சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

18 Oct 2014

அரசியலுக்கு நான் உழைக்க வந்திருக்கிறேன்: சொல்கிறார் விஜயகாந்த்

அரசியலுக்கு நாள் பிழைக்க வரவில்லை, உழைக்க வந்து இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நலத்திட்டங்களை வழங்கி பேசிய விஜயகாந்த், ''நான் அரசியலுக்கு பிழைக்க வரவில்லை, உழைக்க வந்து இருக்கிறேன். நான் பிழைக்க வேண்டும் என நினைத்தால் எப்படியெல்லாமோ பிழைத்திருப்பேன். மேலே ஒருத்தன் இருக்கிறான், அவன் கணக்கு போட்டு கொண்டே தான் இருப்பான். அவன் போட்ட கணக்கு இன்று பலித்துள்ளது.




ஏன் இதை சொல்கிறேன் என்றால், காவல் துறை என்னிடம் இதை பேசக்கூடாது, அதை பேசக்கூடாது என்கிறார்கள். நான் என்ன தப்பா செய்திருக்கிறேன்? எனக்கு ஒரு சட்டம் .தி.மு..வினருக்கு ஒரு சட்டமா? ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 60 பேர் இறந்ததாக சொல்கிறார்கள். அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பதை கண்டுபிடித்தீர்களா?

காவல் துறை மானிய கோரிக்கையின்போது எங்களுடைய கொள்கை பரப்பு செயலாளர் பேசியபோது, காவல் துறையை பற்றி நீங்களோ உங்கள் கட்சியினரோ பேசக்கூடாது. அதற்கு உங்களுக்கு அருகதை இல்லை என்றார்கள். ஆனால், இப்போது என்ன ஆயிற்று? பதவி ஏற்பு விழாவில் அமைச்சர்கள் எல்லாம் அழுகிறார்கள். ஏன் ஜெயலலிதா வந்தவுடன் நாங்கள் பதவி ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்ல வேண்டியதுதானே?

ஆடு, மாடு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளார்கள். இதுவும் விரைவில் வெளிவரும். முன்பு செய்த தவறுக்கு தான் தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கனிம வள முறைகேடுகளை கண்டுபிடிப்பதற்காக ..எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழுவை உயர் நீதிமன்றம் நியமித்தது. குழுவை நியமித்து ஒருமாதமாகிறது, ஆனால் இதுவரை நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.

நீதிபதி மைக்கேல் டி குன்கா கொடுத்த தீர்ப்பை, காவல் துறை தவறு என்று சொன்னால் நான் ஒருபக்க மீசையை எடுத்துவிடுகிறேன். சட்டம் தன் கடமையை செய்யும். ஜெயலலிதா மட்டுமல்ல ஓம்பிரகாஷ் சவுதாலா, லாலுபிரசாத் யாதவ் ஆகியோரும் தவறு செய்ததற்காக சிறை சென்று வந்திருக்கிறார்கள். நான் ஒருவர் மீது குறை சொல்லி, திரித்து பேசித்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கமாட்டேன்" என்றார்.




No comments:

Post a Comment