சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

3 Dec 2012

மின்சாரம் சக்தி 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்த திட்டம்-தேர்தல் அறிக்கை-


 குஜராத் மாநில சட்டசபை தேர்தல் சூடு பிடித்து வரும் வேளையில் ஆளும் பா.ஜ.,தரப்பில் தேர்தல் அறிக்கையை இன்று முதல்வர் நரேந்தி மோடி வெளியிட்டார். இது வரை எந்த கட்சியும் அறிவிக்காத ஏழைகளுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளார். இது இந்த மாநில மக்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் டிசம்பர் மாதம் 13ம் தேதி குஜராத் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. முதல்வர் மோடியே மீண்டும் ஆட்சியை பிடிப்பார் அந்த அளவிற்கு அவரது வளர்ச்சிப்பணிகள் இருந்து வருகிறது, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக குஜராத் திகழ்கிறது என்று இன்று நடந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.,மூத்த தலைவர் அத்வானி பேசினார். 


இந்நிலையில் இன்று பா.ஜ.,மூத்த தலைவர்கள் முன்னிலையில் முதல்வர் நரேந்திரமோடி தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதில் அடங்கியிருக்கும் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

* நீர்ப்பாசனம் மேன்மையடைய செய்ய திட்டம்


* சாகுபடிக்கு 16 லட்சம் ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு 


*அனைவருக்கும் இன்சூரன்ஸ்


* ஏழைகளுக்கு இலவச வீடுகள் 


*முதல் கட்டமாக 50 லட்சம் வீடுகள் வழங்க திட்டம்


* சூரத், வதோதரா, ராஜ்கோட் நகரங்களில் சூப்பர் மல்டி லெவல் ஆஸ்பத்திரி


* திறமை வளர்க்கும் விதமாக கார்ப்ரேஷன் அமைப்பு 


மின்சக்தி 2 மடங்காக அதிகரிக்க திட்டம்
*சுய வேலைவாய்ப்பு அதிகரிப்பு 


*குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன்


* பண்ணைகளுக்கு உடனடி மின்சாரம்


*அனைவருக்கும் நல்ல குடிநீர் 


* மின்சாரம் சக்தி 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்த திட்டம்


*வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கு அதிகரிப்பு


* இங்கிலீஷ் மீடிய பள்ளிகள் அதிகரிக்க புதிய திட்டம்


*நர்மதா நதி இணைப்பு திட்டம்


*ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்ரேஷன்


தேர்தல் அறிக்கை வெளியிட்டு நிருபர்களிடம் பேசிய முதல்வர் மோடி குஜராத் வளர்ச்சி பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் இளைஞர்கள் முன்நிறுத்தி வளர்ச்சி பணிகளுக்கு அவர்களை தலைமையேற்று முன்னேற்ற வழி நடத்தி செல்வேன் என்றார்.

No comments:

Post a Comment