சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

1 Dec 2012

கறுப்பா நடிச்சது பிடிச்சுருக்கு பரதேசி பற்றி தன்ஷிகா!


             பாலாவின், "பரதேசியில்,  முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும், தன்ஷிகா, இந்த படம், தன் திரையுலக வாழ்வில், பெரும்  திருப்புமுனையை ஏற்படுத்தும் என, நம்புகிறார். "பரதேசி பட அனுபவங்கள் குறித்து, அவர் கூறுகையில்," இந்த படத்தில் நடிக்க, பாலா சார் கூப்பிட்டதும்,  இது நிஜமா, கனவா என, நினைத்தேன். அவர், நினைத்தபடி, நம்மால் நடிக்க முடியுமா என்ற பயம் இருந்தது." உனக்கு நல்ல வாய்ப்பு. உடனே ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்கு கிளம்பு என, வீட்டில் உள்ளவர்கள் கூறினர்.  மதுரைக்கு அருகில்,  மலைப் பகுதியில், பொட்டல் காட்டில் ஷூட்டிங். எப்படி கேரக்டர் வச்சிருக்கிறாரோ என்ற நினைத்துக் கொண்டிருக்கும்போதே, மேக்கப்மேன்,  முகம், உடம்பு, கையெல்லாம், கறுப்பாக இருப்பது போன்ற, மேக்கப் போட்டார் என, அதிர்ச்சியுடன் விவரித்த தன்ஷிகா,
"படத்தில் இடம் பெற்ற காட்சிகளும், வசனங்களும், தேயிலை தோட்ட பின்னணியும்,  அப்படியே, என்னை அந்த ஏரியா மனுஷியாக நினைக்க வைத்து விட்டது. சிவப்பாக இருந்த நான், இந்த படத்துக்காக கறுப்பு அவதாரம் எடுத்திருக்கிறேன். கறுப்பா நடிச்சது எனக்கு ரொம்ப பிடித்து விட்டது என, ஆச்சர்யம் விலகாமலேயே, விவரிக்கிறார், தன்ஷிகா.

No comments:

Post a Comment