அமெரிக்காவைச் சேர்ந்த
அன்னா ஸ்டோஹர், இன்று
தனது 114வது பிறந்த
நாளை கொண்டாடுகிறார். முகப்புத்தகத்தில் இணைந்து, அங்கு
அனைவராலும் ‘ஓல்டஸ்ட் டீன் ஏஜர்’
என்று கொண்டாடப்படும் இந்த பாட்டியின் பேச்செல்லாம் பிறந்தநாள் விழாவின் சந்தோஷம்!
‘‘1900 அக்டோபர் 15 அன்று பிறந்தேன். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் போன், டிவி என்று
எதுவும் கிடையாது. இப்போதோ சிறுவர்களிடம் கூட ஸ்மார்ட் போன் உள்ளது.
மேலும், சமூக வலைதளங்கள் பற்றி அறிந்தபோது, எனக்கும் அதில் இணைய
ஆசை வந்தது. அதற்காகவே, என் மகன் ஹார்லன்
ஸ்டோஹர் எனக்கு ஒரு
ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொடுத்தான்.
அதன்
மூலமாக முகநூலில் எனக்கான அக்கவுண்ட்டை ஆரம்பித்தபோது, 1905 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களால் மட்டுமே முகநூலில் இணைய முடியும் என்று வந்தது.
பின்னர் நண்பர் வெரிஜான் மற்றும் ஜோசப் ரமிர்ஜ்
உதவியடன் முகநூல் நிறுவனர் மார்க்குக்கு ஒரு கடிதம்
அனுப்பினேன்... 'நான் இன்னும்
இருக்கிறேன்!' என்று!
என் மகனோ, நான் பிறந்த ஆண்டை 1915 என்று மாற்றி, எனக்கு முகநூலில் அக்கவுண்ட் ஆரம்பித்துக் கொடுத்தான். அதன்படி எனக்கு இப்போது வயது 99!’’ என்று குறும்பாக சிரிக்கும் அன்னா பாட்டி,
‘‘இந்த ஃபேஸ்புக், முதுமை தந்த தனிமையை விரட்டி, எப்போதும் என் உறவினர்கள், நண்பர்களுடன் என்னை இணைத்து வைக்கிறது!’’ என்கிறார் தன் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்தபடி!
‘‘இந்த ஃபேஸ்புக், முதுமை தந்த தனிமையை விரட்டி, எப்போதும் என் உறவினர்கள், நண்பர்களுடன் என்னை இணைத்து வைக்கிறது!’’ என்கிறார் தன் ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்தபடி!
No comments:
Post a Comment