சிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்

Pages

31 Oct 2014

புதிய கூட்டணிக்கு வழிவகுத்த ராமதாஸ் இல்ல திருமணம்!

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை..நிரந்தர எதிரியும் இல்லை' என்ற அரசியல்வாதிகளின் தாரக மந்திரத்திற்கு  உதாரணமாக அமைந்துவிட்டது பா... நிறுவனர்  ராமதாஸின் இல்ல திருமணத்தில் நடந்த தலைவர்களின்  சந்திப்பு.

தேர்தலின்போது கூட்டணியில் இருந்துவிட்டு பின்னர், "தேனிலவு முடிந்தது.. தொகுதிப் பங்கீட்டுக்கு மட்டும்தான் கூட்டணிஇப்போது பிரிந்து விட்டோம்!" என்று கூறி கடந்த காலங்களில்  கூட்டணியை முறித்துக்கொண்டவர்கள்மீண்டும் கூட்டணி அமைத்தது தமிழக அரசியலுக்கு புதிதல்ல.




அந்த வகையில்  பா... நிறுவனர் ராமதாஸின் பேரப் பிள்ளைகள் .சம்யுக்தா, .ப்ரித்தீவன்  திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடை பெற்றது. இந்த திருமணத்தையொட்டி நேற்று நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக பொருளாளர் மு..ஸ்டாலின் ஆகிய இருவரும் நேரில் சந்தித்து அளவளாவிய காட்சிகள், பேட்டிகள்தான் தமிழக அரசியலின் இன்றைய  ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படுகிறது. 
வைகோ திமுகவில் இருந்த பிரிந்து தனி இயக்கம் கண்ட காலத்தையும் அவர் எதிர்கொண்ட சிக்கல்களும், பின்னர் மீண்டும் திமுக கூட்டணியில் அடைக்கலமானதும் அதைத் தொடர்ந்து  கூட்டணி முறிவு ஏற்பட்டு வெளியேறியதும், அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் இரண்டு கட்சியினருக்கும் மறவாத ஒன்று.

அதைப்போலவே பா...வின் நிலையும். கூடலும் ஊடலும் தேர்தல் தோறும் நடக்கும் வைபவங்களைப் போல தமிழக அரசியலில் நடக்கின்ற நிகழ்வே என்றாலும், இந்த சந்திப்புகளும் தலைவர்களின் பேட்டிகளும் எதிர்கால தேர்தல் கூட்டணிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சிறு சிறு அமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஒரு அணியாக நின்று 37 இடங்களில் வென்று சாதனை படைத்தது.அப்போது அந்த தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளோடு படு தோல்வியைச் சந்தித்தது. காங்கிரஸ் சுத்தமாக காணாமலே போனது.

பா.. தலைமையில் தேமுதிக ,பாமக, மதிமுக, ஐஜே கே,கொமதேக என பெரிய கூட்டணி அமைத்து களம் கண்டதில், பாமக சார்பில் அன்புமணியும், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் எம்.பி க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்நிலையில் தமிழக அரசியலில், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு வெளிப்படையாகவே வைகோ பாஜகவை எதிர்த்து செயல்பட்டார். மோடி பதவியேற்பு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததை கண்டித்ததில் இருந்தே  வைகோவின் வெளிநடப்பு தொடர்ந்தது.

அதே போல மோடி அமைச்சரவையில் அன்புமணிக்கு இடம் கிடைக்கும் என்று பாமக எதிர்பார்த்து ஏமாந்தது. இந்நிலையில் அண்மையில் மோடி அளித்த விருந்திற்கு அழைப்பு வந்தும் பாமக சார்பில் அன்புமணி போகாமல் புறக்கணித்தார்.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைத்த தண்டனைத் தீர்ப்புஅதிமுகவுக்கு அரசியல் களத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தமிழக கட்சிகள் காய்நகர்த்தி வரும் நிலையில்தான், கூட்டணி முகாம்கள் இடம்பெயர்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது ராமதாஸ் இல்ல திருமண விழா.
மாமல்லபுரத்தில் நடந்த திருமண வரவேற்பில் நேற்று ( 29.10.14) கலந்துகொண்ட திமுக பொருளாளர் மு.. ஸ்டாலினும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


                                


இந்த சந்திப்பு குறித்து  செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ''ஸ்டாலின் உடனான சந்திப்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை. .தி.மு..வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி அடைவேன்'' என்று கூறி தமிழக அரசியலில் புதிய கூட்டணிக்கான திரியை கொளுத்தி போட்டார்.

எதிர்பார்த்தபடியே, அவரது இந்த பேட்டி வெளியான சில நிமிடங்களிலேயே தமிழக அரசியலில் பரபரப்பு பற்றிக்கொண்டது. அன்று மாலையே, வைகோவின் பேட்டி குறித்து கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மதிமுக உடன் கூட்டணி ஏற்பட்டால் வரவேற்பேன். நீண்ட கால நண்பர் என்ற முறையில் ஸ்டாலினை வைகோ சந்தித்துள்ளார்.

அதேபோல், கூட்டணிக்கு பா... வர விரும்பினால் அது பற்றியும் தி.மு.. பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும்" என்று கூறி, தனது பங்கிற்கு திரிகொளுத்தினார்.

மேலும் ராமதாஸ் இல்ல திருமணத்திற்கும் இன்று ( 30.10.14) நேரில் சென்று வாழ்த்தி, புதிய கூட்டணிக்கான முஸ்தீபுகளை தொடங்கினார் கருணாநிதி.

திருமண விழாவில், "எங்களுக்குள் கோப, தாபங்கள் ஏற்பட்டாலும், உறவு முறையில் தடங்கல்கள் ஏற்பட்டாலும் எங்களுக்குள் இருக்கும் அன்பு என்றும் குறைந்ததில்லை" என்று ராமதாஸ் மீது கருணாநிதி அன்பை பொழிய, பதிலுக்கு, "அரசியல் பண்பிலும், நாகரீகத்திலும் தி.மு.. தலைவர் கருணாநிதியை யாரும் மிஞ்ச முடியாது" என்று புகழ்ந்து கூட்டணிக்குள் வர தயார் என்பதை சூசகமாக உணர்த்திவிட்டார் ராமதாஸ்


அடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து வாய் திறந்தால், தமிழக அரசியலில் இன்னொரு திருப்பத்தை எதிர்பார்க்கலாம்.




No comments:

Post a Comment