சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

16 Oct 2014

கலால் வரி 32% உயர்ந்தது


கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் கலால் வரி 32.8 சதவிகிதம் உயர்ந்து, ரூ.18,116 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி சாராத தொழில்கள் புதிய வளர்ச்சி காணத் தொடங்கி இருப்பதையே இது காட்டுவதாக சொல்கிறார்கள் நிபுணர்கள்.

  எனினும் சுங்க வரியானது 0.4 சதவிகிதம் குறைந்து, 14,288 கோடியாகவே இருக்கிறது. உற்பத்தித் துறை தொடர்ந்து மந்தநிலையில் இருப்பதையே இது காட்டுவதாக அமைந்திருக்கிறது. சேவை வரியைப் பொருத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 5.8 சதவிகிதம் உயர்ந்து 15,608 கோடியாக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு 14,755 கோடி மட்டுமே சேவை வரியாக வசூலானது குறிப்பிடத்தக்கது.

 2014-15 ஆண்டில் மறைமுக வரியானது 25 சதவிகிதம் அளவுக்கு இருக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் நிர்ணயம் செய்துள்ளது. அதாவது, மொத்தமாக 6,25,000 கோடி ரூபாய் மறைமுக வரி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஆனால், கடந்த செப்டம்பரில் மறைமுக வரி 12.3 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் 2,41,000 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment