சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2012

நெயில் பாலிஷ் ரிமூவர்

நெயில் பாலிஷ் ரிமூவரை வெச்சு வீட்டையும் சுத்தம் செய்யலாம்!!!

அழகுப் பொருட்களில் ஒன்றான நெயில் பாலிஷ் ரிமூவர், நெயில் பாலிஷ்ஷை ரிமூவ் 


செய்வதற்கு மட்டும் பயன்படவ
ில்லை. பல பொருட்களையும் சுத்தம் செய்வதற்கு 





பயன்படுகிறது. அதிலும் சாதாரண கறைகளை நீக்கப் பயன்படுவதைவிட, கடினமான 





கறைகளை அகற்றப் பயன்படுவதில் சிறந்தாது என்று சொல்லலாம். சரி, இப்போது அந்த 





நெயில் பாலிஷ் ரிமூவர் வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்ப்போமா!!!



* நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, பசையை நீக்கப் பயன்படுகிறது. அதாவது 





பசையானது ஏதாவது ஒன்றில் நன்கு ஒட்டிக கொண்டால், அபபோது கைகளை வைத்து 





பிரிக்க வேண்டாம். ஏனெனில் பசையை கைகளால் தொட்டால், அவை சருமத்திற்கு 





ஆபத்தை விளைவிக்கும். ஆகவே அப்போது ஒரு காட்டனில் சிறிது நெயில் பாலிஷ் 





ரிமூவரைப் பயன்படுத்தி, ஒட்டிக் கொண்ட இடத்தில் தேய்த்தால், எளிதாக பிரித்துவிடலாம்.


* களிமண் பாத்திரங்களில் எண்ணெய் அல்லது மஞ்சள் கறை அதிகம் இருந்தால், அப்போது

 நெயில் பாலிஷ் ரிமூவரைக் கொண்டு, அந்த பாத்திரங்களில் கறை உள்ள இடத்தில் 

தேய்த்தால், சில நொடிகளில் கறைகள் அகன்றுவிடும்.



* டைல்ஸ் மிகவும் அழுக்குடன், பளபளப்பின்றி காணப்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரின் 

உதவியால், அந்த அழுக்கு உள்ள இடத்தை சுத்தம் செய்தால், டைல்ஸ் சுத்தமாக 

பளிச்சென்று காணப்படும்.




* சில மை கறைகளை, நீரில் அலசினால் போகாமல் இருக்கும். அதிலும் அவ்வாறு நீரில் 





அலசும் போது, அந்த இடமே ஒரு வித்தியாசமான நிறத்தில் காணப்படும். எனவே அத்தகைய 





கறைகளைப் போக்க, நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, அலசினால், கறைகள் 





சுத்தமாக நீங்கிவிடும்.






* அலுவலகங்களில் மார்க்கரைப் பயன்படுத்தி எழுதும் போது அழிக்க முடியவில்லையா? 





அல்லது பெயிண்டிங் செய்யும் போது தவறாக வரைந்தவற்றை சரிசெய்ய 





முடியவில்லையா? அப்படியெனில் அப்போது நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தி, 





அழித்தால் சரிசெய்துவிடலாம்.






* உலோகப் பொருட்களில் துரு, பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவை எளிதில் 





வந்துவிடும். இவை அனைத்தையும் போக்க நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தினால், 





எளிதில் போய்விடும். பின் பார்ப்பதற்கே புதிது போல் காட்சியளிக்கும்.








மேற்கூறியவையே நெயில் பாலிஷ் ரிமூவரின் இதர நன்மைகள். வேறு எப்படியெல்லாம் 

நெயில் பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் 

பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment