அந்த பெண் விபசார அழகியாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

            இதற்கிடையே குஜராத் மாநிலத்திலும் ஒரு பெண் கை, கால்களை கட்டி கற்பழிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:- 

குஜராத் மாநிலம் மகசேனா மாவட்டத்தில் உள்ள அஞ்சா என்ற பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் ஒரு பெண்ணும் அவரது நண்பரும் சாலை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று கத்தியை காட்டி இருவரையும் மிரட்டினார்கள். 

          பெண்ணின் நண்பர் அவர்களைத் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் அவரை ஆயுதங்களால் பலமாகத் தாக்கினார்கள். பின்னர் அந்தப் பெண்ணின் கை, கால்களை சேலையால் கட்டி வாயைப் பொத்தி கற்பழித்தனர். 

          பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்தனர். இதனால் மர்ம மனிதர்கள் தப்பி ஓடி விட்டனர். இதைத் தொடர்ந்து அந்த பெண்ணையும், அவரது நண்பரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து சேர்த்தனர். 

                 பெண்ணின் நண்பர் மயக்கமான நிலையில் இருந்தார். தப்பி ஓடிய குற்றவாளிகளின் வயது 25-ல் இருந்து 30-க்குள் இருக்கும் என்று கற்பழிக்கப்பட்ட பெண் கூறினார். அந்த பெண் விதவை ஆவார். அவரையும் அவரது நண்பரையும் மகசேனா அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.


No comments:

Post a Comment