சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

7 Dec 2012

தீபாவளியன்று செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்


அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, தீபாவளியன்று நவீன செயற்கை கோள்வாயிலாக எடுக்கப்பட்ட இந்திய வரைபடத்தினை நேற்று வெளியிட்டது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, வி.ஐ.ஐ.ஆர்.எஸ். எனப்படும் செயற்கை கோள்வாயிலாக உலக வரைபடத்தினை துல்லியமாக படம் எடுக்கும் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருகிறது. இந்த செயற்கை கோள் அமெரிக்க ராணுவ புவியியல் செயற்கை கோள் திட்டத்தின் (டி.எம். எஸ்.பி) கீழ் இந்தியாவின் வரைபடத்தினை நேற்று‌ வெளியிட்டது.
கடந்த நவம்பர் 12-ம் தேதி தீபாவளியன்று ‌எடுக்கப்பட்ட கருப்பு வெள்ளை படம் நேற்று பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியாயின. இதில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது துல்லியமாக தெரிந்தது.இவற்றை தவிர இந்தியாவை‌ ஒட்டியுள்ள பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளின் வரைபடங்களும் இவற்றின் எல்லைப்பகுதிகளும் துல்லியமாக காட்சியளித்தன.
இத குறித்து நாசா விஞ்ஞானி செர்ரீஸ் ஈல்விட்ஜ் கூறுகையில், இது போன்று துல்லியமான வரைபடத்தினை எடுப்பதற்கென கடந்த 2003-ம் ஆண்டு நாசா டி.எம்.எஸ்.பி. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தினை உருவாக்கினோம். அதன் மூலம் முதன்முதலாக இந்திய வரைபடத்தினை கடந்த நவம்பர் மாதம் 12-ம் தேதியன்று எடுத்தோம். டி.எம்.எஸ்.பி. செயற்கை கோள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த புகைப்படத்தை பூமிக்கு அனுப்பியது. இந்தியாவில் 31 மிகப்பெரிய நகரங்களில் இந்துக்கள் கொண்டாடிய தீபாவளி பண்டிகையின் போது எடுக்கப்பட்டது. கருப்பு -வெள்ளையில் வெளியான இந்த புகைப்படம் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment